8/11/2014

| |

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அரசியல் கட்சிக்கும் தடை

எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட் சியை கலைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி இராணுவ சதிப்புரட்சிக்கு முன்னர் எகிப்தில் இடம்பெற்ற அனைத்து சுயாதீன தேர்தல்களிலும் வெற்றிபெற்ற முஸ்லிம் சகோதரத் துவ கட்சிக்கு எதிர்வரும் பாரா ளுமன்ற தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை ஒரு தீவிரவாத குழுவாக எகிப்து அரசு கடந்த டிசம்பரில் பிரகடனம் செய்தது.
கடந்த 2013 ஜ{லை எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி இரா ணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட பின் நாட்டின் வன் முறையை தூண்டியதாக சகோதரத் துவ அமைப்பு மீது குற்றம் சுமத் தப்பட்டுள்ளது.
இந்நிலையில் எகிப்து நிர்வாக நீதிமன்றத்தால் கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பில் சுதந்திரத்திற் கும் நீதிக்குமான கட்சியின் சொத்து களை அரசு கையகப்படுத்த வேண் டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவி கவிழ்க்கப்பட்ட பின் னர் சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி ஆரம்பிக்கப்பட்டது.