செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புலுட்டுமானோடை குளத்தை புணரமைப்புச் செய்வது தொடர்பாக மக்களிடமும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடுவதற்காக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும்கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் நேரடியாக விஜயம் செய்தார் இப்புலுட்டு மானோடை குளத்தை புனர் நிர்மானம் செய்வதினால் இக்குளத்தை சுற்றி அமைந்துள்ள நடுவுண்டரியா மடு கண்டம், விற்பனைமடு கண்டம் உள்ளிட்ட பல பகுதிகளின் சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கக்கூடியதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு அக்கிராமவாசிகளின் விவசாயப் பிரச்சினைகள் ,யானைகளினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவது சம்மந்தமான பிரச்சினைகளும், கலந்தரையாடப்பட்டது
அத்தோடு அக்கிராமவாசிகளின் விவசாயப் பிரச்சினைகள் ,யானைகளினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவது சம்மந்தமான பிரச்சினைகளும், கலந்தரையாடப்பட்டது