9/28/2014
| |
கூட்டமைப்புக்குள் குழப்பம் முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து
9/27/2014
| |
எழுத்தாளர் சல்மாவுடனான சந்திப்பு
| |
ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும் 100 கோடி அபராதமும்
| |
பர்மிய பிக்குவின் வருகையை எதிர்க்கும் முஸ்லிம் கவுன்ஸில்
| |
ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பு சனிக்கிழமை
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை சனிக்கிழமையன்று வழங்கப்படவிருக்கிறது.
கடந்த 18 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி முடிவடைந்தன.
செப்டம்பர் 20ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று இந்த வழக்கை விசாரித்துவந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கல் டி குன்ஹா முன்னர் அறிவித்திருந்தார்.
பின்னர், பாதுகாப்புக் காரணங்களுக்காக தீர்ப்பு வழங்கப்படும் இடமும் தேதியும் மாற்றப்பட்டன. தீர்ப்பு செப்டம்பர் 27ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அப்போது ஜனதாக் கட்சித் தலைவராக இருந்த சுப்ரமணியன் சுவாமி 1996ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதியன்று இந்த வழக்கைத் தொடர்ந்தார்.
தன்னுடைய வருமானத்திற்கு அதிகமாக சுமார் 66.5 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக் குவித்ததாக ஜெயலலிதா மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளியாகவும் அவரது தோழி சசிகலா இரண்டாவது குற்றவாளியாகவும் மூன்றாம் குற்றவாளியாக வி.என். சுதாகரனும் நான்காவது குற்றவாளியாக இளவரசி என்பவர் மீதும் குற்றம் சட்டப்பட்டது.
இதையடுத்து, 96ஆம் ஆண்டு டிசம்பரில் ஐந்து நாட்களுக்கு ஜெயலலிதாவின் வீடு, ஹைதராபாத் தோட்டம் ஆகியவை சோதனையிடப்பட்டன. பிறகு இந்த வழக்கிற்கென தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, 97ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது.
இதற்கிடையில், தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
உயர் நீதிமன்றம் 2003ஆம் ஆண்டு நவம்பரில் பெங்களூர் தனி நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றியது. பப்புசாரே, பி.ஏ. மல்லிகார்ஜுனைய்யா, பாலகிருஷ்ணா, முடிகவுடர் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்து இந்த வழக்கை விசாரித்தனர்.
இதற்கிடையில் 2011ஆம் ஆண்டில் ஜெயலலிதா பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சார்யா 2013ஆம் ஆண்டுத் துவக்கத்தில் இந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்ளவே, அவருக்குப் பதிலாக பவானிசிங் என்பவர் அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்றார்.
கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் ஜான் மைக்கல் டி குன்ஹா தனிநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் பத்து மாதங்கள் விசாரணை நடத்திய பின்னர் தீர்ப்பு வழங்கும் தேதியை அறிவித்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பும் அரசுத் தரப்பும் பல முறை வாய்தா வாங்கினர். இதில் அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது. 18ஆண்டுகளாக நடந்துவரும் இந்த வழக்கில் 160க்கும் மேற்பட்ட தடவைகள் வாய்தா வழங்கப்பட்டது.
ஜெயலலிதா மீதான இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கு தமிழகம் முழுவதும் கவனிக்கப்படும் வழக்காக இருப்பதால், செய்தி சேகரிப்பதற்காக 300க்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் பெங்களூரில் குவிந்துள்ளனர்.
அதேபோல தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் பெங்களூரில் முகாமிட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்களும் பெங்களூர் நகருக்கு வந்துள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தீர்ப்பு வழங்கப்படும்போது நேரில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், தமிழக முதலமைச்சரின் பாதுகாப்பிற்கென விரிவான ஏற்பாடுகளைக் கர்நாடக காவல்துறை செய்துள்ளது. தனி விமானம் மூலம் நாளை காலையில் ஜெயலலிதா சென்னையிலிருந்து பெங்களூர் வருவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, ஊழல் வழக்குகளில் நீதிமன்றங்களால் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுபவர்கள் உடனடியாக தங்கள் பதவிகளை இழப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| |
இஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்களுடன்; 3000க்கும் அதிகமான ஐரோப்பியர் இணைவு
9/26/2014
| |
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி திட்டங்களின் மீளாய்வுக்கூட்டம்
| |
ஐ.நா. ஆணைக்குழு விசாரணைகள் அரசியல் நோக்கம் கொண்டவை
ஐ.நா. ஆணைக்குழு விசாரணைகள் அரசியல் நோக்கம் கொண்டவை
| |