இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜப் பானிய பிரதமர் சின்ஷோ அபே நேற்றுமுன்தினம் (07/09/2014) இலங் கைக்கு வருகை தந்தார். 24 ஆண்டுகளுக்குப்பின்பு ஜப்பானிய அரசியல் தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருவது இதுவே முதற் தடவையாகும்.
இலங்கை வந்த இவருக்கு உச்சக்கட்ட வரவேற்பளிக்கப்பட்டிருக்கிறது. ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விமான நிலையம் சென்று அவரை வரவேற்றார்.
ஜப்பானின் கடனுதவியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைக் கப்படவுள்ள இரண்டு மாடி பயணிகள் அரங்கிற்கான அடிக்கல் நாட்டு விழாவில் இரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஜப்பானியப் பிரதமருக்கு ஜனாதிபதி செயலகத்தில் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன் மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன. இதன் பின்னர் இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடை பெற்றன.
இதில் பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. ஜப்பானும், இலங் கையும் கடல்சார் நாடுகள் என்ற வகையில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் சமுத்திரம் தொடர்பான விடயங்கள் குறித்து இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தையொன்றை நடத்துவது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. அதேநேரம் துறைமுகம் மற்றும் துறைமுக அபிவிருத்தி கடல்சார் கல்வி தொடர்பில் ஜப்பானின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கருத்துத் தெரிவித்தாரென கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேசிய நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பிலும் இரு தலைவர்களும் பேசியிருக்கிறார்கள். அதேநேரம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜப்பானின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் சமூகப் பயிற்சிகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டிருக்கிறது.
ஜப்பானியப் பிரதமர் அபேயின் வருகையானது இரு நாடுகளுக்குமிடை யிலான இராஜதந்திர உறவை மேலும் அதிகரித்திருக்கிறது என்றே கூற வேண்டும். உண்மையில் இதுவரை பேணப்பட்டு வந்த இராஜதந்திர உறவுகளிலிருந்து அடுத்த கட்ட வளர்ச்சி நகர்வுக்கு இவரது வருகை வழிவகுத்திருக்கிறது.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1951 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்ததாகும். 1951 இல் சான்பிரான்சிஸ் கோவில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதில் இலங்கையும் கையொப்பமிட்டதைத் தொடர்ந்து 1953 இல் ஜப்பானியத் தலைநகர் டோக்கியோவில் இலங்கை தனது தூதரகத்தை திறந்து வைத்தது.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் ஏற்பட்டு 61 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. உறவுகள் கட்டியெழுப்பப்பட்டதன் 60 வது ஆண்டு விழா 2012 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்தது. இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கலந்து கொண்டார்.
சான்பிரான்சிஸ்கோ ஒப்பந்தம் தொடர்பில் மேலே சொல்லப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஒரு விடயத்தை ஞாபகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.
1951 இல் இடம்பெற்ற சமாதான உடன்பாட்டிற்கான இந்த மாநாட்டில் பங்குபற்றிய ஒன்பது ஆசிய நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி (அப்போது நிதியமைச்சராக இருந் தார்) ஜே.ஆர். ஜெயவர்த்தன இலங்கையின் சார்பில் கலந்து கொண்டு உணர்பூர்வமான உரையாற்றியிருந்தார். புத்த பெருமானின் வார்த்தைகளை மேற்கோளிட்ட அவர், “வெறுப்பை வெறுப்பால் அழிக்க முடியாது. அன்பாலேயே முடியும்” எனத் தெரிவித்தார்.
2ம் உலக மாகா யுத்த காலத்தில் ஜப்பானால் பாதிக்கப்பட்ட நாடுகள், இழப்பீடுகளை, ஜப்பானிடமிருந்து கேட்கும் கொள்கையிலிருந்து இலங்கை விலகிக்கொண்டது. இதனை அந்த மாநாட்டில் பகிரங்கமாக அறிவித்த ஜே.ஆர். ஜெயவர்தன, சர்தேச சமூகத்தில் ஜப்பானை ஓர் உறுப்பு நாடாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். ஜப் பானைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டுமெனக் கோரிய பல நாடுகளை ஜே.ஆரின் உரையே மாற்றியமைத்ததாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஜப்பான் சர்வதேச சமூகத்தில் மீண்டும் இணைந்து கொள்வதற்கு இலங் கையே காரணமாக அமைந்ததென்ற நன்றியை இன்னும் ஜப்பான் நிலை நிறுத்தி வருகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரண்டு தடவைகள் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கிறார். 2007 ஆம் ஆண்டு டிசம்பரிலும் 2013 மார்ச்சிலும் அங்கு சென்று மாட்சிமை தாங்கிய ஜப்பானியச் சக்கரவர்த்தி, பேரரசி ஆகியோரை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
இதை விடவும் 2011 இல் கிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் ஆயிர க்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களு க்காக இலங்கை ஒரு மில்லியன் டொலர்களை அன்பளிப்புச் செய்த தோடு 3 மில்லியன் தேயிலை பைகளையும் வழங்கி உதவியது.
இவைகள் இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் வெளிப்பாடுகளாகும்.
இலங்கையின் பல்வேறு அபிவிருத்தித் தேவைகளுக்காக பல வருடங்களாக உதவிகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் உயர் சமூக அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஜப்பான் கணிசமானளவு பங்களிக்கிறது.
தொழில்நுட்ப ஒத்துழைப்பின் அடிப்படையில் கொழும்புத் திட்டத்தின் கீழ் 1954 ஆம் ஆண்டு முதல் ஜப்பான் இலங்கைக்கு நேரடி உதவிகளை வழங்க ஆரம்பித்தது.
இந்த அடிப்படையில் பார்க்கின்ற போது இலங்கைக்கு உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி (லிளிதி - லிஜீஜீiணீial ளிலீvலீlopசீலீnt திssistanணீலீ) வழங்கும் நாடுகள் பட்டியலில் ஜப்பான் முதலிடம் வகிக்கின்றது. 2012 ஆம் ஆண்டு வரைக்கும் 116.94 மில்லியன் டொலர்களை ஜப்பான் இலங்கைக்கு கடனாக வழங்கி இருக்கிறது. ஜப்பானுக்கான இலங்கையின் பிரதான ஏற்றுமதியாக தேயிலை காணப்படுகிறது. ஜப்பானிலிருந்து மோட்டார் வாகனங்களின் இறக்குமதி 45 சதவீதமாகும்.
இலங்கைக்கு வருகை தந்த ஜப்பானியப் பிரதமர் 13.717 பில்லியன் யென் களை கடனாக வழங்கியிருக்கிறார். அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான நிதியுதவி இது. ஆகவே, இவரது வருகை இருதரப்பு வர்த்தக, இராஜதந்திர உறவுகளுக்கு மேலும் பலம் சேர்ப்பதோடு திருப்புமுனையாகவும் அமைகின்றது.