10/31/2014

| |

மண்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவிப்பு.

பதுளை கொஸ்லந்தை மீரியபெத்த மண்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவிப்பு.
கொஸ்லந்தை மீரியபெத்த மண்சரிவில் சிக்கி உயிர் மற்றும் உடமையை இழந்து நிக்கதியாகியுள்ள மக்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களிலும் பங்கேற்பதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.
2004ம் ஆண்டு சுனாமிப் பேரலையின் கோரத்தாண்டவத்திற்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட இயற்கையின் பெரும் கோரத்தாண்டவமாக இதனை நோக்க முடியும். தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இன்றைய நிலையில் ஓர் அனர்த்தம் ஏற்படுவதற்கான முன் எச்சரிக்கைகளை விடுத்தோம் ஆனால் அவர்கள் விலகிச் செல்லவில்லை என்பது போன்ற காரணங்களை கூறுவதை விடுத்து காரியங்களில் ஈடுபடுவதே அதிகாரிகளின் பொறுப்பாகும். இலங்கையின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் தோட்ட தொழிலாளர்களின் இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க தவறிய அதிகார வர்க்கமே இந்த இழப்புகளுக்கு பொறுப்பானவர்கள் ஆகும்.
பாரிய அனர்த்தங்கள் இடம்பெற்ற பிற்பாடு காரணங்களை ஆராயாது பெறுமதி மிக்க மனித உயிர்ரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது போன்ற அனர்த்தங்களால் தொடர்ந்தும் பாதிப்புக்கள் ஏற்படா வண்ணம் அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட இடங்களில் இருக்கின்ற மக்களை பாதுகாப்பான இடங்களில் குடி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கோரியிருக்கின்றது.
»»  (மேலும்)

10/30/2014

| |

பிரான்சில் மருத்துவ கலாநிதி பட்டம் பெறும் இலங்கை வம்சாவளி தமிழ் பெண்ணான கார்த்திகா ஆறுமுகம்!

garthiga-arumugamபிரான்சின் தலைநகர் பாரிசில் வாழ்ந்துவரும் இலங்கை வம்சாவளி தமிழ் பெண்ணானகார்த்திகா ஆறுமுகம் தனதுஇருபத்தியாறாவது வயதில்மருத்துவத்துறையில் கலாநிதிபட்டத்தை பெறுகின்றார். ( Sciences de la Vie et de la santé Spécialité: Biomolécules, Biologie structurale et thérapeutiques) இவர் பாரிஸ்-7ல் அமைந்துள்ள டிடெரொட் பல்கலைகழகத்தில் (Universite Paris Diderot- Paris 7 Ecole Doctorale : Biochimie, Biothérapies, Biologie Moléculaire et Infectiologie (B3MI) தனது பட்டப்படிப்பையும் கலாநிதிபட்டத்துக்கான ஆய்வினையும் செய்து முடித்துள்ளார். இவருக்கான பட்டமளிப்புவிழா  28 ஒக்டோபர் 2014அன்று இடம் பெற்றது. 1981 ஆண்டு தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்து பிரான்சில் தஞ்சமடைந்த இவரது தந்தையார் குமாரசாமி ஆறுமுகம்யாழ்ப்பாணம் காரைநகரை பூர்வீகமாகவும் .  இவரது தாயார் யாழ்ப்பாணம் தாவடியைபிறப்பிடமாகவும் கொண்டவர்களாகும்.
இலங்கையின் இடதுசாரி அரசியல்வாதிகளான வாசுதேவ நாணயக்கார, டியு குணசேகர, திஸ்ஸவிதாரண போன்றவர்களுடன் நீண்டகாலமாக உறவை பேணிவரும் இவரது தந்தை ஆறுமுகம் பிரான்சிலும் தொழில்சங்கவாதியாகவும், பாட்டாளிகளின் போராட்டம்  (lutte ouvrière)எனப்படும் இடதுசாரி கட்சியின் சார்பில் பாரிஸ் மாநகர சபைக்கான தேர்தல்களில் போட்டியிட்டும் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை சலசலப்பு இணையத்தளத்தின் ஆசிரியராகவும்ஈ.பி.டி.பி கட்சியின் சர்வதேச ஆலோசகர்களில் ஒருவராகவும் இவரது தந்தை செயலாற்றி வருபவராகும்.
»»  (மேலும்)

| |

ஜனாதிபதி மஹிந்த ரஜாபக்ஷ அவர்கள் கொஸ்லந்த நிலச்சரிவால் இடம்பெயர்ந்த மக்களை சற்றுமுன்னர் சந்தித்தார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிலசரிவால் பாதிப்புற்ற மக்களை சென்று பார்வையிட்டார்.இராணுவத்தினர் களப்பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Photo de Mahinda Rajapaksa.







