அரசியல் சுயநலங்களுக்காக எங்களை தண்ணீர் அகதி ஆக்காதே என்ற தொனிப்பொருளில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் ஏற்பாட்டில் யாழ். பலநோக்கு கூட்டுறவு சங்க மணடபத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டமானது வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 1 மணித்தியலமாக முன்னெடுக்கப்பட்டது.
இரணைமடு குடிநீர் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 2300 மில்லியன் அமெரிக்க டொலரில் பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனத்தினால் ஒதுக்கப்பட்ட 48 மில்லியன் அமெரிக்க டொலரினை அந்நிறுவனம் மீளப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்- அந்நிதியினை அந்நிறுவனம் மீளப்பெறாமல் வட மாகாண சபை மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை தடுத்து நிறுத்தக் கோரியும்- குறித்த நிதியினை அந்நிறுவனம் மீளப்பெற்றால் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை பதவி விலகக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50ற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.