மழைகாலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் மட்டக்களப்பு நகரில் வாழும் பல குடும்பங்கள் இடம்பெயரும் நிலையும், அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டும் காணப்படுகின்றது.
இதை தடுக்கும் நோக்கோடு முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தனினால் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட வடிகான்களை துப்பரவு செய்தலும் மற்றும் இயற்கை நீரோடைகளை அகலப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் மண்முனை வடக்கு நகரப் பகுதிகளில் நீர் ஓடைகளை விரிவுபடுத்தும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
மண்முனை வடக்கு காத்தான்குடி எல்லைப்பகுதியில் அமைந்துள்ள தோனாவினை கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையும் இணைந்து அடையாளப்படுத்தும் பணியை மேற்கொள்ளப்பட்ட வேளையில் மஞ்சந்தொடுவாய் காத்தான்குடி எல்லை பிரதேச மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதனையடுத்து தொடர்ந்து அதிகாரிகளுக்கும், பிரதேச மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
பிரதேசத்திற்கு விஜயம் செய்த முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் அவர்களின் தலையீட்டால் இப்பிரச்சினை தீர்வுக்கு கொண்டுவரப்பட்டது. அதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துல் பறூக் முகம்மது சிப்லி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு மாநகர சபை பொறியியலாளர் அச்சுதன், மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு துறை அதிகாரிகள், பிரதேச வாழ் மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.