»»  (மேலும்)

| |

மலையகத் தமிழர்களை மீட்கவும்! -கோமாளி கோபால் சாமி

நிலச்சரிவில் சிக்கியுள்ள மலையகத் தமிழர்களை மீட்கவும், உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், நிவாரண உதவிகள் வழங்கவும் இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. நேற்று மீரியபெத்த பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவு சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
»»  (மேலும்)

| |

கே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு - இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் பங்கேற்க இந்திய பயணம்



மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் முன்னாள் தேசியத் தலைவரும், மனித உரிமைப் போராளியுமான மறைந்த கே.ஜி.கண்ணபிரான் அவர்களின் நினைவு சொற்பொழிவு வரும் 9.11.2014 ஞாயிற்றுக்கிழமை, சென்னை, தி.நகரில் திருமலைப் பிள்ளை சாலையில் உள்ள வித்யோதா பள்ளி அரங்கில் காலை 11 மணியிலிருந்து 1 மணி வரை நடைபெற உள்ளது.
இச் சொற்பொழிவு நிகழ்வில் இலங்கையின் வடக்கு மாகாண முதல்வரும், முன்னாள் இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதியுமான திரு.விக்னேஸ்வரன் “பாதுகாப்பையும், இறையாண்மையையும் பாதுகாத்தல்” (SAFEGUARDING SECURITY AND SOVEREIGNTY) என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்.
மறைந்த கே.ஜி.கண்ணபிரான் அவர்களுக்கு மரியாதையினை செலுத்தும் வகையிலும், மேலும் அசாதாரண‌ சூழலில் இலங்கையின் வடக்கு மாகாண முதல்வராகப் பதவியேற்ற பின் இந்தியாவில் நீதிபதி விக்னேஸ்வரன் பங்கேற்கும் முதல் நிகழ்வாகவும் இந்த நிகழ்வு அமைய உள்ளது.

»»  (மேலும்)

| |

6 லயன்கள் புதையுண்டன: 400 பேர் மாயம்

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய  மண்சரிவு காரணமாக 6 லயன் குடியிருப்புகள் மண்ணுக்குள்  புதையுண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மீரியபெத்தையில் ஆற்று பள்ளத்தாக்கை அண்மித்தாக உள்ள 7,8,9,10,11 மற்றும் 12ஆம் இலக்க லயன் குடியிருப்புக்களே  மண்ணில் புதையுண்டுள்ளன.

7ஆம் இலக்க லயனில் 8 வீடுகளும் 8ஆம் இலக்க லயனில் 16 வீடுகளும் 9ஆம் இலக்க லயனில் 20 வீடுகளும் 10ஆம் இலக்க லயனில் 10 வீடுகளும் 11ஆம் இலக்க லயனில் 6 வீடுகளும் 12 ஆம் இலக்க லயனில் 6 வீடுகளும் இருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பால் சேகரிக்கும் நிலையங்கள் இரண்டு, வாகனங்கள் திருத்தும் இடம், இரண்டு கடைகள், மருத்துவமாது குடும்பம் தங்கியிருந்த விடுதி, சாரதியின் வீடு, சிகிச்சை நிலையம் மற்றும் கோவில் ஆகியனவும் மண்ணில் புதையுண்டுள்ளன.

இவற்றில் தங்கியிருந்தவர்களும் மேலே குறிப்பிட்ட  66 குடும்பங்களைச் சேர்ந்த  சுமார் 400 பேர் காணாமல் போயிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மண்சரிவு இன்று புதன்கிழமை காலை 7 மணிக்கும் 7.30க்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என்று  முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டமையால், பலர் பாதுகாப்பான இடங்களுக்கு முன்கூட்டியே இடம்பெயர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனால், மண்ணில் புதையுண்டவர்களின் எண்ணிக்கையை சரியாக கூறமுடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அந்தக் குடியிருப்புக்களில் வசித்த பாடசாலை மாணவர்கள் பலர் இன்று காலையிலேயே மீரியபெத்த பாடசாலைக்கு சென்றுவிட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்த பலர் தங்களுடைய உடமைகளை எடுப்பதற்காக இன்று காலை அங்கு சென்றிருந்த போதே இந்த அனர்த்தத்தில் சிக்கிகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை தேடும் பணியில் முப்படையினரும் இலங்கை விமானப்படையின் விசேட ஹெலிகொப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது.

அத்துடன், பதுளை, பண்டாரவளை உள்ளிட்ட பிரதான வைத்தியசாலைகளின் வைத்தியர்கள், தாதியர், மருத்துவ குழு மற்றும் நோய்காவு வண்டிகளும் அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை , மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அதில் சிக்குண்டுள்ள மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு பணித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதியின் விசேட பணிப்பின் பேரில், விமானப்படைக்கு சொந்தமான விசேட ஹெலிகெப்டர் மூலமாக ஸ்தலத்துக்கு விரைந்துள்ளார்.

அதுமட்டுமன்றி, ஜனாதிபதியின் ஆலோசகரும் ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அரவிந்த குமாரும் ஸ்தலத்துக்கு விரைந்துள்ளார்.




