10/11/2014

| |

பிரான்ஸ் எழுத்தாளர் மோதியானோவுக்கு 2014 இலக்கிய நோபல் பரிசு

நினைவின் கலையைக் கொண்டு அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள இயலாத மானுட சூழ்நிலைகளை இவர் சித்திரப்படுத் தியதற்காகவும், பிரான்ஸ் நாட்டை ஜெர்மனி ஆக்கிரமித்த காலகட்டத்தின் வாழ்வுலகத்தை படைப்பு பூர்வமாக வெளிப்படுத்தியதற்காகவும் இவருக்கு இலக்கிய நோபல் பரிசு வழங்கப்படுகிறது” என்று நோபல் அகாடமியின் செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
பெட்ரிக் மோதியானோ, ஜூலை 30, 1945 ம் ஆண்டு பாரிஸ் புறநகர்ப் பகுதியில் பிறந்தார். இவரது தந்தை ஒரு தொழிலதிபர் தாயார் ஒரு நடிகை 1968 ம் ஆண்டு இவர் பிரெஞ்ச் மொழியில் எழுதிய நாவல் ஒன்றின் மூலம் பிரெஞ்ச் இலக்கிய விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இவரது படைப்புகளில் நினைவு, மறதி, அடையாளம் மற்றும் குற்றவுணர்ச்சி ஆகியன பிரதான கருவாக விளங்கி வந்தது. பெரும்பாலும் பாரீஸ் நகரத்தை மையமாக வைத்தே இவரது படைப்புக்கள் பின்னப்பட்டுள்ளன.
சொந்த வாழ்வின் தாக்கமும், ஜெர்மனி ஆக்கிரமிப்புக் காலகட்டத்தில் வாழ்க்கையின் தாக்கமும் இவரது எழுத்துக்களில் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன. இவர் வாழும் நகரமும் அதன் வரலாறும் இவரது எழுத்துக்களில் பல்வேறு வடிவங்களில் சித்திரம் பெற்றுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். சில கதாபாத்திரங்கள் பல்வேறு படைப்புகளில் மீண்டும் நடமாடுவார்கள். அதேபோல் படைப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று கூறப்படுகிறது. பிரெஞ்ச், ஆங்கில மொழிகளில் 30க்கும் மேற்பட்ட நூல்களை இவர் படைத்துள்ளார். இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெறும் 111 வது எழுத்தாளர் பெட்ரிக் மோதியானோ என்பது குறிப்பிடத்தக்கது.