பெண்கள் சந்திப்பு 26/27 –ஜுலை 2014 - லண்டன் –
இரு நாட்கள் லண்டனில் நிகழ்ந்த பெண்கள் சந்திப்பு சிந்தனையை கிளறும் உரைகள், கலை நிகழ்ச்சிகள், உற்சாகமான கருத்துப்பரிமாற்றங்களுடன் இனிதே நடந்து முடிந்தது.
பிரித்தானியாவில் வீட்டுவன்முறைக்கெதிரான இயக்கத்தின் வரலாற்றில் ஆரம்பித்து புகலிடத்தில் தமிழ்ப் பெண்கள் முகங் கொடுக்கும் வீட்டு வன்முறை சார்ந்த பிரச்சினைகள், தங்கள் வாழ்வாதாரத்துக்காக இங்குள்ள அரசுகளுடன் அவர்கள் எதிர் நோக்கும் சவால்கள் வரை ஒரு பட்டறை மூலம் வெளி கொணரப்பட்டது. மூன்று பெண் எழுத்தாளர்களின்( புஷ்பராணி – அகாலம், தமிழ்கவி – ஊழிக்காலம், ஷர்மிளா செய்யித் – உம்மத்) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படைப்புக்களின் அறிமுகங்களின் தொடர்ச்சி அடுத்த நிகழ்வான போருக்குப் பின் வட கிழக்கு பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடலுக்கு இட்டுச்சென்றது. உள நல வளமும் பெண்களும் என்கின்ற தலைப்பிலான கலந்துரையாடல் முதல் நாள் கலந்துரையாடலுக்கு மேலும் உரமிட்டது. 49 பெண்கள் வருகை தந்திருந்தனர். அத்துடன் 5 சிறுமிகளும் கலந்து கொண்டனர். அடுத்த பெண்கள் சந்திப்பு பேர்ளினில் நடைபெறுவதாக முடிவெடுக்கப்பட்டது. மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்ட லண்டன் சந்திப்பாளர்கள் தொடர்ந்தும் இவ்வாறான கலந்துரையாடல்கள் பெண்களிடையே நடைபெற வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.

நன்றி முகனூல்