»»  (மேலும்)

10/28/2014

| |

மக்கள் நலத் திட்டங்களை நிராகரித்து வடமாகாண சபை எல்லை மீறுகிறது

* மீண்டுவரும் செலவாக 13,650 மில்லியன் ரூபா, மூலதன செலவாக 1876 மில்லியன் ரூபா இவ்வருடம் ஒதுக்கீடு
* ஒதுக்கிய நிதிகளை பயன்படுத்தாது திண்டாட்டம்: மாகாணசபையுடன் தொடர்பற்ற 150 தீர்மானங்கள் இதுவரை நிறைவேற்றம்
மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராஜh குற்றச்சாட்ட
வடமாகாண சபை கடந்த வருட பதவிக்காலப் பகுதியினுள் வடபகுதி மக்களுக்கு உருப்படியாக எதனையும் சாதிக்கவில்லை. ஒதுக்கப்பட்ட நிதியிலும் கடந்த 10 மாதகாலத்தினுள் 25.71 வீதம் மட்டுமே செலவிடப்பட்டிருப்பதாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராஜா தெரிவித்தார்.
கடந்த ஒரு வருடகாலத்தில் வட மாகாண சபையில் மாகாண சபையுடன் தொடர்பற்ற சுமார் 150 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ள்ளதாக குறிப்பிட்ட அவர் தமக்கு ஒதுக்கும் பணத்தை பயன்படுத்தாமல் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராஜா ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் அவர் தெரி வித்ததாவது,
இந்த வருடத்தில் வட மாகாண சபைக்கு மீண்டுவரும் செலவினமாக 13,650 மில்லியனும் மூலதன செலவாக 1876 மில்லியனும் ஒதுக்கப்பட்டது. இவற்றில் 25 வீதமே செலவிடப்பட்டிருக்கிறது.
நாட்டிலுள்ள ஏனைய 7 மாகாண சபைகள் கடந்த 25 வருடங்களாக இயங்கி வருகின்றன. மக்கள் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் வட மாகாண சபைக்கே கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர மத்திய அரசாங்கமும் வட மாகாண சபைக்கு பெருமளவு நிதியை செலவிடுகிறது. வடக்கில் 18 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரிய விகிதாசாரம் காணப்படுகிறது. ஏனைய மாகாணங்களில் 19.1 என்ற அடிப்படையே காணப்படுகிறது.
வட மாகாண சபைக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தினூடாக நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து ஆராய திறைசேரி செயலாளர் வடக்கிற்கு சென்ற போது முதலமைச்சரும் ஏனைய அமைச்சர்களும் அந்த கூட்டத்தை பகிஷ்கரித்தனர். ஆனால், அரசாங்கம் வடக்கிற்கு எதுவும் வழங்கு வதில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடந்த ஒரு வருடத்தில் ஒதுக்கிய பணத்தை கூட முழுமையாக பயன்படுத்தாமல் தமது இயலாமையை மறைப்பதற்காக அரசின் மீது த.தே.கூ. பழிசுமத்துகிறது. ஆனால் எந்தப் பிரச்சினையுமின்றி அரசாங்க செலவில் புத்தம் புது வாகனங்களை மட்டும் முதலமைச்சரும், அமைச்சர்களும் வாங்கியுள்ளனர். இதனை மட்டும் கேட்டு வாங்கத் தெரிந்த த.தே.கூ. ஏனைய மக்கள் நல விடயங்கள் குறித்து வாய் திறக்காதுள்ளது.
இந்த ஒரு வருட பதவிக்காலத்தில் த.தே.கூ என்ன செய்தது என்பது குறித்து விவாதிக்க வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன். இதற்கு முன்னரும் இவ்வாறு முதலமைச்சருக்கும் மாகாண அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்தாலும் யாரும் அதற்கு தயாராக இல்லை.
ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்கள் தலைமையில் நடைபெறும் முக்கிய கூட்டங்களை ஏதாவது காரணம் கூறி பங்குபற்றாமல் தவிர்க்கும் இவர்கள் மக்களை உணர்ச்சி பூர்வமாக பேசி ஏமாற்றி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 ஆயிரம் காணி உறுதிகள் வழங்கப்பட்டதையும் கூட த.தே.கூட விமர்சிக்கிறது. நீதிமன்றம் கூட செல்லத் தயாராகியுள்ளது. ஆனால் வடக்கில் காணி பகிர்வதற்கு வடக்கு காணி ஆணையாளர் அதில் கையொப்பமிட்டி ருக்கிறார்.
கீழ்த்தரமான ஊடக விளம்பரத்திற்காக த.தே.கூ. வட மாகாண சபையை பயன்படுத்துகின்றது. வட மாகாண சபையில் கடந்த ஒரு வருடத்தில் ஜெனீவா மற்றும் மாகாண சபைக்கு அதிகாரமில்லாத விடயங்கள் பற்றிய தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டன.
இவையெல்லாம் ஊடகங்களினூடாக விளம்பரம் பெறவே செய்யப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இயங்கும் பெரும்பாலான ஊடகங்கள் அவர்களுக்கு சார்பாகவே இயங்குகின்றன. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரும் இவர்கள் இருக்கும் அதிகாரத்தை கூட பயன்படுத்தாதுள்ளனர்.
13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபை தொடர்பான 37 விடயங்களில் சாலை பொலிஸ் அதிகாரங்கள் தவிர 35 விடயங்கள் இருக்கின்றன. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதை நாமும் வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் வட மாகாண சபைக்கு கிடைத்துள்ள அதிகாரத்தை கூட பயன்படுத்தாமல் அரசை குறை கூறுகிறது.
இராணுவத்தை வடக்கிலிருந்து வெளியேற்றுவதாக த.தே.கூ. கூறினாலும் மாகாண சபைக்கு அந்த அதிகாரம் கிடையாது. இது அரசியல் லாபம் பெற மக்களுக்கு அளித்த வாக்குறுதி மட்டுமே இராணுவத்தின் பிடியிலிருந்து 126 சதுர கிலோ மீற்றர் காணியில் 55 சதுர கிலோ மீற்றரே எஞ்சியுள்ளது.
இராணுவத்திடமிருந்த வீடுகளில் 647 வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன. அவற்றையும் மீள வழங்க வேண்டும் என்று நாமும் கோரி வருகின்றோம். த.தே.கூ. அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
»»  (மேலும்)

10/27/2014

| |

பிரான்ஸ் பாடுமீன் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கொண்ட குழு அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டை தளமாக கொண்டு செயற்படும் பாடுமீன் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கொண்ட  குழு.திரு.செல்வம் அவர்களின்  தலைமையில் அம்பாறைக்கு  பொத்துவில் மெ.த.மகாவித்தியாலத்துக்கு நேற்று  விஜயம்செய்யதுள்ளனர். 


அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில்,பாணம,தாண்டியடி,கோமாரி ,ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய மாணவர்கள் நடைபெற்று கொண்டிருக்கும்  இலவச வகுப்பில் கலந்துகொள்கிறார்கள்.மாணவர்களின்  கல்வி மற்றும் போக்குவரத்து  குறைபாடுகள் பற்றி அறிந்துகொண்டதுடன் சில மாணவர்களுக்கு போக்குவரத்து வதியும்  இவர்களினால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. புலத்தில் வாழும் எமது சகோதரர்கள் பின்தங்கிய பிரதேச மாணவர்களின் கல்வி முனேற்றத்துக்கு  கைகோர்த்து உதவமுன்வர வேண்டும் என்ற  கோரிக்கையை மாணவர்களினால்  முன்வைக்கப்பட்டது.

 

»»  (மேலும்)

10/26/2014

| |

அனகாரிக தர்மபாலவுக்கு இந்தியாவில் முத்திரை

 .பௌத்த சமயத்தின் இரண்டு முக்கியமான அம்சங்களைத் 20 ஆம் நூற்றாண்டில் தொடக்கி வைத்ததில் முன்னணியில் வகித்தவரும், எழுத்தாளருமான அனகாரிக தர்மபாலவின் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரை, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான சாஸ்திரி பவனில் வைத்து இன்று சனிக்கிழமை  வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது
»»  (மேலும்)

10/24/2014

| |

பழம்பெரும் தமிழ் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார்.

பழம்பெரும் தமிழ் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வெள்ளியன்று காலமானார். அவருக்கு வயது 87
.தமிழ் திரையுலகில் பராசக்தி திரைப்படம் மூலம் பிரபலமடைந்த இவர், ரத்தக் கண்ணீர், ரங்கூன் ராதா, சிவகங்கைச் சீமை போன்ற நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இலட்சிய நடிகர் என்று அவர் பிரபலமாக அறியப்பட்டார்.
கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் தமிழக அரசியலில் இருந்து செயல்பட்டார்.
பின்பு அரசியலிருந்து ஓய்வுபெற்ற அவர், திரையரங்கு, படப்பிடிப்பு ஸ்டூடியோ மற்றும் ஒலிப்பதிவு தியேட்டர் ஆகியவற்றை நிறுவி நிர்வாகித்து வந்தார்.
நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி வெள்ளியன்று காலை உயிரிழந்தார்.
அவரது உடல் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இவரது மறைவிற்கு பல அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
»»  (மேலும்)

| |

இலங்கையின் மிகச்சிறந்த நூல் நிலையத்துக்கான விருதுக்காக மட்/பேத்தாழை நூலகம் தெரிவாகியுள்ளது.

இலங்கையின் மிகச்சிறந்த நூல் நிலையத்துக்கான விருதுக்காக   மட்/பேத்தாழை நூலகம்  தெரிவாகியுள்ளது. அதன்படி இலங்கையின் பிரதேசசபைகளால் நடத்தப்படும் நூலகங்களுள் முதன்மையானதாக செயல்படும் நூலகங்களுக்கு  வழங்கப்பட்டுவரும்  சுவர்ண புரவர விருது இந்நூலகத்துக்கு கிடைத்துள்ளது. 2013ம் ஆண்டுக்கான தனது திறமையான சேவைக்காகவே இவ்விருது வழங்கப்படுகின்றது.
மேற்படி நூலகம் கடந்த கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதல்வர் சந்திரகாந்தனின் அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த நூல் நிலையமானது சிறந்த இலக்கிய, வரலாற்று,அரசியல்,  நூல்களை கொண்டு வாசகர்களுக்கு மிகச்சிறந்த சேவையை ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
»»  (மேலும்)

10/23/2014

| |

'மலையக வீடு, காணி உரிமையில் தலைவர்களுக்கு அக்கறை இல்லை'

