7/14/2014

| |

கிழக்கு பல்கலைக்கழக வெளிவாரி பட்டதாரிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

1.jpgகிழக்கு பல்கலைக்கழகத்தில் வெளிவாரி கல்வியை முடித்து வெயியேறும் பட்டதாரிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா அவர்களின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இந்நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பி.ரணேபுர கலந்துகொண்டு சிறப்பித்தார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் நல்லையா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில்; அதிதிகள், பீடாதிபதிகள் மற்றும் பட்டதாரிகள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இரண்டு கட்டமாக நடைபெற்ற மேற்படி நிகழ்வில் முதலாவது அமர்வில் 225 கலைமாணிப்பட்டங்களும் இரண்டாவது அமர்வில் 203 கலைமாணிப்பட்டங்களும் 05 நிர்வாகமாணிப்பட்டங்களும் 01 விஞ்ஞானமாணிப்பட்டமும் 01 விஞ்ஞான முகாமைத்துவமாணிப்பட்டத்திற்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இம்முறை 435 மாணவர்கள் வெளிவாரி பட்டப்படிப்பை முடித்து வெளிவாரி பட்டதாரிகளாக வெளியேறுகின்றமை குறிப்பிடத்தக்கது.