கிழக்கு மாகாண தமிழர்கள் தொடர்ந்தும் அடிமையாக வாழ முடியாது அதனை நாம் அனுமதிக்கவும் முடியாது என கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் தாண்டவன்வெளி கிராமசேவகர் பிரிவில் பல் தேவைக்கட்டடத்தினை ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்துகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்
நாங்கள் செல்லும் இடமெல்லாம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்களை கேட்பதும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்பதும் என கிழக்கு தமிழ் சமூகம் அல்லோல கல்லோலப்படும் நிலையில் தமிழ் ஈழம்,தமிழ் தேசியம் எனும் வீரவசனங்களும் பத்திரிகை அறிக்கைகள் விடுவதனாலும் மாத்திரம் எதையாவது சாதிக்க முடிந்துள்ளதா? 2012 ம் வருடம் கிழக்குமக்களே தமிழ் தேசியத்திற்காக வாக்களியுங்கள் என்று கூக்குரல் இட்ட தமிழ்தேசியக்கூட்டமைப்பு கிழக்கில் அதிக படியாக 11 ஆசனங்களைப்பெற்று எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்து இன்றுடன் 02 வருடங்கள் கழிந்தது.இவ் 02 வருடங்களில் எதையாவது சாதிக்க முடிந்ததா? அண்மையில் கிழக்கு மகாண சபையினால் கொடுக்கப்பட்ட 300 பாடசாலை பணியாளர்கள் நியமனத்தில் முஸ்லீம்களுக்கு 154 ம், சிங்களவர்களுக்கு 79 ம், தமிழர்களுக்கு 70 ம் என வழங்கப்பட்டுள்ளது.42 வீதமாக தமிழர்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் விகிதாசாரப்படி பார்ப்பதானாலும் அல்லது கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கைப்படி பார்ப்பினும் தமிழர்களுக்கு 132 ம், முஸ்லீம்களுக்கு 120 ம், சிங்களவர்களுக்கு 63 ம் என்ற வகையிலும் வழங்கப்பட்ட வேண்டியதுவே பொருத்தமானது ஆனால் 477 பாடசாலை உள்ள தமிழர்களுக்கு 70 ம், 352 பாடசாலைகள் உள்ள முஸ்லீம்களுக்கு 154 நியமனமும் வழங்கப்பட்டுள்ளது என்றால் இதற்கு பொறுப்பு கூற வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிம் என்று வாக்களித்த மக்களையே சாரும். அதை விடுத்து கிழக்கு மாகாணசபை அமைச்சுக்களையோ முஸ்லீம் அரசியல் தலைமைகளையோ பழி கூற முடியாது தமிழர்களை ஆழும் பொறுப்பிலோ அல்லது அமைச்சுப்பதவிகளுக்கு அனுப்பும் அளவிற்கு வாக்களிக்காதது தமிழ் தேசியத்திற்காக வாக்களித்தோம் என்று மார்தடினோமே அதன் விளைவு இன்று சிறுசிறு இடமாற்றம்,பதவியுயர்வு,நிதி ஒதுக்கீடு என எல்லாவற்றிற்கும் அம்பாறைக்கும்,திருகோணமலைக்கும் ஓடிச்சென்று மாற்றாரிடம் கை கட்டி அடிமையாக நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அந்நிலையினை நாம் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது தமது தனிபட்ட அபிலாசைகளுக்காக மாத்திரம் தேர்தல்கால வீர வசனங்களும் பின்னர் எதிர்க்கட்சி ஆசனம் எடுத்துக்கொண்டு தாம் மாத்திரம் சலுகைகள் ஆனுபவிக்க அப்பாவி கிழக்குத் தமிழன் அடிமையாக வேலைவாய்ப்பு முதற் கொண்டு அனைத்திற்கும் கையேந்தும் நிலை மிகவும் கொடுமையானது அதனை தடுத்து எம்மை நாமே ஆழ எம்மக்களின் வலுவாக்கத்திற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் போன்ற தூரநோக்கிய சிந்தை கொண்ட தலைவர்களை எம் தமிழ்மக்கள் தொடர்ந்தும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதனை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ராஜன்; பிரதேச செயலாளர் தவராஜா, மாநகர சபையின் பிரதி ஆணையாளர் தனஞ்செயன், முன்னாள் பிரதி முதல்வர் ஜோர்ஜ் பிள்ளை, யோகவேள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.