இலங்கையில் புதிய வரவுசெலவுத் திட்டத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கிறார்.
இதனிடையே, கடந்த வரவுசெலவுத் திட்டத்தின்போது, மலையக மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்த போதிலும், அதற்கான பணிகள் எதுவும் இன்னும் உறுதியாக முன்னெடுக்கப்படவில்லை என்று சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள், அந்த மக்களின் வீட்டுப் பிரச்சனையை தேர்தல் கால பிரசாரங்களுக்காக மட்டுமே தொடர்ந்தும் பயன்படுத்திவருவதாக மலையக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சக்திவேல் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
மலையக அரசியல்கட்சிகள் மத்தியில் தொழிலாளர்களுக்கான காணி உரிமை பற்றியும் வீடமைப்பு பற்றியும் தெளிவான நிலைப்பாடுகள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பெரும்பான்மை சிங்கள சமூகத்தைப் போல மலையகத் தொழிலாளர்களுக்கும் அரசாங்கம் காணிகளை பகிர்ந்தளிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை அரசியல் தலைவர்கள் மத்திய அரசிடம் முன்வைக்க வேண்டும் என்றும் அருட்தந்தை சக்திவேல் கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த ஆண்டு வரவுசெலவுத் திட்ட உரையின் போது, மலையக மக்களுக்காக 50 ஆயிரம் அடுக்குமாடி வீட்டுத் திட்டத்தை அறிவித்தார்.
ஆனால், தொழிலாளர் குடும்பங்களுக்கு அடுக்குமாடி வீடுகளுக்கப் பதிலாக தனித்தனி காணிகளுடன் வீடு அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் என்று சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.
இதனிடையே, மலையக தமிழ்க் குடும்பங்களுக்கு காணியுடன் கூடிய மாடிவீடுகளே அமைத்துக் கொடுக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சில மாதங்களுக்கு முன்னர் உறுதியளித்திருந்தார்.
50- ஆயிரம் வீடமைப்புத் திட்டம் இரண்டு மாதங்களுக்குள் தொடங்கப்பட்டுவிடும் என்று கடந்த ஏப்ரல் மாதத்தில் அமைச்சர் தொண்டமான் தமிழோசையிடம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

2015: வரவு செலவுத் திட்டம் நாளை சபையில் சமர்ப்பிப்பு 26 நாள் விவாதம்;; தினமும் எட்டு மணி நேர அமர்வு

2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாளை சுபநேரத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.
இதனையொட்டி இன்றும், நாளையும் பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு எம்.பிக்களின் ஓய்வு அறைகள் அலுமாரிகள் என்பனவும் சோதனையிடப்பட இருப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். நாளை வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின் சனிக்கிழமை முதல் (25 ஆம் திகதி) டிசம்பர் 22 வரை பாராளுமன்ற விவாதங்கள் இடம் பெறவுள்ளன.
ஒக்டோபர் 25 முதல் நவம்பர் முதலாம் திகதி வரை முதலாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. முதலாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் முதலாம் திகதி மாலை 5.00 மணிக்கு இடம்பெறும்.
இதேவேளை நவம்பர் 3 ஆம் திகதி முதல் குழுநிலை விவாதம் ஆரம்பமாகிறது. இதில் சிரேஷ்ட அமைச்சுக்கள் (விசேட அலுவல்களுக்கான செயலகம்) அடங்கலாக 23 அமைச்சுகள் மீதான விவாதம் ஒரே தினத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
வரவு செலவுத்திட்ட விவாதங்கள் தினமும் 8 மணி நேரம் நடைபெற இருப்பதோடு ஒவ்வொரு செலவுத் தலைப்பிற்கும் 2 மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நவம்பர் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
»»  (மேலும்)

| |

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேரவை தேர்தல்: கோபிந்தராஜா வெற்றி

கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற பேரவை வாக்கெடுப்பில், கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவு செய்யப்பட்டார்.
P1310151உபவேந்தரை தெரிவுசெய்யும் வாக்கெடுப்பு கிழக்கு பல்கலைகழக சபா மண்டபத்தில் செவ்வாய்கிழமை (21) நடைபெற்றது.
கிழக்கு பல்கலைக்கழகத்துக்கான உபவேந்தர் நியமனத்திற்காக தகுதியு உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில் ஒன்று கூடிய பேரவை உறுப்பினர்களின் முன்னிலையில்  இத்தெரிவு இடம்பெற்றது.
நடைபெற்ற உபவேந்தர் தெரிவின்போது அதிகப்படியான 15 விருப்பு வாக்குளைப் பெற்று கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டார்.
கிழக்குப் பல்கலைக்கழக அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார் 10 வாக்குகளையும், கலாநிதி எம்.எம்.மௌசூன் 10 வாக்குகளையும் பெற்று இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்றுக்கொண்டனர்.
தகுதியுடைய 9 பேர் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த நிலையில் இறுதிக்கட்டத்தில் இரண்டு விண்ணப்பதாரிகள் விலகியிருந்தனர்.
பேரவையினால் வாக்குகளின் அப்படையில்  தெரிவுசெய்யப்பட்ட முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றவர்களின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு இறுதியாக ஜனாதிபதியினால் அடுத்த மூன்றாண்டு கால பதவிக்கான உபவேந்தர் தெரிவுசெய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

