7/19/2014

| |

முன்னாள் முதலமைச்சர் இருந்த காலம் சிறப்பான காலம் என அனைவரும் கூறுகின்றார்கள் -மாகாண கல்வி அமைச்சர்

இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது.எமது பிள்ளைகளின் கைகளில் பேனாவே இருக்கவேண்டும்.கடந்த காலத்தில் எமது பிள்ளைகள் ஆயுதம் ஏந்தியதினால் எவ்வளவு பிள்ளைகளை நாங்கள் இழந்துள்ளோம் என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும்.இதனால் நாங்கள் அடைந்த நன்மை என்ன.இழப்புகளை சந்தித்த மக்களாகவே உள்ளோம் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மகிழூர்முனை சக்தி வித்தியாலயத்தின் இரண்டுமாடிக்கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கிழக்கு மாகாணத்தில் ஒரு மாதத்தில் 30 பாடசாலைகளில் கல் வைக்கப்படுகின்றது.திறப்பு விழா நடாத்தப்படுகின்றது.கட்டிடங்கள் புனரமைக்கப்படுகின்றது.ஆனால் கல்வியில் இதுவரையில் எதுவித புனரமைப்புகளும் ஏற்படவில்லை.

கல்முனையில் யாழப்பாணத்தில் மாணவர்கள் கைகளில் கத்தியெடுத்து தாக்குகின்றனர்.சில சிங்கள பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் இளம் வயதில் மாணவிகள் கர்ப்பம் தரிக்கின்றனர்.பாடசாலை செல்லும் 19 மாணவிகள் இவ்வாறு கர்ப்பம் தரித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அவ்வாறானால் அவர்கள் எவ்வாறான கல்வியை பெறுகின்றனர்.

நாங்கள் பாடசாலைகளை சீரமைக்கின்றோம்.ஆனால் இன்னும் கல்வியை சீரமைக்கவில்லை.

என்னை சந்திக்கும் ஆசிரியர்கள்,அதிபர்கள் கட்டிடம் ,தளபாடங்கள் கேட்டுவருகின்றனரே தவிர எவரும் தங்களது பாடசாலையின் கல்வி தொடர்பில் கதைப்பது இல்லை.நாங்கள் இன்று பின்நோக்கிய நிலையிலேயே சென்றுகொண்டிருக்கின்றோம்.

இங்கு மேடையில் பிரதியமைச்சரும் முன்னாள் முதலமைச்சரும் உள்ளனர். இவர்கள் இங்கு அமர்ந்துள்ளது எம்.ஜி.ஆர்,சிவாஜிகணேசன் உள்ளதுபோல் உள்ளது.ஆனால் இவர்கள் நம்பியார்,எம்.ஜி.ஆர் இருந்தால் எப்போதும் பிரச்சினைகள்தான் ஏற்படும்.

சென்ற மாகாணசபையின் முதலமைச்சர் இருந்தபோது அவர் சிறப்பான முறையில் செயற்பட்டார்.அனைத்து மக்களும் அவர் சிறந்த சேவையாற்றியதாக தெரிவித்தனர்.ஆனால் இன்றைய மாகாணசபையில் அந்த நிலைமை காணமுடியவில்லை.இதற்போதைய முதலமைச்சருக்கு அந்த வரவேற்பு இல்லை.

நீங்கள் இங்கு நான் வந்தபோது பாடசாலை மைதானம் செய்வதற்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தீர்கள் இதற்காக அடுத்த ஆண்டு பத்து இலட்சம் ரூபாவினை ஒதுக்கித்தருகின்றேன்.

இங்கு வீதிகளை,பாடசாலைகளை நிர்மாணிப்பது,புனரமைப்பது என அனைத்து பணியையும் ஆற்றுவது அரசாங்கமாகும்.நாங்கள் அரசாங்கத்துடன் இருக்கும்போதே அவற்றினை பெற்றுக்கொள்ளமுடியும்.

முன்னாள் முதலமைச்சர் இருந்த காலம் சிறப்பான காலம் என அனைவரும் கூறுகின்றார்கள்.இன்று நான்கு முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர்.நான் ஒருவனே சிங்கள அமைச்சராக உள்ளேன்.அதிகளவு தமிழர்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் அமைச்சர்கள் இல்லை.இது தொடர்பில் நீங்கள் சிந்திக்கவேண்டும்.

அதிகளவு தமிழ் மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு உதவவேண்டும்.அதற்காக அரசாங்கத்துக்குள் வந்து தமது பிரதேச மக்களுக்கு உதவவேண்டும்.

இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது.எமது பிள்ளைகளின் கைகளில் பேனாவே இருக்கவேண்டும்.கடந்த காலத்தில் எமது பிள்ளைகள் ஆயுதம் ஏந்தியதினால் எவ்வளவு பிள்ளைகளை நாங்கள் இழந்துள்ளோம் என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும்.இதனால் நாங்கள் அடைந்த நன்மை என்ன.இழப்புகளை சந்தித்த மக்களாகவே உள்ளோம்.