பிரதேசவாதம்- முதலமைச்சா் முதலில் அதிகாாிகளை நோக்கியல்ல தனது கட்சிகாரா்களை நோக்கியே விரலை நீட்ட வேண்டும்
- கார்த்திகேசு
கடந்த வாரம் தினக்குரல் பத்திரிகையின் வாரமலரில் புதிய பண்பாடு என்ற பகுதியில்எமைநௌறயசயn உஅ உள்நாட்டு விவகாரம் என்ற பத்தியில் பிரதேச வாதமாக இன்றைய தேவைஇ தமிழ் மக்களின் சிந்தனைக்கு என்ற தலைப்பில் பதுளை மண்ணின் மைந்தன் என்பவரால் எழுதப்பட்ட பத்தி பல விடயங்கள் தொடர்பில் உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருப்பினும்இ ஒருசில விடயங்களிலும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பத்தியாளர் வெளிப்படுத்தியுள்ளார்.
அதாவது நடந்து முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கிளிநொச்சியில் மலையக மக்கள் சார்பாக ஒரு வேட்பாளரை நிறுத்துவதற்கு ஆளும் தரப்பாலும் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக குறித்த பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வாழ்கின்ற மலையக சமூகத்தை சேர்ந்த ஒருவர் என்ற வகையிலும்இ கடந்த மாகாண சபைத் தேர்தலில் எங்கள் சமூகம் சார்பாகஇ அதன் முன்னேற்றம் கருதி செயற்பட்டவன் என்ற அடிப்படையிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் மலையக மக்களின் நிலைமை பற்றி சில உண்மைகளை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
கடந்த மே மாதம் 29ஆம் திகதி வடக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் கிளிநொச்சியில் மலையக மக்களுக்கு ஏதிராக அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் பிரதேச வாதப்புறக்கணிப்பு பற்றி கிருஸ்ணபுரம் மண்ணில் இருந்து பேசியிருந்தாh.; அதே கிருஷ்ணபுரம் மண்ணைச் சேர்ந்த் பலர் நடந்து முடிந்து மாகாண சபைத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்திடம் கிளிநொச்சி வாழ் மலையக மக்கள் சார்பாக சார்பாக ஒரு பிரதிநிதியை நியமிக்குமாறு பகிரங்கமாகவும்இ நேரடியாகவும் கோரியிருந்தனர். ஆனால்இ ஏழு வேட்பாளர்களை உள்ளடக்கிய கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு வேட்பாளர்கூட மலையக சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படவில்லை. இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதோடு தொடர்ந்தும் இவர்களால் தாங்கள் கறிவேப்பிலையாகவே பயன்படுத்துவதனை எண்ணி விசனமும் அடைநதனர்;.
கடந்த வாரம் எழுதப்பட்ட குறித்த பத்தியில் குறிப்பிட்டது போன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்ற சம்பவத்தின் விளைவு தெற்கில் மலையக மக்கள் மீது விழுந்தது. அதன் காரணமாகவே அவர்கள் அங்கிருந்து வடக்கிற்கு இடம்பெயர்ந்தனர். நாயின் மீது எங்கு அடித்தாலும் அது காலையே தூக்குவது போன்று இலங்கையில் சிங்களவர்களுக்கு எதிராக எந்த சம்பவமும் இடம்பெற்றாலும் அதற்கு எதிரான விளைவு மலையக மக்கள் மீது பெருமளவுக்கு இடம்பெற்றது. இதனை எவரும் மறுத்துவிட முடியாது. இவ்வாறு பாதிக்கப்பட்டு வடக்குக்கு இடம்பெயர்ந்து வந்த மக்கள் இங்கும் புறக்கணிப்புக்களுக்கும்இ பாராபட்சங்களுக்கும் உட்படுத்தப்பட்டே வந்தனர். ஆனால்இ அவர்கள் தொடர்ச்சியாக எல்லாத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுவதிலிருந்து தப்பவில்லை.
