மாகாண சபை உறுப்பிரின் மாதிரிப் போலிக் கையேட்டினைப் பயன்படுத்தி 7 இளைஞர்களிடம் பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு (20 இலட்சம்) அமைச்சர் குமாரவெல்கம அவர்களின் மூலம் வேலைவாய்ப்பினைப் பெற்றுத்தருவதாகக் கூறி கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு போலி நியமனக் கடிதம் வழங்கி மிகுதிப் பணத்தையும் பெற்றுக்கொண்டனர்.
நியமனம் பெற்றவர்கள் மட்டக்களப்பிலுள்ள சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குச் சென்றபோது தாம் ஏமாற்றப்பட்ட விடயம்; தெரியவந்ததையடுத்து மாகாணசபை உறுப்பினர் சந்திரகாந்தனின்
கவனத்திற்கு அவர்கள் கொண்டுவந்தனர்.
இவர்களிடம் வேலைபெற்றுத் தருவதாக (ஆரையம்பதியைப் பிறப்பிடமாகவும்)மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா பாலசிங்கம் (சிறி)
மற்றும் (யாழ்ப்பானத்தினைபிறப்பிடமாகவும்) மட்டக்களப்பு நாவற்குடாவில் வசிக்கும் ஆசிரியரான குமார் குமரேஷன் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளதுடன் ஏறாவூரைச் சேர்ந்த கரீம் (கையடக்கத் தொலைபேசி இல 0777823447) என்பவர் இவ் மோசடிச் சம்பவத்தின் முக்கிய நபராவார்.
ஆயுள்வேத வைத்தியசாலை இரயில்வே ரெலிகொம் ஆகிய இ.டங்களில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி ஒவ்வொரு நபர்களிடமிருந்து சுமார் 2 இலட்சம் தொடக்கம் 4 இலட்சம் வரையிலான பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இச்சம்பவம் பற்றி மிகவும் விழிப்புடன் செயற்படுமாறு மாகாண சபை உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் அவரது பெயரைக் களங்கப் படுத்தும் இவ்வாறான ஏமாற்றுப்பேர் தொடர்பான
சும்பவங்கள் பற்றி அறிந்தால் தனது கவனத்திற்கு கொண்டு வருமாறு முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார். .