குடும்ப பொருளாதாரம் மற்றும் போசாக்கினை மேம்படுத்தும் நோக்கோடு திவிநெகும வாழ்வின் எழுச்சியின் 6 ஆம் கட்ட மண்முனை வடக்கு பிரதேச நிகழ்வு கல்லடியில் உள்ள சமுர்த்தி பயனாளியின் வீட்டுத் தோட்டத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்றது.மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வெ. தவராஜா, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பூ.பிரசாந்தன், திட்ட உதவிப் பணிப்பாளர் எஸ். ஜயதீஸ், திவிநெகும தினைக்கள உத்தியோகத்தர்கள் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.இதன் போது அதிதிகள் தோட்டத்தில் மரங்களை நட்டதோடு வீட்டுத் தோட்ட விதைகள், மரக்கன்றுகள், என்பனவற்றை சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.இறுதியில் அதிதிகள் வீட்டத் தோட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட பழங்கள் மற்றும் மரக்கறிகளை பார்வையிட்டதோடு தோட்டத்ததையும் பார்வையிட்டு பயனாளியை உற்சாகப்படுத்தினர்.நாடுமுழுவதிலுமுள்ள 25 இலட்சம் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வாழ்வின் எழுச்சி தேசிய திட்டம் -2014 ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.