விடுதலைப் போராட்ட காலத்திலும் இங்குள்ள மலையக மக்களின் விகிதாசாரத்திற்கு அப்பால் மேலதிக பங்களிப்பினையே வழங்கியுள்ளனர். இதற்கு நல்ல உதாரணம் கிளிநொச்சி சாந்தபுர கிராமமாகும். இந்தக் கிராமத்தில் உள்ள மாவீரர் குடும்பங்களின் எண்ணிக்கையிலும்இ தடுப்பில் இருந்து வெளிவந்த முன்னாள் போராளிகளின் எண்ணிக்கையும் இதற்கு சான்று பகிர்கின்றன. எனவேஇ இவ்வாறு எல்லாத் தேவைகளுக்கும் பயன்படுத்தியவர்கள் அந்த மக்களுக்குரிய போதிய அரசியல் உரிமையோ அல்லது அபிவிருத்திஇ வேலைவாய்ப்புஇ பதவியுயர்வு போன்றவற்றில் பாராபட்சமில்லாமல் வழங்கியதாகவோ இல்லை.
ஆனால்இ கடந்த வாரம் வெளியான தினக்குரல் பத்தியில் குறிப்பிடப்பட்டது போன்று ஆளும் தரப்பாலும் கிளிநொச்சியில் மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பது முற்றிலும் தவறான கருத்து. இங்கே ஆளும் தரப்பை நியாயப்படுத்துவதற்காக கூறவில்லை. மாறாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் புறக்கணிக்கப்பட்ட மலையக மக்களை ஆளும் தரப்பு தங்களின் ஏழு வேட்பாளர்களில் இரண்டு பேரை அந்த சமூகம் சார்ந்து நிறுத்தியது முக்கியமாக சுட்டிக்காட்டப்பட வேண்டியது.
இதில்இ ஈ.பி.டி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் கிளிநொச்சியில் தனக்கு ஒதுக்கப்பட்ட மூன்று வேட்பாளர்களில் ஒருவராக பிரகலாதன் என்பவரை மலையக மக்கள் சார்பாக நிறுத்தியிருந்தார். அதேவேளைஇ சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் தனது நான்கு வேட்பாளர்களில் மகாதேவன் என்பவரை அந்த சமூகம் சார்ந்து தெரிவு செய்திருந்தமை முக்கிய விடயமாக சுட்டிக்காட்டத்தக்கது. இந்த நிலையில் கிளிநொச்சியில் மலையக மக்கள் சார்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடந்துகொண்ட விதம் அந்த மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கிளிநொச்சிவாழ் மலையக மக்கள் தொடர்பில் பேச்சளவிலேயே செயற்படுகின்ற இவர்கள் அதற்கு அப்பால் எதனையும் செய்ய முன்வரவில்லை.
எனவேதான் வடக்கு முதலமைச்சர் அவர்கள் கடந்த மே மாதம் 29ஆம் திகதி கிளிநொச்சியில் மலையக மக்கள் அதிகம் வாழ்கின்ற அந்த மண்ணில் நின்று அதிகாரிகளை நோக்கி பிரதேச வாதத்தை மேற்கொள்ள வேண்டாம் என விரலை நீட்டியிருந்தார். ஆனால்இ முதலமைச்சர் அவர்கள் முதலில் நீண்ட வேண்டிய விரல் அதிகாரிகளை நோக்கி அல்ல தனது கட்சி சார்ந்தவர்களை நோக்கியே என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கிளிநொச்சியில் வாழ்கின்ற மலையக மக்கள் கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் தற்போது ஓரளவுக்கு அனைத்து துறைகளிலும் துருத்திக்கொண்டு முன்னுக்கு வருகின்ற ஒரு சூழல் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாகஇ தற்போதைய சூழலில் கிளிநொச்சியில் அரச துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களில் கணிசமானவர்கள் கிராமங்களைச் சேர்ந்தவர்களும்இ மலைய மக்களைச் சார்ந்தவர்களுமாகவே காணப்பட்டு வருகின்றனர். இதனைவிடஇ அபிவிருத்தியில் தற்போது கணிசமான மாற்றங்கள் இந்தப் பிரதேசங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தும்இ இந்த நிலைமையில் இன்னும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் அவசியமாகிறது. தற்போதும் முதலமைச்சர் கூறியதுபோன்று சில அதிகாரிகளால் இந்த பிரதேசங்கள் பல புறக்கணிப்புகளுக்கு உள்ளாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதனைவிட முக்கியமாக மலையகத்திலிருந்து வந்து கிளிநொச்சியில் வாழ்கின்ற மக்கள் தாங்கள் குடியிருக்கும் காணிகளுக்கு இதுவரைக்கும் காணி உறுதிகள் வழங்கப்படவில்லை பெரும்பாலான மக்கள் குடியேற்றப்பட்டு முப்பது வருடங்கள் கடந்தும் தங்கள் காணிகளுக்கு எவ்வித ஆவணங்களும் இன்றி காணப்படுகின்றனர். சில பிரதேச மக்களிடம் காணி அனுமதிபத்திரம் மட்டுமே காணப்படுகிறது இது தற்காலிகமான ஒரு ஆவணம். ஆனால் தற்போதைய நிலையில் மண்ணின் மகிமை எனும் திட்டத்தின் கீழ் அந்த பிரதேச மக்களுக்கு நிரந்தர காணி ஆவணங்கள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இருப்பினும் போதிய வேகம் இல்லை.
