சுவிஸ்சர்லாந்தில் பேர்ன் நகரில் 1874இல் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே அஞ்சல் தினமாக கொள்ளப்படுகின்றது. 1969 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றியக் கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 09ம் திகதி சர்வதேச அஞ்சல் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
பொது மக்களுக்கு தேவையான உன்னத சேவையினை அஞ்சல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. கடிதங்களை அவர்களது வீட்டு வாசலுக்கு சென்று ஒப்படைக்கும் ஒரு மேலான பணியினை அஞ்சல் திணைக்களம் நிறைவேற்றி வருகின்றது.
குறிப்பாக மனிதர்களுக்கு மத்தியில் உறவுகளை வளர்ப்பதற்கு அஞ்சல் சேவை முன் உதாரணமாக திகழ்கின்றது. கவியரசர் கண்ணதாசன் தனது கவிதை வரிகளில் அஞ்சல் சேவையினைப் பற்றி மிக அழகாக குறிப்பிட்டுள்ளார். “ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவையிது வாழ்வை இணைக்கும் பாலமிது” என உயர்வாக குறிப்பிட்டார்.
நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் எத்தனை வந்தாலும் அஞ்சல் மூலம் கிடைக்கப் பெறும் உறவுப் பரிமாற்றங்களுக்கு வேறு எதுவும் இணையாகாது.
அந்த நாட்களிலும் சரி இன்றும் சரி தபால் சேவகர்களை காண்பதற்கும் அவரது சைக்கிள் மணி ஓசையினை கேட்பதற்கும் பலர் இல்லங்களில் ஆவலாய் காத்திருந்தனர், இருக்கின்றனர் மழையிலும் வெயிலிலும் தனது கடமையினை செய்வதற்கு தபால்சேவகர்கள் தவறியதில்லை.
அந்த நாட்களிலும் சரி இன்றும் சரி தபால் சேவகர்களை காண்பதற்கும் அவரது சைக்கிள் மணி ஓசையினை கேட்பதற்கும் பலர் இல்லங்களில் ஆவலாய் காத்திருந்தனர், இருக்கின்றனர் மழையிலும் வெயிலிலும் தனது கடமையினை செய்வதற்கு தபால்சேவகர்கள் தவறியதில்லை.
கைலஞ்சம், ஊழலற்ற கௌரவமான மக்கள் சேவையே இந்த அஞ்சல் சேவையாகும் இத்தருணத்தில் அனைத்து அஞ்சல் திணைக்களகங்களையும் அஞ்சல் சேவைக்காக தங்களை அர்ப்பணித்தவர்களையும், அர்ப்பணிக்கின்றவர்களையும் வாழ்த்துகின்றேன்.