9/12/2014

| |

இஸ்லாமிய தேசம் குழுவுக்கு எதிரான யுத்த திட்டத்தை அறிவித்தார் ஒபாமா

இஸ்லாமிய தேசம் குழுவுக்கு எதிராக முதல்முறை சிரியாவுக்குள் வான் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அனுமதி அளித்துள்ளார். இஸ்லா மிய தேசம் போராளிகள் எங்கு இருந் தாலும் அவர்களை அழிப்பதற்கு ஒபாமா உறுதி அளிததுள்ளார்.
ஐ.எஸ். எனப்படும் இஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்களுக்கு எதி ரான திட்டம் குறித்து கடந்த புதன் கிழமை ஒபாமா நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி ஊடே உரை யாற்றினார். அதில் ஈராக்கில் இரா ணுவ நடவடிக்கையை விரிவுபடுத்து வது மற்றும் ஈராக் அரச படைக்கு உதவியாக மேலும் 500 அமெரிக்க துருப்புகளை அங்கு அனுப்பவது குறித்த அறிவிப்பை அவர் வெளி யிட்டார்.
இதில் சிரிய ஜனாதிபதி ப'ர் அல் அஸாத் அரசு மற்றும் இஸ்லாமிய தேசம் குழுவுக்கு எதிராக போராடும் அந்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி மற் றும் ஆயுதங்களை வழங்குவதற்கு ஒபாமா கொங்கிரஸ் அவையின் அங்கீகாரத்தையும் கோரினார்.
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தீர்க்கமான நட்பு நாடான சவு+தி அரேபியா அசாத் அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு இராணுவ பயிற்சியளிக்க முன்வந் துள்ளது. சுயமாக கிளாபத் அறி வித்திருக்கும் ஜஹாத் போரா ளிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஆதரவளிக்கும்படி ஒபாமா ஏனைய நாடுகளையும் வலியுறுத்தியுள்ளார்.
"இது எமது யுத்தம் மாத்திரமல்ல" என்று ஒபாமா பிரகடனம் செய்தார்.
"அமெரிக்காவின் சக்தியால் ஒரு தீர்க்கமான மாற்றத்தை கொண்டுவர முடியும். ஆனால் ஈராக்கியர்களுக்கு எம்மால் அதனை செய்ய முடியாது. அதனை அவர்களே செய்ய வேண்டும்.
எமது இலக்கு தெளிவானது: விரிவான மற்றும் நீடித்த வான் தாக்குதல் உபாயத்தின் மூலம் நாம் ஐ.எஸ்.ஐ.எல். (இஸ்லாமிய தேசம்) குழுவை சிதைத்து இல்லா தொழிப் போம்" என்று ஒபாமா உறுதி யளித்தார்.
எனினும் ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க துருப்புகளை தரைவழி நடவடிக்கை ஒன்றுக்கு அனுப்பும் சாத்தியத்தை ஒபாமா உறுதியாக நிராகரித்தார்.
அத்துடன் யெமன் மற்றும் சோமாலியா நாடுகளில் மேற் கொள்வது போன்ற இராணுவ நடவடிக்கையையே ஈராக் மற்றும் சிரியாவிலும் முன்னெடுக்க அமெ ரிக்கா எதிர்பார்த்துள்ளது.
இஸ்லாமிய தேசம் குழு ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதியை கைப்பற்றியுள்ளது. இந்த குழு எதிரிகளின் தலையை துண்டிப்பது நூற்றுக்கணக்கான ஈராக் சிறு பான்மை மக்களை கொலை செய்வது போன்ற கொ^ரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில் ஈராக்கில் இஸ் லாமிய தேசம் இலக்குகள் மீது அமெரிக்கா அண்மையில் வான் தாக்குதல்களை ஆரம்பித்தது.
தொடர்ந்து ஈராக் மீதான தாக்கு தல்களை விரிவுபடுத்தவும் சிரியா வில் தாக்குதல்களை ஆரம்பிக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
மறுபுறத்தில் இஸ்லாமிய தேசம் குழுவுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் முயற்சியாக மத்திய கிழக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டிருக்கும் அமெரிக்க இரா ஜhங்க செயலாளர் ஜோன் கெர்ரி முக்கிய அரபு நாடுகள் மற்றும் துருக்கிக்கும் விஜயம் மேற்கொள் ளவுள்ளார்.
இதனிடையே தனது நிலப் பகுதிக்குள் தாக்குதல் நடத்தும் முன் அது குறித்து அமெரிக்கா சிரிய அரசுடன் தொடர்பை ஏற் படுத்த வேண்டும் என்று சிரிய வெளி யுறவு அமைச்சர் வலீத் முஅல்லம் குறிப்பிட்டுள்ளார். "ஆலோசனை இன்றி நடத்தப்படும் எந்த வெளி நாட்டு தாக்குதலும் ஆக்கிரமிப்பாக கருதப்படும்" என்றார்.