7/29/2014

| |

வடக்கு முதல்வர் ஜனாதிபதியுடன் சென்றிருந்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும்

மக்களின் பிரச்சினைகளுக்கு சுமுகமாக தீர்வுகாண முயற்சிக்கும் போது சுயலாப நோக்கில் செயற்படும் அரசியல்வாதிகள் அதனைத் திட்டமிட்டுக் குழப்பி வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மக்களின் தேசிய பிரச்சினை உள்ளிட்ட அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்பதையே தாம் விரும்புகின்ற போதும் சுயலாபம் அரசியல்வாதிகள் அதற்கு எதிர்மாறாக செயற்பட்டு வருகின்றனர்.
மக்களின் பிரச்சினைகளக்குத் தீர்வு காண முயற்சிக்கும் போதெல்லாம் அதை அவர்கள் திட்டமிட்டு குழப்பி அதனூடாக அரசியல் ஆதாயத்தை தேடி வருவதாக அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
பருத்தித்துறை வியாபாரி மூலை எரிஞ்சம்மன் கோவிலடி பகுதியிலுள்ள மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியபோதே அமைச்சர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்தியப் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றுக் கொண்ட போது அந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு இலங்கை உட்பட ஏழு அயல்நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது அந் நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.
ஜனாதிபதியின் அழைப்பை முதலமைச்சர் அப்போது நிராகரித்திருந்தார். ஆனால் முதலமைச்சர் ஜனாதிபதியுடன் அங்கு சென்றிருந்தால் மக்களின் கடற்றொழிலாளர் பிரச்சினைக ளுக்கு தீர்வுகளை கண்டிருக்க முடியும்.
இந்நிலையில் எல்லைமீறிய இந்திய மீனவர்களது தொழிற்துறை நடவடிக்கைகளை கட்டுப் படுத்துவதற்கு தமக்கு காலஅவ காசம் தேவையென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்த போது எமது மக்களின் நலன்களுக்காக ஜனாதிபதி நிராகரித்திருந்ததை யும் இங்கு சுட்டிக் காட்டியி ருந்தார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இங்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இறங் குதுறைக்கு சீமெந்து போடுமாறு தெரிவித்த அமைச்சர் அது தொடர் பில் இடர்பாடுகள் எதிர்கொள் ளப்படுமாயின் தமது கவனத் திற்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டதுடன் மக்களின் நிலம் மக்களுக்கானதே என்பதே தமது குறிக்கோள் என்றும் தெரிவித்தார்.