8/09/2014

| |

தரம் -05 மாணவர்களுக்கான விஷேட செயலமர்வு.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும்ஜனாதிபதியின் ஆலோகருமான சி.சந்திரகாந்தனின் ஆலோசனையின் பேரில்முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தனின் வழிகாட்டுதலின்கீழ் ஆற்றல் பேரவை வருடாவருடம் நடாத்தும் தரம் 05 மாணவர்களுக்கான விஷேட கல்விக் கருத்தரங்கின் ஆறாம் சுற்று பயிற்சி செயலமர்வு 08.08.2014ம் திகதி ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் நடாத்தப்பட்டது. மண்முனைப்பற்று பிரதேச சபையும் ஆரையம்பதி ஆற்றல் பேரவையும் காலஞ்சென்ற செல்வி சி.ஜெனித்தா ஞாபகார்த்தமாக முதல் அமர்வை ஆரம்பித்தது.
ஆரையம்பதி தொடக்கம் கிராண்குளம் வரையான மண்முனைப்பற்று பிரதேசத்தினைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் பங்குபற்றிய இச்செயலமர்வில் பகுதி -01, பகுதி -02 பாட நெறிகளுக்கான மீட்டலும் சுற்றாடல் சார்ந்த வினாக்களுக்கான தெளிவூட்டல்களும் கற்பிக்கப்பட்டன. ஆற்றல் பேரவையின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். ஆற்றல் பேரவை புலமைபரிசில் இணைப்பாளரும் ஆசானுமான வை.துவாரகனின் நெறிப்படுத்தலில் பிரபல ஆசான்களும் கலந்து கொண்டு செயலமர்வை நடத்தி வைத்தார்.
இந்நிகழ்வில் ஆற்றல் பேரவையின் பொருளாளர் ஜே.ஜேக்கப், ஆட்டோ சங்கத் தலைவர் குகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.