9/17/2014

| |

மோல்டாவில் தஞ்சக் கோரிக்கை படகு மூழ்கி 500 பேர் பலியானதாக அச்சம்

ஐரோப்பிய தீவான மோல் டாவுக்கு அருகில் கடந்த வாரம் குடியேற்றக்காரர் களை ஏற்றிச் சென்ற பட கொன்று மற்றொரு படகில் மோதி விபத்துக்குள்ளான தில் சுமார் 500 பேர் கொல் லப்பட்டிருக்கலாம் என அஞ் சப்படுகிறது. இந்த விபத்தில் இருந்து தப்பிய இரு பலஸ்தீன நாட்டவர்கள், குடியேற்றம் தொடர்பான சர்வதேச அமைப்புக்கு (ஐ.ஓ.எம்.) வழங்கிய தகவலில், ஆட்கடத்தல்காரர்களால் குறித்த படகு வேண்டு மென்றே மூழ்கடிக்கப்பட்டதாக குறிப்பிட்டனர்.
இந்த படகு எகிப்தின் டெமிட்டா பகுதியில் இருந்து செப் டெம்பர் ஆரம்பத்தில் தமது பயணத்தை ஆரம்பித்ததாக அவ ர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஆண்டில் மாத்திரம் மத்திய தரை கடலில் 2,500க்கும் அதிகமான தஞ்சக்கோரிக்கையா ளர்கள் மூழ்கியிருப்பதாக ஐ.ஓ.எம். குறிப்பிட்டுள்ளது. இதில் சிரியா, பலஸ்தீன், எகிப்து மற்றும் சூடான் நாட்டினரை ஏற் றிச்சென்ற படகே மூழ்கியுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர் கள் அடங்கிய பயணிகளை பாதுகாப்பு இல்லாத சிறிய பட குக்கு மாறும்படி ஆட்கடத்தல்காரர்கள் வலியுறுத்தியபோதும் அதனை மறுத்ததை அடுத்து பெரிய படகை அவர்கள் மூழ ;கடித்ததாக உயிர்தப்பியவர்கள் விபரித்துள்ளனர். இந்த சம்ப வம் குறித்து மோல்டா நிர்வாகம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.