20 பேர் பலி: பலஸ்தீன உயிர்ப்பலி 1,283 ஆக உயர்வு
பொதுமக்கள் இருப்பதாக பலமுறை எச்சரிக்கப்பட்ட நிலையிலும் காசாவில் அகதிகள் தங்கியுள்ள ஐ.நா. பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் n'ல் தாக்குதல் நடத்தியதில் சுமார் 20 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஒட்டுமொத்தமாக காசாவெங்கும் நேற்றைய தினத்திலும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மேலும் 59 பலஸ் தீனர்கள் பலியாயினர்.
"உலகமே அவமானத்துடன் நிற்கிறது" என்று இந்த தாக்குதல் குறித்து ஐ.நா. பேச்சாளர் கிரிஸ் கின்னஸ் கவலை தெரிவித்திருந்தார். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் இடம்பெயர்ந்து ஐ.நா. பாடசாலைகளில் தஞ்சம் புகுந்திருக்கும் பலஸ்தீன அகதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது ஒரு வாரத்திற்குள் இது இரண்டா வது முறையாகும். இந்த புதிய வன்முறைகளுடன் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,283 ஆக உயர்ந்துள்ளது.
ஐ.நா.வின் கணிப்பின்படி கொல்லப்பட்டவர்களில் முக்கால் பங்கினர் அப்பாவி பொதுமக்களாவர். இதில் 240க்கும் அதிகமான சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது கொல்லப்பட்ட பொதுமக்களில் 29 வீதமாகும்.
மறுபுறத்தில் பலஸ்தீன போராளிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேல் படையினரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது. மூன்று இஸ்ரேல் சிவிலியன்களும் பலியா கினர். எனினும் இதுவரை 90க்கும் அதிகமான இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஹமாஸின்; ஆயுதப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதில் nஜபலியா அகதி முகாமில் இருக்கும் ஐ.நாவினால் நடத்தப்படும் பாடசாலை மீதே நேற்று இஸ்ரேல் n'ல் தாக்குதல் நடத்தியிருப்பதாக காசா அவசரப்பிரிவின் பேச்சாளர் அஷ்ரப் அல் குத்ரா குறிப்பிட்டார். பாடசாலையின் பெண்கள் பிரிவில் இருக் கும் இரு வகுப்பறைகள் மற்றும் குளியலறை மீதே n'ல் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பலஸ்தீனத் திற்கான ஐ.நா. அகதிகள் நிலையம் குறிப்பிட்டுள்ளது.
ஐ.நா. நிவாரண உதவிகளுக்கான பிரிவின் பேச்சாளர் கின்னஸ் குறிப்பிடும்போது, ஜபலியா பாடசலையில் இடம்பெயர்ந்த அகதிகளே தங்கியிருப்பதாக இஸ்ரே லுக்கு 17 தடவைகள் அறிவுறுத்தப்பட்டது என்றார். "இந்த உயிர்ப்பலிகள் ஏற்பட்ட தாக்குதலுக்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னரும் நாம் இஸ்ரேலை அறிவுறுத்தி இருந்தோம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த தாக்குதலில் சிறுவர்கள் பெண்கள் என 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 23 தினங்களாக காசா மீது இஸ்ரேல் கடல், வான் மற்றும் தரைவழியாக நடத்தும் தாக்குதலால் இடம்பெயர்ந்துள்ளவர்களில் குறைந்தது 180,000 பலஸ் தீனர்கள் அங்குள்ள ஐ.நா.வினால் நடத்தப்படும் பாட சாலைகளிலேயே தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஆனால் 1.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் இதுவரை 215,000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக ஐ.நா. கணித்துள்ளது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் நேற்று புதன்கிழமை காலை வரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காசாவில் மொத்தம் 59 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு 110 பேர் காய மடைந்துள்ளனர். இதில் காசா நகரில் நேற்றுக் காலை இஸ்ரேல் நடத்திய n'ல் தாக்குதலில் கலீலி என்பவ ரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இதில் நால்வர் சிறுவர்களாவர்.
ஆனால் இஸ்ரேல் இராணுவம் நேற்றுக்காலை வெளி யிட்ட அறிக்கையில் நள்ளிரவு தொடக்கம் காசாவில் 75 தீவிரவாத தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் தாக்குதல்களில் காசாவில் அதிக உயிர்ப்பலி கொண்ட தினமாக இருந்தது. அன்றைய தினத்தில் மாத்திரம் குறைந்தது 100 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அன்றை தினத்தில் காசாவில் இருக்கும் ஒரே மின்சார உற்பத்தி நிலையமும் தாக்குதலுக்கு உள்ளானது.
