கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் வருடாந்த பரிசளிப்பு விழாவும் புத்தொளி சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் செவ்வாய்கிழமை (15) அதிபர் கா.அருமைராஜா தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக கல்குடா வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி குலேந்திரராஜா , ஜனாதிபதியின் ஆலோசகருரின் இணைப்பாளர் ஆர். தேவராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பாடங்களில் விஷேட திறமை பெற்ற மாணவர்கள் பாரட்டி கௌரவிக்கப்பட்டனர். கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பாரட்டி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.அத்துடன் 'புத்தொளி ' சஞ்சிகையும் அதிதிகளால் வெளியிட்டு வைக்கப்பட்டது.