7/31/2014

| |

ஆசியாவில் இலங்கையின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி: சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டு

ஆசியாவில் அபிவிருத்தியடை ந்துவரும் பொருளாதாரங்களில் வேகமாக வளர்ந்துவரும் பொரு ளாதாரமாக இலங்கையின் பொருளாதாரம் காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரி வித்துள்ளது.
இலங்கை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் தயாரித்திருக்கும் அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார செயற்பாடுகள் எதிர்பார்த்ததைவிட முன்னேற்றகரமாக இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
மீட்சிபெற்றுவரும் உலக பொருளாதாரம் இலங்கைக்கு நன்மையளித்திருப்பதாகவும், குறுகிய கால நோக்கில் இது சாதகமான நிலையில் காணப்படுவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பணவீக்கமானது ஒற்றைத் தானத்திற்குக் குறைந்திருக்கும் அதேநேரம், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 7 வீதமாகத் தொடர்ந்தும் காணப்படுகிறது. நிதி பற்றாக்குறையைக் குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சியால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 5.2 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது பொதுக்கடன்களைக் குறைக்கும் என்றும் நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பணவீக்கமானது 3.2 வீதமாகக் காணப்படுகிறது. இலங்கையின் நிதிக் கொள்கையானது ஒத்துப்போகும் இயல்புடையதாகக் காணப்படுகின்றபோதும், தனியார் கடன்களின் வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டின் நிதி நிலைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.