இந்த நிலையில் முற்றாக சேதமடைந்திருக்கும் இந்த மின்சார உற்பத்தி நிலையத்தை சீரமைப்பதற்கு குறைந்தது ஒரு ஆண்டு எடுத்துக் கொள்ளும் என்று பலஸ்தீன மின்சக்தி அதிகார சபையின் தலைவர் பாத்தி அல் ஹெய்க் கலிக் குறிப்பிட்டார்.
ஏற்கனவே மின்சார தட்டுப்பாட்டால் தவித்துவரும் காசா இந்த தாக்குதல் மூலம் பாரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. உடனடியாக மின்சார விநியோகம் உறுதிசெய்யப்படாவிட்டால் காசா பாரிய மனிதாபிமான பிரச்சினையை எதிர்நோக்க வேண்டி வரும் என்று காசா மின்சார விநியோக நிறுவனத்தின் பேச்சாளரான ஜமால் டர்தசாவி எச்சரித்திருந்தார்.
இந்த மின்சார தடை மருத்துவமனைகள், நீர் விநியோகத்திலும் பாதிப்பை செலுத்தும் என்று அவர் எச்சரித்தார்.
அதேபோன்று இஸ்ரேல் யுத்த விமானம் கடந்த செவ் வாய்க்கிழமை காசாவின் உத்தியோகபு+ர்வ தொலைக் காட்சி சேவையான அல் அக்ஸாவையும் தாக்கியது. இந்த தாக்குதலை அடுத்து அல் அக்சா ஒளிபரப்புகள் பல மணிநேரம் தடைப்பட்டுள்ளது.
காசா மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள் தொட ரும் நிலையில் மோதல் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் இராஜதந்திர முயற்சிகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதில் தற்காலிக யுத்த நிறுத்த பேச்சு வார்த்தையில் ஈடுபட பலஸ்தீன தரப்பு நேற்று எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு விரைந்துள்ளது. இதில் காசாவை ஆளும் ஹமாஸ் இணைந்திருக்கிறதா என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை.
இதில் 24 மணிநேர யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு ஹமாஸ் இணக்கம் தெரிவித்திருப்பதாக பலஸ்தீனின் பத்தாஹ் தரப்பு குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் காலம் பற்றி உறுதி செய்யப்படவில்லை. இது குறித்து பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ்; ஹமாஸ் தலைவர் காலித் மி'h லுடன் இரு தினங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருவ தாக பத்தாஹ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
ஆனால் இஸ்ரேல் தரப்பு முதலில் முன்வரும்வரை புதியதொரு உடன்பாடொன்றிற்கு தாம் முன்வரப்போவதில்லை என்று ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது. "மனிதாபிமான உடன் படிக்கை ஒன்றுக்கு இஸ்ரேலின் அர்ப்பணிப்பு தேவை. ஆக்கிரமிப்பு தொடரும் நிலையில் எமது குழந்தைகள் கொல்லப்படும் சுழலில் எமது தரப்பில் நாம் உடன்பா டொன்றை அறிவிக்க முடியாது" என்று ஹமாஸ் பேச்சா ளர் சமி அபு+ சுஹ்ரி சுட்டிக்காட்டினார்.
காசா மீதான முற்றுகை விலக்கப்படும்வரை நிரந்தர யுத்த நிறுத்தம் ஒன்றை ஹமாஸ் நிராகரித்து வருகிறது.
ஆனால் புதிய யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு உதவுமாறு இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அமெரிக்க இராஜhங்கச் செயலாளர் ஜோன் கெர்ரியை அணுகி யுள்ளார். "யுத்த நிறுத்தம் ஒன்றின் சாத்தியம் குறித்து நாம் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினோம்" என்று ஜோன் கெர்ரி செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டிருந்தார்.
காசா மீது படையெடுத்திருக்கும் இஸ்ரேல் துருப்புகள் அங்குள்ள ஹமாஸ் சுரங்கப்பாதைகள் முற்றாக அழிக்கப்படும்வரை பின்வாங்கப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் காசா மீதான இஸ்ரேலின் புதிய தாக்குதல் அதிக தினங்கள் நீடித்த தாக்குதலாக மாறி யுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற காசா-இஸ்ரேல் மோதல் எட்டு தினங்களில் முடிவுக்கு வந்தது. அதே போன்று கடந்த 2008 ஆம் ஆண்டு மோதல் 22 நாட்கள் வரை நீடித்தது. ஆனால் தற்போதைய மோதல் 24 ஆவது தினத்தை எட்டியுள்ளது.