சிறுபான்மை மக்களாகிய நாங்கள் விசேடமாக இலங்கைத் தமிழர்கள், மலையகத்தவர்கள், முஸ்லிம்கள் ஏனைய மத ரீதியாக சிங்களம் பேசுகின்ற கிறிஸ்தவர்கள்; ஒன்றிணைய வேண்டிய காலகட்டமாக இது உள்ளது.'
இவ்வாறு உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர பிரதேச அபிவிருத்தித் திட்டங்களின் மீளாய்வுக் கூட்டம் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
'சிறுபான்மை இனங்களும் ஒரு தீர்வை முன்வைத்து அரசாங்கத்துடன் பேரம் பேசுகின்ற சக்தியாக உருவெடுக்கின்றபோதே இனப் பிரச்சினைக்கான தீர்வை எட்ட முடியும்.
எதிர்வருகின்ற எந்தவொரு தேர்தலாக இருந்தாலும், இவ்வாறான சிறுபான்மைக் கூட்டிணைவின் மூலமே நாம் பேரம் பேசும் சக்தியாக நின்று உரிமைகளையும் அபிவிருத்தியையும் வென்றெடுக்க முடியும். இத்தகைய கூட்டிணைவினால் மாத்திரமே இனி இலங்கையில் பேரம் பேசும் சக்தி என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும்.
யுத்தத்துக்கு பின்னரான தற்போதைய காலகட்டத்தில் வரலாறு கண்டிராத அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. விசேடமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஜனாதிபதியின் நேரடி அக்கறையின் கீழ் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நாட்டின் அமைச்சர் என்ற வகையிலும் இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்திக்குழுத் தலைவர் என்ற வகையிலும் சில விடயங்களை நான் வெளிப்படையாக சொல்லியேயாக வேண்டும்.
எல்லா இடங்களிலும் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டாலும், இந்த அபிவிருத்திகள் எதுவும் அரசாங்கத்துக்கு வாக்குகளைச் சேர்க்கின்ற விடயமாக அரசாங்கம் பார்க்கவில்லை. இதைத் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை இன மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், சிறுபான்மைக் கட்சிகள் இன்று அபிவிருத்திக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.
இலங்கையில் இன முரண்பாடுகள் தோற்றம் பெற்றதுக்கான பிரதான காரணிகளில் ஒன்றாக அபிவிருத்தி சிறுபான்மைப் பிரதேசங்களில் சமமாக பார்க்கப்படவில்லை என்பதே குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால், அந்த அபிவிருத்தி இன்று முன்னெடுக்கப்படும்போது அபிவிருத்திக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்ற நடைமுறையும் இருக்கின்றது.
இதேவேளை, அரசாங்கம் இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் அப்பால் சென்று மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஆயுத வன்முறைகளால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வட, கிழக்குப் பகுதிகளில் பாரிய அபிவிருத்திகளை மக்களின் நலனை முன்னிறுத்திச் செய்கின்றன. இதற்காக இந்த அரசாங்கத்துக்கும் அதற்கு தலைமை தாங்குகின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பொறுப்பாக இருந்து வழி நடத்துகின்ற அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் எனது பணிவான நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்
அதேபோல, மக்களும் இதற்கு எவ்வாறு நன்றி செலுத்தலாம் என்பது பற்றி கலந்துரையாடப்பட வேண்டும்.
இந்த அபிவிருத்திக்கான பணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது சொந்த நிதியிலிருந்தா தருகின்றார் என்ற கேள்வியும் மேலோட்டமான பார்வையாளர்களால் எழுப்பப்படுகின்றது.
பணத்தை உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சீனா, அமெரிக்கா மற்றும் சர்வதேசக் கொடையாளி நிறுவனங்கள் தருகின்றன என்று அவர்கள் வாதிடுகின்றார்கள். இது தேவைக்கில்லாத வீணர்களின் பிரச்சாரம். யார் எங்கிருந்து பணத்தைக் கொடுத்தாலும் அது யாவும் திருப்பிச் செலுத்தவேண்டிய கடன்தான்.