மேலும்இ இ;ங்கு இன்னுமொரு முக்கிய விடயத்தினை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதாவதுஇ கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் தருமபுரம் எனும் கிராமம் 90 வீதம் மலையக மக்களைக் கொண்ட ஒரு கிராமம். கடந்தகால வன்செயல்களால் பாதிக்கப்பட்டுவந்த மக்களை வெறும் தொழிலாளர் தேவையினை மட்டும் கருதி உருவாக்கப்பட்ட கிராமமாகவே தருமபுரம் காணப்படுகிறது. ஆனால்இ கடந்த முப்பது வருடங்களாக தருமபுரத்தில் வாழ்ந்து வருகின்ற மக்கள் மிக மோசமான புறக்கணிப்புக்குள்ளாக்கப்பட்ட விடயம் தருமபுரம் மண்ணை நனைத்துஇ ஊடறுத்துச் செல்கின்ற கல்மடுக் குளத்தின் நீரை தொடுவதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது.
கல்மடுக் குளத்தில் இருந்து தருமரம் கிராமத்தின் ஊடாக கண்டாவளை நோக்கிச் செல்கின்ற நீர் தருமபுரம் மக்களின் தாகத்தை தீர்ப்பதற்கு முப்பது வருடங்கள் எடுத்தது. இதற்குக் காரணம் மிக மோசமான பிரதேச வாதமே.
எப்பொழுதும் அந்த மக்கள் தொழிலாளியாகவே இருக்க வேண்டும். தங்களின் தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் எனக் கருதிய ஒரு சமூகம்இ கல்மடுக் குளத்தின் நீரை தருமபுரம் மக்கள் பயன்படுத்தி முதலாளியாக மாறிவிடக்கூடாது என்பதில் மிகவும் அக்கறையாக இருந்தனர். இது பிரதேச வாதத்தில் உச்சக்கட்டமே.
தருமபுரம் மக்கள் விடுதலைப் புலிகளிடமும் பல தடவைகள் கல்மடுக் குளத்தின் நீரை சிறுபோக நெற்செய்கைக்காக தங்களுக்கும் வழங்குமாறும் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால்இ அது நிறைவேறியிருக்கவில்லை. தருமபுரத்தின் நடுவே செல்கின்ற வாய்க்கால் நீரை வாளியில் அள்ளியதற்காக வாளால் வெட்டிய சம்பவங்களும் நடந்திருக்கிறது. ஆனால்இ கடந்த 2012 ஆம் ஆண்டு கண்டாவளை புளியம்பொக்கணை கமநலசேவை நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற கல்மடுக்குளம் சிறுபோகக் கூட்டத்தின் தீர்மானம் தருமபுரம் மக்களின் வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்திய கூட்டமாக அமைந்தது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட அரச அதிபர் திருமதி. ரூபதி கேதீஸ்வரன்இ கிளிநொச்சி கமநல சேவைகள் நிலைய உதவி ஆணையாளர் தயாரூபன்இ நீர்ப்பாசனத் திணைக்கள மாவட்ட பிரதித் திட்டப் பணிப்பாளர் சுதாகரன்இ கல்மடுக்குளத்தின் கீழான கமக்கார அமைப்புகள் உட்பட பலர் பங்குபற்றியிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் எடுக்கப்பட்ட தீர்மானம் தருமபுரம் மக்களின் முப்பது வருட கனவை நனவாக்கியது. அதாவது 2012 முதல் கல்மடுக் குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கை உரிமை தருமபுரம் விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டது.
