10/13/2014

| |

யாழ்தேவி ரயில் சேவை, 24 வருடங்களுக்கு பின்னர்

2ஆம் அத்தியாயம்...1990ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வரையான யாழ்தேவி ரயில் சேவை, 24 வருடங்களுக்கு பின்னர், இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்து, சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் சென்றடைந்தது. 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், இந்த உத்தியோகபூர்வ சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், புனர்நிர்மாணம் செய்யப்பட்ட யாழ்ப்பாண புகையிரத நிலையத்தையும்  ஜனாதிபதி சற்றுமுன்னர் திறந்துவைத்தார். 

பளை ரயில் நிலையத்திலிருந்து இன்று முற்பகல் 10.09 சுபமுகூர்த்த வேளையில், யாழ்தேவியில் ஏறி அமர்ந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர், ஆயிரக்கணக்கான மக்களுடன் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தனர். 

இந்திய அரசின் நிதியுதவில் இலங்கை ரூபாய்ப்படி 10,400 கோடி ரூபாய் செலவில், யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்ட நிலையில், யாழ்தேவி தனது உத்தியோகபூர்வ பயணத்தை இன்று மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.