7/05/2014

| |

வாகனத்தை இரகசியமாக தாருங்கள் வாங்குவோம்; தேனீர் விருந்து எல்லாம் வேண்டாம்

வடமாகாணசபை பேரவைத் தலைவர் சிவஞானம் மற்றும் அமைச்சர்கள் ஐங்கரநேசன், குருகுலராஜா, டெனீஸ்வரன் ஆகியோரின் பாவனைக்கென கொள்வனவு செய்யப்பட்ட புதிய வாகனங்கள் நேற்று யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டன. அளுனர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த  வாகனங்கள் இன்று உரியவர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

கொள்வனவு செய்யப்பட்ட ஒவ்வொரு வாகனத்தின் பெறுமதியும் 58 இலட்சம் ரூபாவாகும்.
இவற்றில் கல்வி மற்றும் விவசாய அமைச்சர்களிற்கு நிஷான் பற்றல் (4 சிலிண்டர்) வாகனங்களும், மீன்பிடி அமைச்சரிற்கு மிற்சுபிசி மொன்றியோ ரக வாகனமும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இன்றுகாலை வாகனங்களை பெற வரும் அமைச்சர்கள் மற்றும் பேரவைத் தலைவரிற்கு ஆளுனர் இல்லத்தில் தேனீர் விருந்து ஒன்றை வழங்கஆளுனர்  ஏற்பாடு செய்துள்ளார். எனினும், இந்த தேனீர் விருந்தில் தாங்கள் கலந்து கொள்ளப்போவதில்லை, அடாவடி ஆளுனருடன் தேனீர் விருந்தா என சில அமைச்சர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள பத்திரிகையாளர்களை நேற்றிரவு தொலைபேசியில் அழைத்து தெரிவித்தனர். இதன்படி, இந்த விடயம் சில குடாநாட்டு பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது.