மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினை புதிய இடத்தில் நிர்மாணித்தல் தொடர்பான ஆரம்பக்கட்ட விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இதனையடுத்து புதிய கட்டத் தொகுதி அமையவுள்ள திராய்மடு பிரதேசத்தினையும் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டனர்.
கூட்டத்திற்கு பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் எம்.சி.கமம்பில்ல, அமைச்சின் பிரதம பொறியியலாளர் எஸ்.எம்.மடவலகம, அமைச்சின் திட்டப் பொறியியலாளர் பிராங்கி யு. பெரேரா ஆகியோர் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்தனர்.
இதன் போது, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் பொறியியலாளர் ஏ.சி.நிசார்டீன், மாகாண கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர் பொறியியலாளர் ஏ,வேல்மாணிக்கம், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார் மற்றும் திணைக்களத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட செலயகத்தினை புதிய இடத்திற்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதையடுத்து புதிய கட்டடத் தொகுதியினை நிர்மாணப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.