8/07/2014

| |

சீன நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 600 ஐ எட்டியது

சீன நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 600 ஐ எட்டியது

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டோர் எண் ணிக்கை சுமார் 600ஐ எட்டியுள்ளது.
மலைப்பகுதியில் 6.1 ரிச்டர் அளவில் இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் தரை மட்டமாக்கப்பட்டதோடு மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மொத்தம் 589 பேர் கொல்லப்பட்டிருப் பதாகவும் ஒன்பது பேரை காணவில்லை என்றும் சீனாவின் பொது விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த அனர்த் தம் காரணமாக 2,400க்கும் அதிகமானவர்கள் காயமடைந் துள்ளனர். பல்வேறு வீதிகளும் தடைப்பட்டிருப்பதோடு நிலநடுக்கத் தால் ஏற்பட்ட இடிபாடுகள் காரணமாக ஆறுகள் தடைப்பட்டு தேக்கம் ஏற்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகளுக்காக பாதிக் கப்பட்ட பகுதிக்கு ஆயிரக்கணக்கான துருப்புகளை சீன அரசு அனுப்பியுள்ளது. கூடாரங்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வீதிகள் மற்றும் ஹெலிகொப்டர் ஊடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.