இதன்போது கண்டாவளையைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் வெளிப்படையாகவே தனது பிரதேச வாதத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவரைப் போன்ற பலரும் தருமபுரம் மக்களுக்கு கல்மடுக் குளத்தின் கீழ் சிறுபோகத்திற்கு நீர் வழங்கக்கூடாது என்பதற்கு பல காரணங்களை அடுக்கினார்கள். இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்களின் உறுதியான முடிவு காரணமாக அதே கண்டாவளையைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் முன்மொழிவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது ஒரு வரலாற்றுத் தீர்வாகவும் காணப்பட்டது. இதன் பின்னர் இந்த தீர்மானத்தை முன்மொழிந்த கண்டாவளையைச் சேர்ந்த குறித்த விவசாயி தனது சகாக்களாலேயே பல புறக்கணிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக பலருக்கும் கடிதம் மூலம் அறிவித்திருந்தது. இவ்வாறுதான் கிளிநொச்சி வாழ் மலையக மக்கள் கிளிநொச்சியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
தருமபுரம் மக்களுக்கு நீர் உரிமை வழங்கப்பட்டதே தவிரஇ இன்னமும் அவர்கள் கல்மடுக் குளத்தின் கீழ் நீர்வரி இடாப்பில் நிரந்தரமாக சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்பது புறக்கணிப்பின் தொடர்ச்சியே. இதனை செய்ய வேண்டிய நீர்ப்பாசனத் திணைக்களம் அதனை மேற்கொள்ளவில்லை. வடக்கு மாகாண சபையின் கீழுள்ள நீர்ப்பாசனத் திணைக்களம் இந்த விடயத்தில் பாராபட்சமாக நடப்பதாக அந்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். எனவேஇ கிளிநொச்சிவாழ் மலையக மக்களின் நலன்கள் தொடர்பில் சிலரின் வாய்மொழி மூல அக்கறை என்பது ஆடு நனைவதை எண்ணி ஓநாய் அழுவதைப் போன்றதாகும்.
அத்தோடு கடந்தவார தினக்குரல் பத்தியில் வெளிவந்த தவறான தகவல் என்பது மலையக மக்களின் மீது அக்கறையோடு செயற்படுகின்ற ஒரு சிலரை பாதிப்புக்குள்ளாக்குவதோடு அவர்களின் செயற்பாடுகளையும் ஸ்தம்பிதமடையச் செய்துவிடும்.
வடக்கில் வாழ்கின்ற மலையக மக்கள் கடந்தகால தமிழ் அரசியல் தலைமைகளாலும்இவடக்கு முதலாளி வர்க்கத்தினாலும் வாக்குகளுக்காவும்இதொழிலாளர்கள் தேவைகாகவும் பயன்படுத்தப்பட்டே வந்துள்ளனர். கடந்த கால தலைமைகள் அந்த மக்களை கல்வியறிவில் வளர்நதுவிடாமல் பார்த்துக்கொள்வதில் மிகவும் அக்கறையாக இருந்திருக்கின்றனர். அந்தச சமூகம் கல்வியில் முன்னேற்றமடைந்த சமூமாக மாறினால் தங்களின் தொழிலாளர் தேவையை குறைந்த கூலியில் பூர்த்திசெய்ய முடியாது போய்விடும் என்ற நிலையிலும்இசிந்திக்க முற்பட்டால் அரசியல் பிரதிநிதித்துவம் கோருவார்கள் என்பதாலும் கல்வியில் மிகவும் மோசமாக புறக்கணிக்கப்ட்டனர். இது கட்நத காலம் ஆனால் தற்போது நிலைமை மாற்றம் அடைந்து வருகிறது. இந்த மண்ணில் ஒரு சிலர் இந்த மக்களின் நலன்களில் அக்கறையோடு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.