9/11/2014

| |

இன்று பாரதி நாள்... எப்படி மறந்து போனேன்... அ.மார்க்ஸ்

(பாரதியின் நினைவு தினத்தையொட்டி பேராசிரியர் அ.மாக்ஸ் எழுதியுள்ள சில வித்தியாசமான குறிப்புக்கள் இவை நன்றியுடன் முகப்புத்தகத்திலிருந்து) 


இன்று பாரதி நாள்என்பது கூட மறந்து விட்டது. ஷோபா சக்தி உள் டப்பியில் ஷோபனா விக்னேஷின் " சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா.." வைப் பரிசளித்திருந்தபோதுதான் மனம் குறுகுறுத்தது. செப்டம்பர்11 என்றால் இரட்டைக் கோபுரத் தாக்குதல், இம்மானுவேல் சேகரனின் தியாகம், பரமக்குடி துப்பாக்கிச்சூடு என்கிற அளவில் மனம் அரசியல் வெக்கையில் மட்டும் உலர்ந்து கிடப்பதை எண்ணி மனம் சுருண்டது..

பாரதி...

என் தந்தை தன் மூத்தமகனுக்கு மார்க்ஸ் என எத்தனை கிளர்ச்சியுடன் பெயரிட்டாரோ அதே கிளர்ச்சியுடன்தான் என்மகளுக்குப் பாரதி என நான் பெயரிட்டேன். ஆனால் என் அப்பா வாய் நிறைய " மாக்ஸ்,மாக்ஸ்" என அழைப்பாரே.. அந்தப் பேறு எனக்குக் கிடைக்கவில்லை. எப்படியோ வீட்டில்அவளை "மாலி ..மாலி" என அழைக்கும் வழக்கமாகியது. பாரதி.. என அவளை இன்று வரைநான் வாய் நிறைய அழைக்கும் வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது...

பாரதி.. எத்தனைஅழகான பெயர்.

நான்  பாப்பாநாடு அரசு தொடக்கப் பள்ளியில் முதன் முதலில்ஆசிரியர் எழுதித் தந்ததை மனப்பாடம் செய்து பேசியது பாரதி பற்றித்தான். அன்று முதல் இன்று வரை நான் ஒரு  மோசமான மேடைப் பேச்சாளன்தான்..

நான் முதன் முதலில்எழுதி அச்சில் வந்த கட்டுரை பாரதியைக் கொண்டாடித்தான். அது மீனா தொகுத்த என்னைப் பற்றியமதிப்பீடுகள்  நூலின் பின்னிணைப்பாக உள்ளது.

என்னுடைய முதல்நூலும் பாரதி பற்றியதுதான். நானும் பெ.மணியரசனும் சேர்ந்து எழுதிய "பாரதி ஒருசமூகவியல் பார்வை" க்கு அன்று முன்னுரை எழுதி எனக்கும் எழுத வரும் எனச் சொன்னவர்பேராசிரியர் சிவத்தம்பி.

சிவத்தம்பி எனக்குஇன்னொரு பெருமையையும் சேர்த்தார். அவர் இணை ஆசிரியராக இணைந்து எழுதிய ஒரே எழுத்தாளன்என்கிற பெருமையையும் எனக்கு அளித்தார். அதுவும் பாரதி பற்றியதுதான். "பாரதி -மறைவு முதல் மகா கவி வரை"

அந்தத் தலைப்புஎனக்குப் பிடிக்கவே இல்லை. "பாரதிக்குப் பின் பாரதி" என்பதுதான் நான் சொன்னதலைப்பு. பேராசிரியர் அதை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

பாரதி மறைந்த பின்னும்பாரதி குறித்தும் அவரது இலக்கியத் தகுதி குறித்தும் இங்கு நடந்த விவாதங்கள் தமிழ் "நவீனமான"கதையின் மிக ஆபத்தான கூறுகள் சிலவற்றை நமக்குக் குறிப்புணர்த்தும். இன்று அரசியல் கலக்காதஇலக்கியத்தைக் கொண்டாடுபவர்களின் முன்னோடிகள் தான் அன்று பாரதியைக் கவிஞனே இல்லை எனச்சொன்னவர்கள், அவர்களை எதித்து வாதிட்டவர்கள். இரு தரப்பினருமே ஒரு அம்சத்தில் இணைந்திருந்தனர்.அரசியலைப் பேசுவதும் பாடுவதும் கவிதா மனநிலைக்கு எதிரானது என்கிற விஷயத்தில்தான்.

