10/11/2014

| |

20,000 குடும்பங்களுக்கு நாளை காணிகள் பகிர்ந்தளிப்பு காணிகள் கையளிக்கப்பட வேண்டுமென்ற வட மாகாண தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட பிராந்திய மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக காணி உரிமையற்ற 20 ஆயிரம் குடும்பங்களுக்கு நாளை (12) ஜனாதிபதியினால் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட இருப்பதாக பிரதி காணி அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார். 28 பிரதேச செயலகங்களில் வாழும் மக்களுக்கு இவ்வாறு காணிகள் வழங்கப்படுகின்றன.
இதேவேளை வடக்கில் இராணுவத்தின் பிடியிலுள்ள பொதுமக்களின் காணிகளை இந்த வருட இறுதிக்குள் மீள கையளிக்கவேண்டும் என்று வட மாகாண சபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் வட மாகாண சபையில் யாப்புக்கு முரணான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்ட அமைச்சர், தேசிய பாதுகாப்பிற்காகவே தனியார் காணிகள் சுவீகரிக்கப்படுவதாகவும் தேசிய பாதுகாப்பு விடயத்தில் எதுவித இணக்கப்பாடும் கிடையாது என்றும் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அமைச்சர்கள் இதனைத் தெரிவித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த காணி பிரதி அமைச்சர் சிறிபால கம்லத்; நல் லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக் கமைய வடக்கு கிழக்கு மாகாண காணி பிரச்சினைகளுக்கு தீர்வுகாண விசேட திட்டம் முன்வைக்கப்பட்டது. இதற்காக காணிக் கச்சேரிகள் நடத்தப்பட்டு காணி அனுமதியற்ற குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்க திட்டமிடப்பட்டது.
மன்னாரில் 7202 குடும்பங்களுக்கும் வவுனியாவில் 4228 குடும்பங்களுக்கும் கிளிநொச்சியில் 3886 குடும்பங்களுக்கும் முல்லைத்தீவில் 3642 குடும்பங்களுக்கும் யாழ்ப்பாணத்தில் 1001 குடும்பங்களுக்கும் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன என்றார். இதேவேளை வட மாகாண சபை தீர்மானம் குறித்து எழுப் பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,
வட மாகாண சபையில் யாப்புக்கு முர ணான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டுள்ளன 13ஆவது திருத்தத்துக்கு உட்பட்ட தாகவே அவற்றின் தீர்மானங்கள் இருக்க வேண்டும். ஆனால் தேசிய பாதுகாப்பிற்கா கவே இராணுவம் காணிகளை கையேற்கிறது என்றார்.
வடக்கு அதிவேக பாதை
வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் என்டேரமுல்லையில் இருந்து கலகெதர வரையான வீதியை 8 பகுதிகளாக பிரி த்து நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரம்புக்கன, கலகெதர இடையிலான 18 கிலோ மீட்டர் தூர பகுதிக்காக 19 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட இருப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரி வித்தார். தற்பொழுது காணிகளை அடையாளங்கண்டு சுவீகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
என்டேரமுல்லை வெயங்கொட (28 கி. மீ), வெயங்கொட மீரிகம (16 கி. மீ), மீரிகம- நாகலகமுவ (18 கி.மீ) நாகலகமுவ- எலகொலதெனிய (20 கி. மீ) எலகொலதெனிய -மெத்தகெடிய (16.9 கி.மீ) மெத்தகெடிய - கலேவல (19 கி. மீ) பொதுஹர- ரம்புக்கன (17.5 கி.மீ) ரம்புக்கன - கலகெதர (18 கி.மீ) என பிரித்து தனித்தனியாக ஒப்பந் தக்காரர்களுக்கு வழங்கப்பட உள்ளது என்றார்.