7/14/2014

| |

வாழைச்சேனை இந்துக்கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

வாழைச்சேனை இந்து கல்லூரியில் இருந்து 2012,2013 பல்கலைகழகம் தெரிவான மாணவர்கள் மற்றும் பிரதேசத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்த மாணவர்கள் நேற்று 10.07.2014 கௌரவிக்கப்பட்டனர். வாழைச்சேனை கிராம அபிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழவு சங்க தலைவர் க . பேரின்பராஜா தலைமையில் வாழைச்சேனை இந்து கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது 

இந் நிகழ்வின் ,முதன்மை அதிதியாக கிழக்கின் முன்னாள் முதல்வரும் , ஜனாதிபதி ஆலோசகரும் ஆன சி . சந்திரகாந்தன் , கௌரவ அதிதிகளாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு சீ .கிரிதரன் , கிழக்கு பல்கலைகழக பதிவாளர் திரு க. மகேஷன் , விசேட அதிதியாக கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி கௌரி தினேஷ், அழைப்பு அதிதிகளாக கோட்ட கல்வி அதிகாரி திரு நா . குணலிங்கம் , உதவி திட்டமிடல் பணிப்பாளர் த. பிரபாகரன் , வாழைச்சேனை இந்து கல்லூரி அதிபர் திரு க .தவராஜா உட்பட பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , பொதுமக்கள் நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர் 

இந் நிகழ்வில் வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த அண்மையில் யாழ் பல்கலைகழக விரிவுரையாளராக தேர்வு செய்யபட்ட செல்வி வடிவேல் துஸ்யந்தி கல்வி துறைக்குரிய சாதனையாளராக கௌரவிக்க பட்டதோடு , கோறளைப்பற்று பிரதேச செயலாளராக கடமை புரிந்த திரு சீ .கிரிதரன் மற்றும் வாழைச்சேனை இந்து கல்லூரி அதிபராக கடமை புரிந்து அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ள க . தவராஜா ஆகியோருக்கு சேவை பாராட்டு நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கபட்டனர்.