உலகின் மூன்றில் ஒரு பெண் கைதிகள் அமெரிக்க சிறைகளில்

உலக பெண் சிறைக் கைதிகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் அமெரிக்க சிறைகளில் இருப்பதாக சிறைச்சாலை ஆய்வுகளுக்கான சர்வதேச மையத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி போபஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க சிறைச்சாலைகளில் மொத்தம் 201,200 பெண் கைதிகள் உள்ளனர். இது அந் நாட்டு மொத்த கைதிகளில் 8.8 வீதமாகும். இதற்கு அடுத்து சீனாவில் 84,600 பெண் கைதிகள் உள்ளனர். இது மொத்த கைதிகளில் 5.1 வீத மாகும். ரஷ்யா மூன்றாவது இடத்தில் இருப்பதோடு அங்கு 59,000 பெண்கள் சிறைகளில் உள்ளனர். இது மொத்த கைதிகளின் சனத்தொகையில் 7.8 வீதமாகும்.
சர்வதேச அளவில் 625,000 பெண்கள் மற்றும் சிறுவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மாத்திரம் 7 மில்லியன் பேர் கைதி களாகவோ, தடுப்புக்காவலிலோ அல்ல நன்ன டத்தை காலத்திலோ அல்லது பிணையிலோ உள்ளனர். இதன்படி அமெரிக்காவில் இருக்கும் வயதுவந்த 35 பேரில் ஒருவர் கைதிகளாக உள்ளனர்.
»»  (மேலும்)

| |

க.பொ.த (சா/த) பரீட்சைகள் டிசம்பர் 09 இல் ஆரம்பம்

டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் நடை பெறவுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருடம் ஐந்து இலட்சத்து 77 ஆயிரத்து 84 பேர்  பரீட்சை எழுத தகுதி பெற்றுள்ளனர். பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணை எக்காரணத்தை கொண்டும் மாற்றப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
»»  (மேலும்)

10/22/2014

| |

வாழ்வின் எழுச்சியின் 6 ஆம் கட்ட மண்முனை வடக்கு பிரதேச நிகழ்வு

குடும்ப பொருளாதாரம் மற்றும் போசாக்கினை மேம்படுத்தும் நோக்கோடு திவிநெகும வாழ்வின் எழுச்சியின் 6 ஆம் கட்ட மண்முனை வடக்கு பிரதேச நிகழ்வு கல்லடியில் உள்ள சமுர்த்தி பயனாளியின் வீட்டுத் தோட்டத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்றது.மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வெ. தவராஜா, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பூ.பிரசாந்தன், திட்ட உதவிப் பணிப்பாளர் எஸ். ஜயதீஸ், திவிநெகும தினைக்கள உத்தியோகத்தர்கள் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.இதன் போது அதிதிகள் தோட்டத்தில் மரங்களை நட்டதோடு வீட்டுத் தோட்ட விதைகள், மரக்கன்றுகள், என்பனவற்றை சமுர்த்தி பயனாளிகளுக்கு  வழங்கி வைத்தனர்.இறுதியில் அதிதிகள் வீட்டத் தோட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட பழங்கள் மற்றும் மரக்கறிகளை பார்வையிட்டதோடு தோட்டத்ததையும் பார்வையிட்டு பயனாளியை உற்சாகப்படுத்தினர்.நாடுமுழுவதிலுமுள்ள 25 இலட்சம் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வாழ்வின் எழுச்சி தேசிய திட்டம் -2014 ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

யாழில் 'புகையிரத நகரம்': பணிகள் ஆரம்பம்

நகர அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கை புகையிரத திணைக்களத்தால்  யாழ்;.புகையிரத நிலையத்தில் 'புகையிரத நகரம்' நிர்மாணிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார்.

8.5 ஏக்கர் நிலப்பரப்பில் யாழ்.புகையிரத நிலையத்தை சுற்றி இந்த புகையிரத நகரம் நிர்மாணிக்கப்படவுள்ளது.  

யாழ்ப்பாண புகையிரத நிலையத்தின் வடக்கு பக்கமாகவுள்ள ஸ்டான்லி வீதி, தெற்கு பக்கமாகவுள்ள யாழ் புகையிரத நிலைய வீதி, கிழக்கு பக்கமாகவுள்ள இராசாவின் தோட்ட வீதி, மேற்கு பக்கமாகவுள்ள வைத்தியலிங்கம் வீதியையும் இணைத்து இந்த புகையிரத நகரம் நிர்மாணிக்கப்படவுள்ளது. 

இந்த புகையிரத நகரத்தில், வணிக அபிவிருத்தி, உள்ளக அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி செயற்றிட்டங்கள் தொடர்பான வேலைத்திட்டங்களும் பொதுமக்களுக்கு தேவையான தொடர்பாடல் வசதிகள், ரயில் பணியாளர்களுக்கான விடுதிகள், பேருந்து, வாகன தரிப்பிடங்கள், நவீன வசதிகளுடனான விடுதிகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளடங்கலாகவும் இந்நகரம் நிர்மாணிக்கப்படவுள்ளது. 

இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இந்த சுற்றாடலில் யாழ். மாநகர சபையின் அலுவலகம் நிறுவப்படவுள்ளது. இதற்காக செலவிடப்படவுள்ள நிதி தொடர்பிலான விபரங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

தேவியனின் தாய் தடுத்துவைப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீளக்கட்டியெழுப்புவதற்கு முயன்றார் என்ற குற்றச்சாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட தேவியன் என்றழைக்கப்படும் சுந்தரலிங்கம் கஜீபன் என்பவரின் தாயாரான சுந்தரலிங்கம் ரஞ்சித மலர் (வயது 57), பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவர், கனடாவை நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டு செல்வதற்கு முயன்றபோதே அரச புலனாய்வு பிரிவினரால்; தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்று செய்தி தெரிவிக்கின்றது.

