7/31/2014
| |
காசாவில் அகதிகள் தஞ்சம் புகுந்திருக்கும் ஐ.நா. பாடசாலை மீதும் இஸ்ரேல் தாக்குதல்
| |
ஆசியாவில் இலங்கையின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி: சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டு
| |
கணிதம் சித்தியடையாவிட்டாலும் உயர்தரம் கற்கலாம்! கல்வி அமைச்சின் சுற்று நிருபம் வெளியாகியது
| |
வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் இன்று நடத்தும் கணிதபாட பரீட்சை வினாத்தாள் முன்னரே வெளியானது! -
7/30/2014
| |
ஒடுக்கப்பட்ட மக்களின் போர்க்குரலோன்று ஓய்ந்துபோனதோ
7/29/2014
| |
வடக்கு முதல்வர் ஜனாதிபதியுடன் சென்றிருந்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும்
7/28/2014
| |
பெண்கள் சந்திப்பு 26/27 –ஜுலை 2014 - லண்டன்
பிரித்தானியாவில் வீட்டுவன்முறைக்கெதிரான இயக்கத்தின் வரலாற்றில் ஆரம்பித்து புகலிடத்தில் தமிழ்ப் பெண்கள் முகங் கொடுக்கும் வீட்டு வன்முறை சார்ந்த பிரச்சினைகள், தங்கள் வாழ்வாதாரத்துக்காக இங்குள்ள அரசுகளுடன் அவர்கள் எதிர் நோக்கும் சவால்கள் வரை ஒரு பட்டறை மூலம் வெளி கொணரப்பட்டது. மூன்று பெண் எழுத்தாளர்களின்( புஷ்பராணி – அகாலம், தமிழ்கவி – ஊழிக்காலம், ஷர்மிளா செய்யித் – உம்மத்) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படைப்புக்களின் அறிமுகங்களின் தொடர்ச்சி அடுத்த நிகழ்வான போருக்குப் பின் வட கிழக்கு பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடலுக்கு இட்டுச்சென்றது. உள நல வளமும் பெண்களும் என்கின்ற தலைப்பிலான கலந்துரையாடல் முதல் நாள் கலந்துரையாடலுக்கு மேலும் உரமிட்டது. 49 பெண்கள் வருகை தந்திருந்தனர். அத்துடன் 5 சிறுமிகளும் கலந்து கொண்டனர். அடுத்த பெண்கள் சந்திப்பு பேர்ளினில் நடைபெறுவதாக முடிவெடுக்கப்பட்டது. மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்ட லண்டன் சந்திப்பாளர்கள் தொடர்ந்தும் இவ்வாறான கலந்துரையாடல்கள் பெண்களிடையே நடைபெற வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.
7/27/2014
| |
ரணில் விக்ரமசிங்க குழுவுடன் இணையலாம் என்றால் ஏன்? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்க கூடாது
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பேரினவாதி என வர்ணிக்கும் இவர்கள் ரணிலை என்னவென்று சொல்லப்போகின்றார்கள் என்றும் அவர் வினவியுள்ளார்.
பொத்துவில் குண்டுமடு மகளிர் அமைப்பின் தலைவி எ.பிரதீபா ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (24) காலை நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.இனியபாரதி மேற்கண்டவாறு கூறினார்.
பொத்துவில் குண்டுமடு பிரதேச வரலாற்றில் தேர்தல் காலங்களில் அவ்வப்போது காளான்களாக முளைக்கும் அரசியல்வாதிகள் வாய்ப்பேச்சில் வீரர்களாக வார்த்தைகளை கூறி வாக்குகளை பெற்றபின் மறைந்து விடுகின்றனர். இந்த நிலையில் பிரதேச சபையோ, பிரதேச செயலகமோ தங்களது பிரதேசத்தை அபிவிருத்தி விடயத்தில் புறந்தள்ளி பார்க்கின்றனர். இதற்கு பொறுப்பு கூறுவது யார் போன்ற கேள்விகள் இங்கு வாழும் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்து உரையாற்றிய இனியபாரதி, யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு எதிராக செயற்படுவதே கூட்டமைப்பின் கொள்கை. அதனால் மாத்திரதே தமிழர்களது வாக்கை பெற்று தங்களது இருப்பை தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதே இவர்களது நம்பிக்கையாகும்.
இவர்களது நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க புத்திஜீவிகளும் பொதுமக்களும் சற்று சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணமிது. அவ்வாறு முன்கூட்டி சிந்தித்திருந்தால் இவ்வாறான கேள்விகள் என்னிடம் கேட்க வேண்டிய தேவை இருந்திருக்காது என்றார்.