ஆனால் சம கால அரசியலிலிருந்து விலகியும்இலக்கியம் சாராத அம்சங்களில் ஆழ்ந்த கனமும் விசாலமான படிப்பும் இல்லாதவர்கள் உலகத்தரமான இலக்கியங்களை எழுதியதில்லை. பாரதிக்குப் பின் இன்னும் கூட பாரதிக்கு இணையான ஒருகலைஞன் யாரும் ஏன் உருவாக இயலவில்லை..  ?

இரண்டு அம்சங்கள்இதில் உள்ளன. அவன் உலக அளவில் அரசியலை நுணுக்கமாக உணர்ந்தவன். ரசியப் புரட்சியைப் பாராட்டும் அளவுக்கு. அவன் சம கால வாழ்வில் அதிகாரத்தில் இருந்தோரை நத்திப் பிழைத்து வாழாதவன்...

தந்தை பெரியாரும்கூட அதை உணர்ந்திருந்தார். ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவரது குடியரசு இதழின் முகப்புப்பக்கத்தில் பாரதியின் பாடலே கொள்கைப் பாடலாக அமைந்திருந்தது....

****************************************************************
பாரதியால் உரமும்உற்சாகமும் பெறாதவர் தமிழகத்தில் யாருளர்? தந்தை பெரியார் உட்பட?

ஜீவா, பாரதிதாசன்,அண்ணா... யாருளர்..?

எங்களின் "பாரதிமறைவு முதல் மகாகவிவரை" நூலைப் படித்துப் பாருங்கள்.. பாரதிக்குப் பிந்திய 30ஆண்டு கால இலக்கிய வரலாற்றைப் படித்துப் பாருங்கள்.

வறுமையில் வாடியபாரதியின் குடும்பம் அவரது பாடலை ஏ.வி.எம் செட்டியாரிடம் அடகு வைத்ததும், அதற்கெதிராகதமிழகம் கிளர்ந்தெழுந்ததும், இறுதியில் காமராசர் ஆணையை ஏந்தி ஒரு அரசு ஊழியர் மோட்டார்சைக்கிளில் சென்று செட்டியாரைச் சந்தித்து பாரதியின் கவிதைகளை இந்த நாட்டு மக்களுக்குஉடைமை ஆக்கியதும்....... ஆகா..

++++++++++++++++++

எத்தனை பேர், எத்தனைபேர்  பாரதியால் உரம் பெற்றவர்கள்... எத்தனையோபேர்..

உங்கள் கவனத்திற்குவராத ஒருவரைப் பற்றிச் சொல்கிறேன்...

ஜாவர் சீதாராமன்.  ஜாவர் என்பது "ஏழை படும் பாடு" திரைப்படத்தில் ஜாவராக நடித்ததால் ஒட்டிக் கொண்ட பெயர். "ஜாவர்" உலகப் புகழ்பெற்றநவீனம்- விக்டர் ஹ்யூகோவின் 'லே மிசரபிள்" இல் கதாநாயகனைத் தொடர்ந்து வரும் காவல்துறை அதிகாரியின் பெயர். அந்தப் படம் இன்று யாருக்கும் நினைவிருக்காது. ஆனால் ஜாவர்சீதாராமனின் இன்னொரு திரைப்படம் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நினைவிருக்கலாம். அது"பட்டணத்தில் பூதம்". அந்த வெற்ரிப் படத்தில் பூதமாக {ஜீ பூம் பா) நடித்தவர்சீதாராமன்.

சீதாராமன் ஒருஜனரஞ்சக எழுத்தாளரும் கூட. குமுதத்தில் அவர் எழுதிய, "உடல் பொருள் ஆனந்தி"(மாய மாளவ கவ்ரவ இராகம், நரம்பு வீணை..) எனும் பயங்கரங்கள் நிறைந்த தொடர்கதையை வாரந்தோறும்காத்திருந்து நடு நடுங்கிப் படித்த சிறுவர்களில் நானும் ஒருவன்.

