8/03/2014

| |

இப்தார் குறித்து விமர்சனம் செய்வதற்கு அரியநேந்திரன் M P க்கு அருகை கிடையாது- கலீல் ஹாஜியார்’ அறிக்கை

DSC05435இப்தார் குறித்து விமர்சனம் செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனுக்கு அருகதை கிடையாது என மட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தகர் நலன்புரி அமைப்பின் தலைவரும் சமூக சேவையாளருமான கே.எல்.எம்.கலீல் ஹாஜியார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் அன்மையில் இப்தார் குறித்து ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் மட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தகர் நலன்புரி அமைப்பின் தலைவரும் சமூக சேவையாளருமான கே.எல்.எம்.கலீல் ஹாஜியார் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது முஸ்லிம்களின் சமய அனுஸ்டானங்கள் பல்வேறு வகைப்படும்.
இதில் தொழுகை நோன்பு, மற்றும் ஸக்காத்(ஏழைவரி) ஹஜ் என்பன அடங்கும். அவற்றின் ஆழமான ஆண்மீக அர்த்தங்கள் இஸ்லாத்தை பின்பற்றுபவர்களுக்கு புரியும்.
இதில் நோன்புக்கும் இப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்வுக்கும் அர்த்தம் புரியாமல் எல்லாவற்றுக்கும் மேதாவித்தனமாக அறிக்கை விடுவது போல பராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் இதற்கும் அறிக்கை விட்டிருக்கின்றார்.
அவரது கூற்றுப்படி இப்தார் நிகழ்வானது களியாட்ட விழாவாக அல்லது பிறந்த நாள் விழா போன்று கருதியிருந்தால் அமெரிக்க வெள்ளைமாளிகையில் தமழ் நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா, நமது நாட்டில் ஜனாதிபதி மற்றும் ஏனைய அமைச்சுக்கள் தூதுவராலயங்கள் திணைக்களங்கள் நடாத்தும் இப்தார் நிகழ்வுகளில் ஏனைய சமயத்தவர்களை அழைக்கவும் வேண்டாம், இது இஸ்லாத்துக்கு முரணான செயல் என இஸ்லாமிய மார்க்க அறிஞர்களே தீர்ப்பு (பத்வா) வழங்கியிருப்பார்கள்.
இஸ்லாமிய மார்க்க அனுஸ்டானம் பிழையெனக் கூறுவதற்கு ஒரு இஸ்லாமியனுக்கும் இந்து, கிறிஸ்தவ, பௌத்த மத அனுஸ்டானங்களை பிழை எனக் கூறுவதற்கு அந்தந்த சமயத்தவர்களுக்கே உரிமையுண்டு என்பதனை பராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் அறிந்து கொள்வார் என எண்ணுகின்றேன்.
கற்றறிந்த முன்னாள் தமிழ் அரசியல் தலைவர்களோ சமகால தமிழ் அரசியல் தலைவர்களான முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா, சம்பந்தன் ஐயா, சுமந்திரன் ஐயா, பொன் செல்வராசா ஐயா போன்றோர் இவ்வாறான மலினமான அறிக்கைகளை நிச்சயமாக விடமாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை.
கடந்த பல தசாப்தங்களாக நமது சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த கசப்பான நிகழ்வகளை மறக்கவும், சமய சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், சகவாழ்வை பேணவும், இவ்வாறான நிகழ்வுகளை நடாத்தி சமூகங்களுக்கிடையில் நல்லெண்ணத்தை ஏற்படுத்துமாறும் ஏனைய சமயத்தவர்களின் சமய நிகழ்வகளிலும் இன்ப துன்பங்களிலும் பங்கு கொள்ளுமாறும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் (உலமாக்கள்) வலியுறுத்தி வருகின்றனர்.
பராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் கூறுவது போல் இப்தார் நிகழ்வு மாத்திரமல்ல ஏனைய சமயத்தவர்களுடைய சமய நிகழ்வுகள் அனைத்தும் புகைப்படம், வீடியோ எடுத்து பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் வெளிவரத்தான் செய்கின்றன.
இவருடைய காழ்ப்புனர்வு இப்தார் நிகழ்வு மாத்திரம் விளம்பரத்;திற்காக அரசியல் இலாபத்திற்காக புகழுக்காக காட்சிப்படுத்தப்படுவதாக எண்ணி தனது அற்பத்தனமான சிந்தனையை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
போதாமைக்கு இஸ்லாமிய அறிஞர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும் புத்திமதி வேறு கூறியிருக்கின்றார்.
கிழக்கு முஸ்லிம்களின் எந்தவொரு இன்ப துன்பங்களிலும் பங்கு கொள்ளாத பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் ஐயா அவர்களே
காலத்துக்காலம் முஸ்லிம்களுக்கு எதிரான அறிக்கைகளையும், விமர்சனங்களையும் வெளியிடுவதை விடுத்து சகோதர தமிழ் முஸ்லிம் உறவை கட்டியெழுப்புவதற்கு காத்திரமான ஏதாவது பணியை நீங்கள் செய்வீர்களாயின் நாங்களும் உங்களுடள் கைகோர்ப்போம் என தாழ்மையுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி *காத்தான்குடி.கொம்