9/25/2014

| |

மட்டக்களப்பில் மாபெரும் தொழில் சந்தை























மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை கல்வியை பூர்த்திசெய்த மாணவர்கள் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் வகையில் மாபெரும் தொழில் சந்தையொன்று மட்டக்களப்பி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 
 
இளைஞர் விவகார அமைச்சின் ஆலோசனையின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இந்த தொழில் சந்தை நடத்தப்பட்டது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவினையும் உள்ளடக்கியதாக நடத்தப்பட்ட இந்த தொழில் சந்தையானது மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று காலை முதல் நடைபெற்றது.
 
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.என்.நைரூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
 
இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராசா சிறப்பு அதிதியாக கலந்துகொண்டதுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் உத்தியோகத்தர்களான திருமதி கலாராணி மற்றும் நிசாந்தினி அருள்மொழி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
 
இந்த தொழிற்சந்தையில் பல நிறுவனங்களும் வங்கிகளும் தங்களது கிளைகளை அமைத்திருந்தது.தொழில் வழங்குனர்களினால் நேர்முகத்தேர்வுகள் நடத்தப்பட்டன.
 
அத்துடன் தேசிய தொழில் பயிற்சி நிலையம் மற்றும் தனியார் பல்கலைக்கழங்களும் தமது சேவையினை இங்கு வழங்கியிருந்தது.
 
இந்த தொழிற்சந்தையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.