இந்தக் காலகட்டத்தை விட பொருளாதாரத்தில் ஒரு எழுச்சியான காலம் இனி வரப் போவதில்லை என்றே நான் நினைக்கின்றேன்.
ஆயினும், யுத்தம் முடிந்தாலும் பிரச்சினைக்கான தீர்வு இன்னும் எட்டப்படவில்லை என்கின்ற யதார்த்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். அவ்வாறு ஒரு தீர்வை எட்டுவதற்காக அரசாங்கம் சிறுபான்மைக் கட்சிகளும் கலந்து பேசி முடிவுக்கு வர வேண்டும்.
நாங்கள் பேசத் தயார். ஆனால், அதற்கு முதல் அரசாங்கம் தனது நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறுகின்றனர். அப்படியானால், அரசாங்கம் எவ்வாறு நம்பகத்தன்மையை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சொல்ல வேண்டும்.
இந்த அரசாங்கத்தின் தலைவர் சிறுபான்மையினரின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றார்.
13ஆவது திருத்தத்துக்கு மேலாகச் சென்றும் கூட, நான் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணத் தயாராக இருக்கின்றேன். வாருங்கள். பேசிப் பார்ப்போம் என்று கூட ஒரு தருணத்தில் அவர் அறை கூவல் விடுத்தார்.
சிறுபான்மை இனத்தின் இனத்துவ அடையாள அரசியல் போல இப்பொழுது சிங்கள பௌத்த மக்களுக்குள்ளேயும் இனவாத பேரினவாத கொள்கைகளை பிரகடனப்படுத்தி முன்கொண்டு செல்கின்ற அடையாள அரசியல் போக்கு தலையெடுத்து விட்டது.
இதன் மூலமாக சிங்கள பௌத்த மக்களின் புதிய பரம்பரைக்கு பேரினவாத சிந்தனைகள் ஊட்டப்படுகின்ற போக்கு தீவிரமடைந்துவிட்டது.
ஆகவே, இன்றைய போட்டி என்பது இனவாத அடையாள அரசியலை நடத்துகின்ற சிறுபான்மைக்கும் பெரும்பான்மை இனவாதத்துக்குமானதாக பரிணாமம் பெற்று விட்டது. ஆனால், இது இலங்கையின் பெரிய கட்சிகளுக்கு இடையிலான போட்டி அல்ல.
அதேவேளை, எதிர் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் வேறு வழியே இல்லாமல் இலங்கையில் இருக்கின்ற சிறுபான்மை தமிழர்களும் முஸ்லிம்களும் மலையகத்தவர்களும் சிங்களம் பேசும் கிறிஸ்தவ சிறுபான்மையினரும் எதிர்க்கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதாக உணரப்படுகின்ற காலகட்டமாகவும் இது இருக்கின்றது. ஆனால், இந்த உணர்வு சிறுபான்மை மக்களுக்கு மிகவும் பாதகமானது. இது சிறுபான்மை மக்களின் பேரம் பேசும் சக்தியை இல்லாமல் செய்துவிடும் என்றே நான் நம்புகிறேன். ஆகவே, இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கு சிறுபான்மை இனங்கள் நின்று நிதானித்துச் செயற்பட வேண்டும்.
அபிவிருத்தி தேவையில்லை. எங்களுக்கு உரிமையே வேண்டும் என்று இரண்டு சிறுபான்மை இனங்களும் கோஷம் எழுப்பிய வரலாறுகள் உள்ளன. ஆனால், அபிவிருத்தியும் உரிமையும் சமமாக அடையப்பெற வேண்டும். அத்தகைய ஒரு சூழ்நிலைக்கான சக்தியாக சிறுபான்மைகள் இணைய வேண்டும். இதுவே சமகாலத் தேவையாக உள்ளது.' என்றார்.
இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி அமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.எம்.சுபைர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஏறாவூர் நகரசபைத் தலைருமான அலிஸாஹிர் மௌலான, மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.முரளீதரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.