9/20/2014

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் சபை கூட்டம்

கிழக்குத் தமிழர்களின் தனித்துவத்தினை உலகிற்கு எடுத்துயம்பி கிழக்குத்தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் சபைக் கூட்டம் 2014.09.21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைமைக் காரியாயலத்தில் கட்சித் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் இடம் பெறவுள்ளது.
இக் கூட்டத்தின் போது பல முக்கிய விடயங்கள் ஆராயப்படவுள்ளதாகவும் ,தற்போது கிழக்கு மாகாணத்தில் இடம் பெற்றுவரும் வேலைவாய்ப்பு நியமனங்கள் வழங்கப்படுகின்ற நிலை என்பன தொடர்பாகவும், தற்போதைய அரசியல் சூழ்நிலை, கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் மற்றும் கட்சியின் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தொரிவித்தார்