8/08/2014

| |

10 இலட்ச ரூபா நிதியில் சந்திவெளி மைதான புனரமைப்பு

பொருளாதார அமைச்சின் கிராமத்திற்க ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் அவர்களிடம் சந்திவெளி எய்கோ விளையாட்டுக் கழகம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து இம்மைதானத்தின் புனரமைப்பிற்கென ரூபா பத்து இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மிக நீண்டகால தேவையாகக் காணப்பட்ட இம்மைதான புனரமைப்பிற்கான ஆரம்ப வேலைகள் கிராம அபிவிருத்திச் சங்கங்கத் தலைவர் தலைமையில் 07.08.2014 நடைபெற்றது. கிரான் பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம்இந்நிகழ்வில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் அவர்களின் சார்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிரான் பிரதேச அபிவிருத்தி குழு இணைப்பாளர் ஆ.தேவராஜ், ஜனாதிபதி ஆலோசகரின் இணைப்பாளர் ப.தவேந்திரராஜா, கோறளைப்பற்று பிரதேசசபை செயலாளர் எஸ்.எம்.சிகாப்தீன் ,மற்றும் விளையாட்டு கழகங்கள், கிராம அபிவிருத்தி சங்கம், கிராம வாசிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மைதானத்தில் கூட்டம் நடைபெற்றது.