இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) போராளிகளுடன் இணைந்திருக்கும் ஐரோப்பியர்களின் எண்ணிக்கை 3,000 ஐ தாண்டியிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவரான iஜல்ஸ் டி கர்சோவ் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.எஸ். மீதான மேற்குலகின் வான் தாக்குதல்கள் அதிகரிக்கும்போது ஐரோப்பாவில் பதில் தாக்குதல் இடம்பெறும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.
ஈராக்கில் வான் தாக்குதலை முன்னெடுப்பது குறித்து பிரிட்டன் பாராளுமன்றத்தில் வக்கெடுப்பு நடத்தப்பட விருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் அண்மைய மாதங்களில் ஈராக் மற்றும் சிரியாவில் பெருமளவு நிலப்பகுதியை கைப்பற்றியுள்ளனர்.
இதில் பிராந்தியத்தில் யுத்தத்தில் ஈடுபடுபவர்கள் மற் றும் நாடு திரும்பியவர்கள் என்றே 3,000க்கும் அதிகமான ஐரோப்பியர் ஐ.எஸ். இல் இருப்பதாக கர்சோவ் சுட்டிக்காட்டினார். ஈராக் மற்றும் சிரியாவில் சுமார் 31,000 ஐ.எஸ். போராளிகள் இருப்பதாக அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. அண்மையில் கணித்திருந்தது.
இது முன் னர் நம்பப்பப்பட்டதை விடவும் மூன்று மடங்கு அதிக மாகும். ஐ.எஸ். குழு கடந்த ஜ_னில் இஸ்லாமிய கிளா பத்தை அறிவித்தது ஐரோப்பாவில் அதற்கு அதிக ஆதரவு கிடைக்க சாதகமாக இருந்ததாக கர்சோவ் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். "இந்த அறிவிப்பை நீங்கள் நம்புபவராக இருந்தால் அதில் முன்கூட்டியே இணைய முயற்சிப்பீர்கள்" என்றார்.
ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மீது வான் தாக்குதல்கள் அதிகரிக்கும் நிலையில் பதில் தாக்குதல்கள் குறித்தும் அவர் எச்சரித்தார். அதேபோன்று அல் கொய்தா போன்ற ஐ.எஸ். போட்டி அமைப்புகளும் தமது பலத்தைக் காட்ட ஐரோப்பா மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் என்றார்.