8/10/2014

| |

இலங்கையிலே மிகப்பிரமாண்டமான நூலக கட்டிடத்திற்கான வேலைத்திட்டம்

 முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் முதலமைச்சராக தான் இருந்த காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இலங்கையிலே  மிகப்பிரமாண்டமான நூலக கட்டிடத்திற்கான வேலைத்திட்டம் ஒன்று  ஆரம்பிக்கப்பட்டது.இது  மட்டக்களப்பு மாவட்டத்தின் மாநகர சபைக்கு எல்லைக்குட்பட்ட புளியந்தீவில்  உருவாக்கப்பட்டது. 600 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டிற்காக கட்டிட வேலைகள் ஆரம்பிக்கபட்ட நிலையில் தற்போது மாகாண சபை ஆட்சி மாற்றத்தின் காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இவ் நூலகத்தினை பூர்த்தி சைவதற்கு 1900இலட்சம் ரூபாய்கள் தேவையாக உள்ளதாகவும் இன் நிதியினை ஒதுக்கித் தரும்படி சி.சந்திரகாந்தன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதனடிப்படையில் இந்நிதி ஒதுக்கப்ப்படுமிடத்து மேற்படி நூலக வேலைத்திட்டங்கள்  பூர்த்தியடையும். இதனால் மட்டக்களப்பு மாவட்ட மாணவர்கள் கல்வி வளர்ச்சியும் மட்டக்களப்பு கல்வியாளர்களின் தேடல்கள்,தனித்துவமும் போன்றவை பாரிய  முன்னேற்றமடையும்.