8/08/2014

| |

மட்டக்களப்பில் க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகள்

மட்டக்களப்பு நகரில் மிகவும் அமைதியான நிலையில் க. பொ.த. (உயர் தரம்) பரீட்சைகள் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைப் பரீட்சார்த்திகள் 5125 பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 2140 பேருமாக மொத்தம் 7265 பேர் பரீட்சைக்குத் தோற்றுவதாக பரீட்சைகள் இணைப்பாளரும் மட்டக்களப்பு வலைய கல்விப் பணிப்பாளருமான கே. பாஸ்கரன் தெரிவித்தார்.
 
மாவட்டத்தில் 50 பரீட்சை நிலையங்களும் மற்றும் 7 இணைப்பு நிலையங்களும் செயல்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.