அவரது பேட்டி ஒன்றும் குமுதத்தில் வந்தது. வாழ்க்கையில் பெரு வெற்றிகள் எதையும் அடைந்தவர் அல்ல அவர்.
தான் விரக்தியுற்றநேரங்களிலெல்லாம் தனக்கு ஒரே நிவாரணமாக அமைந்தது பாரதியின் பாடல்கள்தான் என்ற அவரின்அந்த பேட்டி வாசகங்கள் குமுதம் இதழின் archives ல் ஒரு வேளை எங்காவது தென்படலாம். ஜீபூம் பா...

""""""""""""""""""""""""""""""""""""""""
தமிழ்ச் சமூகத்தைநாம் வேறெதற்காக இல்லாவிட்டாலும் ஓர் அம்சத்தில் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
எத்தனை நூல்கள்,எத்தனை ஆய்வுகள்... எங்கள் பாரதி பற்றி....

பாரதியின் அற்புதக்கவிதைகளை யார்தான் பாடவில்லை. தியாகராஜ பாகதவர் முதல் டி.எம்.கிருஷ்னா வரை... யார்தான்பாடவில்லை.

ஒவ்வொருவரும் தம்கலைத் திறனை எப்படியெல்லாம் பாரதியினூடாகக் காட்டியுள்ளனர்.

பாரதியின் ஒவ்வொருபாடலும்.....

சின்னஞ் சிறு கிளியேகண்ணம்மா... செல்வக் களஞ்சியமே................

தீராத விளையாட்டுப்பிள்ளை... கண்ணன்...

தீர்த்தக் கரையினிலெ......செண்பகத்தோட்டத்திலே...

நெஞ்சில் உரமும்இன்றி நேர்மைத் திறமும் இன்றி...

பாயும் ஒளி நீஎனக்கு.. பார்க்கும் விழி நான் உனக்கு...........

இந்தப் பாடல்களையார்தான் பாடவில்லை? எந்தத் திரைப்படங்கள்தான் பயயன்படுத்தவில்லை...
ஒவ்வொருவரும் எத்தனைதனித்துவத்துடன் பாடியுள்ளனர்..

இந்தத் தனித்துவங்கள்எல்லாவற்றிற்கும் எத்தனை வாய்ப்புகளை பாரதி அவர்களுகெல்லாம் தந்துள்ளான்... வேறு யாரும்தர இயலுமா அதை.....

++++++++++++++++++++++++++++++++++

ஷோபா எனக்கு அனுப்பியபாடல் சின்னஞ் சிறு கிளியே... செல்வக் களஞ்சியமே..... ஷோபனா விக்னேஷ் பாடியுள்ளார்.அற்புதம்..

அதே பாடலை என் இசைத் தேவதை பாம்பே ஜயஸ்ரீயும் பாடியுள்ளார்....

டி.எம்.கிருஷ்ணா........ இன்னும் எவ்வளவோ பேர்..

இசை அறியா எனக்கு இவை யாவற்றிலும் இந்தப் பாடலை மிக அழகாகப் பாடியவர்களாகத் தெரிவது..

ஒன்று மகாராஜபுரம்சந்தானத்தின் சின்னஞ் சிரு கிளியே கண்ணம்மா.....

மற்றது என்.எஸ்.கிருஷ்ணனின் 'மணமகள்' திரைப் படத்தில் எம்.எல். வசந்தகுமாரியும் அந்த அழகிய ஆண் குரலும்(யார் அது?) பாடிய சின்னஞ் சிறு கிளியே.. செல்வக் களஞ்சியமே..... (தயவு செய்து இதை ஒலி வடிவில் மட்டுமே கேளுங்கள்)

"""""""""""""""""""""""""""""""""""""""""""""
உன் கண்ணில் நீர்வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி...

என் கண்ணில் பாவையன்றோகண்ணம்மா...

என்னுயிர் நின்னதன்றோ.....

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

இப்போது செப்டம்பர்11, இரவு மணி 12.47...

இன்று இரவு பாரதிபாடல்களில்...