களுவாஞ்சிக்குடி பிரதேச கமநல அபிவிருத்தித் திணைக்கள காரியாலயத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சியினருக்கு எதுவித வேலையும் கிடையாது. அடக்குமுறைகள், அநீதிகள் நடக்கும்போதுதான் எதிர்க்கட்சிகள் தேவை. இங்கு அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. ஆகவே எமக்கு எதிர்க்கட்சிகள் தேவையில்லை. எமக்கு தேவையானவை அபிவிருத்திகள் மாத்திரம்தான்.
இம்முறை பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில், அதிகளவு நிதி பட்டிருப்பு தொகுத்திக்குத்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்திகள் நான் இருக்கும் வரைக்கும் நடைபெறும் நான் இல்லாவிட்டால் பாரியதொரு வெற்றிடம் வரும்.
தற்போது யழ்ப்பாணத்தில் உள்ள மக்களை விட எமது மக்கள் தலைநிமிர்ந்து நிற்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 சதவீதமான மக்கள் விவசாயிகளாக இருக்கின்றனர்.
தற்போது விவசாயிகளுக்கு நட்டம் ஏற்பட்டால் நட்டஈடுகள் வழங்கப்படுகின்றன, ஓய்வூதியம் வழங்கப்படுகின்றன, காப்பறுதிக் கொடுப்பனவு வழங்கப்படுகின்றன, மானிய விலையில் 500 ரூபாய்க்கு உரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அரசாங்கம் செய்யும் உதவிகளை பெறும் எமது மக்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு வாக்களிப்பார்களேயானால் ஒரு வாக்குக் கூட எதிர்கட்சிக்கு விழ மாட்டாது. ஆனால், எமது மக்கள் உதவிகளை மாத்திரம் பெற்றுவிட்டு எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கின்றனர்.
கடந்த காலத்தில் இருந்த அரசாங்கம் எமது மக்களுக்கு எதுவித அபிவிருத்திகளையும் செய்யவில்லை. ஆனால் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் திவிநெகும திட்டத்தினூடாக வருடாந்தம் 15,000 குடும்பங்கள் நன்மையடைகின்றன. மின்சாரம் 90 சதவீதம் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல செயற்றிட்டங்களால் மட்டக்களப்பு மாவட்டம் அபிவிருத்தி கண்டுவருகின்றது. இன்னும் பாரிய தேவைகள் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு உள்ளது.
தற்போது இரணைமடுக்குளத்து தண்ணீரை யாழ்ப்பாண மக்களுக்கு கொடுக்கக்கூடாது என அங்கிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் தடுக்கின்றது. ஆனால், அம்பாறையில் சிங்கள பிரதேசத்திலிருக்கின்ற குளங்களிலிருந்து எமது படுவான்கரைப் பகுதி அனைத்துக்கும் தண்ணீர் வழங்கப்பட இருக்கின்றது. இதற்கு ஒரு சிங்கள மகனும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இவ்வாறான பெருந்தன்மையுடன் நாம் இருக்கின்றோம்.இவர்களால் எவ்வாறு உரிமையினை வழங்கமுடியும் என்றார்