யாழ்ப்பாணம், சாவக்கச்சேரியிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை காலை 1மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைதந்த அவர், அதிகாலை 4.45க்கு பயணிக்கவிருந்த கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 683 விமானத்தின் மூலம் டோஹா ஊடாக கனடாவுக்கு செல்லவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் வைத்திருந்த கடவுச்சீட்டில் ஆறுவருடங்களுக்கான கனடா விஸா குத்தப்பட்டுள்ளது.

எனினும், வைத்திருந்த ஆவணங்களில் போலியான ஆவணங்கள் இருப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள், அரச புலனாய்வு பிரிவினரின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்தே அவரது பயணம் தடுக்கப்பட்டுள்ளது என்றும் அச்செய்தி தெரிவித்துள்ளது.

அவரும், புலிகள் அமைப்பின் புதிய தலைவர் என்று சொல்லப்பட்ட கோபி உள்ளிட்ட மூவருக்கும் இராணுவத்துக்கும் இடையில் அநுராதபுரம் பதவிய காட்டுப்பகுதியில் இடம்பெற்ற மோதலில் மூவரும் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.
இதனையடுத்து தேவியனின் தாயாரான் ரஞ்சித மலர், பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இதேவேளை, கோபி என்றழைக்கப்படும் செல்வநாயகம் கஜீபனின் மனைவியான கஜீபன் சர்மிளா, ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயன்றபோது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
»»  (மேலும்)

10/21/2014

| |

அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் கோயில் கொள்ளைகளின் சூத்திரதாரி என்.ஜி.ஒ.ஒன்றின் பொறுப்பாளராக மட்டக்களப்பில் கடமையாற்றிவந்த யாழ்ப்பாணத்தவர் ஒருவரே

மட்டக்களப்பில் ஆலயங்கள் கொள்ளையிடப்பட்டது தொடர்பில் யாழ்ப்பாணம், வவுனியா,கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச்சேர்ந்த நான்கு பேரை கைதுசெய்தனர்.இதன்மூலம் அரசாங்கத்தின் மீது இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு வீசிவந்த சேறுபூசும் நடவடிக்கை பொய்யென நிரூபிக்கப்பட்டுள்ளது.இதுவரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையே தமிழ் தேசிய கூட்டமைப்பு சுமத்திவந்துள்ளது என பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோகன தெரிவித்தார். 

 களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் உள்ள குருக்கள்மடம் மற்றும் மாங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆலயங்கள் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் வட பகுதியை சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்துக்கு வருகைதந்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இது தொடர்பில் கருத்து தெரிவித்தார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு ,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் மற்றும் மாங்காடு பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவங்கள் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இந்த முறைப்பாடுகளில் ஆலயம் உடைக்கப்பட்டு 10 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தன. 

இதில் தங்க நகைகள் மற்றும் விக்கிரகங்கள் கொள்ளையிடப்பட்டது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த கொள்ளைச்சம்பவத்தினை பயன்படுத்தி அரசாங்கத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கையினை மேற்கொண்டுவந்ததுடன் இராணுவமே இதனை செய்ததாக கூறிவந்தது.அத்துடன் அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவந்தது. எனினும் இது தொடர்பில் கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தலைமையில் நிதானமாகவும் நுணுக்கமாகவும் களுவாஞ்சிகுடி பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சர், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்தனர். இதன்போது யாழ்ப்பாணம்,வவுனியா,கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச்சேர்ந்த நான்கு பேரை கைதுசெய்தனர்.

இதன்மூலம் அரசாங்கத்தின் மீது இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு வீசிவந்த சேறுபூசும் நடவடிக்கை பொய்யென நிரூபிக்கப்பட்டுள்ளது.இதுவரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையே தமிழ் தேசிய கூட்டமைப்பு சுமத்திவந்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது அவர்கள் பாவித்த கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன.தங்க பொருட்கள் கைப்பற்றப்பட்டன.இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றினை நடத்திவரும் யாழ்ப்பாணத்தினை சேர்ந்தவர்.அதன் பணிப்பாளராகவும் உள்ளார்.இவர் முன்னர் விடுதலைப்புலிகளுடன் இணைந்துசெயற்பட்டுவந்துள்ளார்.மற்றுமொருவரிடம் பெறப்பட்ட பொருட்களின் அடிப்படையில் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளராக செயற்பட்டுவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அவரிடம் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரின் சுவரொட்டிகள்,போஸ்டர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 
»»  (மேலும்)

| |

ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைக்குமாறு கொழும்பு,கோட்டை நீதவான் திலின கமகே, கொம்பனிவீதி பொலிஸாருக்கு இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

நவம்பர் மாதம் 1ஆம் திகதிக்கு முன்னதாக அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஜாதிக பல சேனாவின் முக்கியஸ்தரான வட்டரக்க விஜித்த தேரர் தாக்கல் செய்திருந்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணி மைத்திரி குணரத்னவை தூசித்தமை தொடர்பில் முறையிடப்பட்டுள்ளது.

இதனையடுத்தே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
»»  (மேலும்)

| |

வாகரையில் வாழ்வின் எழுச்சி ஆறாம் கட்ட ஆரம்ப நிகழ்வு

மகிந்த சிந்தனைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் வாழ்வின் எழுச்சி தேசிய வேலைத்திட்டத்தின் ஆறாவது கட்டம் இன்று திங்கட்கிழமை நாடெங்கிலும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
நாடெங்கிலும் உள்ள 14022 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இந்த வேலைத்திட்டங்கள் இன்று காலை 10.07மணியளவில் ஆரம்பத்துவைக்கப்பட்டன.



மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 346கிராம சேவையாளா பிரிவுகளிலும் இந்த நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.



மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகத்தின் புச்சாக்கேணியில் நடைபெற்றது.



வாகரை பிரதேச செயலாளர் செல்வி ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்                 
முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் மாகாணசபை உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவருமான சி.சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

»»  (மேலும்)

10/18/2014

| |

வடமாகாண சபை படும்பாடும் முதலமைச்சரின் பெண்களை இழிவுபடுத்தும் உரையும்

வடமாகாண சபையால் நடாத்தப்படும்நடமாடும் சேவை வவுனியா வடக்குபுளியங்குளம்  இந்துக் கல்லூரியில்17.10.2014, 18.10.2014 ஆகிய தினங்களில்காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையில்இடம்பெறுகிறது.   பலநாட்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டிய இந்த நடமாடும் சேவை வடமாகாண சபையின் நிர்வாக குழப்பம் காரணமாக இப்போதுதான் இடம்பெற்றுள்ளது.எனினும்கூட இந்த சேவையை திறம்பட நடத்த முதலமைச்சரால் முடியவில்லை.அதாவது முதலமைச்சருக்கும் பிரதம செயலாளருக்கும் இடையில் இழுபறியாக தொடரும்        அதிகார போட்டி இந்த சேவையில் உச்சத்தைதொட்டிருக்கிறது.நடமாடும் சேவைக்கு பிரதம செயலாளர்,மற்றும் பல அலுவலகர்கள் சமூகமளிக்காது பகிஷ்கரித்துள்ளனர்.இந்நிலை தொடர்ந்தால் முதலமைச்சரால்  வடமாகாண சபையை எப்படி கொண்டு நடாத்த முடியும் என அங்குவந்த மக்கள் கூரிக்கொண்டு திரும்பிசென்றிருக்கின்றனர்.


 நாட்டின் ஒரு பகுதியை கட்டியாளும் ஆளுமையுடன் செயல்பட வேண்டிய முதலமைச்சரோ அங்கு வந்து தனது செயலாளரை பற்றி குறை கூறி மக்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு நடத்தியுள்ளார்.


முதலமைச்சர் உரை 

"இன்று இங்கு சில அலுவலர்கள் வராமைக்குக் காரணம் அரசியலே. இதைத்தான் நாங்கள் ஊரறிய உலகறியக் கூறிக்கொண்டு வருகின்றோம். அரசியல் எமது நிர்வாகத்தைச் சீரழிக்கின்றது. இவர்களின் செயற்பாடு எப்படி இருக்கின்றது என்றால் கணவனைப் புறக்கணித்து அடுத்த வீட்டுக்காரனின் அரவணைப்பினுள் செயற்படும் மனைவி போல் இருக்கின்றது. அடுத்த வீட்டுக்காரன் அதிக அதிகாரங் கொண்ட அலுவலன் என்பதால் அவனை அண்டி வாழவும் கணவனைப் புறக்கணிக்கவும் எத்தனிக்கும் மனைவிமார் காலக்கிரமத்தில் தமது கடமையையும், கடப்பாட்டினையும் புரிந்து குடும்ப நன்மையை முன்வைத்து வாழ வேண்டி முற்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எமக்குண்டு. அடுத்த வீட்டுக்காரன் சலுகைகள் தருவது தன் நன்மைக்கே என்பது மனைவிக்கு காலஞ்செல்லச் செல்லப் புலனாகும். அவன் தன் காரியம் முடிந்ததும் இவளை நட்றாற்றில் விட்டு விட்டுப் போய்விடுவான் என்பதும் புரியவரும்.

கணவனாகிய நாங்கள் இப்பேர்ப்பட்ட மனைவிமார்களின் தப்பான தரங்கெட்ட நடத்தையைப் பொறுமையுடன் கவனித்து வருவோம். எமக்கு எமது குழந்தைகளே முக்கியம். அவர்களுக்காக இந்தத் தரங்கெட்ட நடவடிக்கைகளையும் கண்காணித்து ஆனால் கவனிப்போடு செயலாற்றி வருவொம். நாட்கள் மாறும்; சூழல்கள் மாறும். மனைவிமார் எம்மிடம் வந்து மன்னிப்புக் கேட்டு ஒழுங்காகக் குடும்பம் நடத்துங் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று கூறி இன்றைய இந்த நடமாடுஞ் சேவையைச் செவ்வையாக நடாத்த எல்லோர் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றேன்". 
இந்த உரை முதலில் பெண்களை இழிவுபடுத்தும் கயமைத்தனமான உரையாகும் அரசியல் தலைவர்களே இப்படி எடுத்ததற்கெல்லாம் பெண்களை கேவலப்படுத்தும் வகையில் உதாரணங்களையும்   ஒப்பீடுகளையும் வைத்து உரையாற்றினால் பெண்கள் எப்படி சமுகத்தில் மதிக்கப்படுவர்? பெண்கள் வாழ்வு எப்படி மேம்படும்.முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் ஆன்மீககுரு  பிரேமானந்தவுக்கே வெளிச்சம். 












»»  (மேலும்)