தன்மானமும் தனித்துவமும் உள்ளதாக கூறிக்கொள்ளும் கூட்டமைப்பு இன்று ரணிலுடன் கூட்டிணையும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். அப்படியானால் அவர்களின் தன்மானமும் தனித்துவமும் எங்கே போனது. ஆகவே தங்களது இருப்பிற்காக தமிழர்களை பலிக்கிடவாக மாற்றும் இவர்களது அரசியல் கொள்கைக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்; என்றார்.
| |
பலாச்சோலை கிராமத்தில் யானை தாக்கியதில் ஒருவர் பலி
உயிரிழந்தவர் கதிர்காமத்தம்பி நடராஜா(வயது 61) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ,காயமடைந்தவர்கள் பவளசிங்கம் பூபாலரெத்தினம்(வயது 39),கேதாரம் அமிர்தலிங்கம் (வயது 21) ஆவர்.
காயமடைந்தவர்கள் இருவரையும் யானை வீதியில் வைத்து தாக்கியுள்ளதுடன் கொல்லப்பட்டவரை வளவிற்குள் வைத்து பல தடைவை தாக்கி மரத்தில் தூக்கியும் அடித்துள்ளது.
தாக்கிவிட்டு வீதியால் சென்ற யானை காயமடைந்த இருவரையும் தாக்கியுள்ளது. அத்துடன் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி சின்னவத்தை கிராமத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரும் காயமடைந்துள்ளார்.
யானை கிராமத்திற்கு வந்தவுடன் 6 மணிக்கு அதிகாரிகளுக்கு அறிவித்தும் 10 மணிக்கே வந்ததாக கிராமமக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் எங்களுக்கு வர வாகனம் இல்லை சொந்த வாகனத்திலேயே வந்தோம். அத்துடன் மாவட்டத்திற்கு மூவரே உள்ளோம் என்கின்றனர் அதிகாரிகள்.
இறுதியாக அதிகாரிகள் செல்ல எத்தணித்தபோது பெண்கள் வழிமறித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.யானையை துரத்திவிட்டு செல்லும்படி கேட்டுக்கொண்டனர்.
இராணுவத்தினரின் சமரச முயற்சி வாக்குறுதியை அடுத்து அதிகாரிகளை சின்னவத்தை கிராமத்திற்கு செல்ல பல மணிநேரத்தின் பின் கிராம மக்கள் அனுமதித்தனர்.
7/26/2014
| |
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது படகுகளை விடுவிக்குமாறும் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்
7/25/2014
| |
முஸ்லிம் கலாசார உடையுடன் பாடசாலை செல்ல அனுமதி
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன் மக்கள் நியாயமான முறையில் நடந்து கொள்வதை காண விரும்புவதாகவும் கூறியுள்ளது.
முஸ்லிம் பெற்றோர், ஹிஜாப் அணிந்து பாடசாலை வளாகத்திற்குள் வருவதற்கு ராஜகிரிய, ஜனாதிபதி பாலிகா வித்தியாலய நிர்வாகம் அனுமதிக்காமையை எதிர்த்து, அவர்கள் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு உட்படுத்திய போதே உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுக்கள், பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான நீதியரசர்களான கே.ஸ்ரீபவான், பிரியந்த ஜயவர்த்தன ஆகியோர் கொண்ட குழுவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இந்த கட்டளையானது பெற்றறோருக்கு மட்டுமே பொருந்தும் என்றும் பாடசாலை பிள்ளைகளுக்கு பொருந்தாது என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன், பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட சட்டங்களுக்கு அமைந்து நடக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, ஹிஜாபை பாடசாலைக்கு அணிந்து வரக்கூடாது என்று தனக்கு ராஜகிரிய, ஜனாதிபதி வித்தியாலய அதிபரால் கொடுக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து அந்த வித்தியாலயத்தில் பயிலும் 11 வயது மாணவியான பாத்திமா ஹகீனாவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில், வித்தியாலயத்தின் அதிபர் தக்சல நயன பெரேரா, பிரதி அதிபர் ஹேமமாலி, 7ஆம் ஆண்டு வகுப்பாசிரியை திருமதி நடோதுன்ன ஆகியோருடன் மாகாண கல்வி பணிப்பாளர், கல்வியமைச்சர் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அந்த மாணவி தனது மனுவில் பாடசாலை அதிபரால் தான் தீவிரமான மனக்கஷ்டங்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தனது சமய ஆசார முறைப்படி அணியும் ஆடையை அணியக்கூடாது என்று நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் மேலும் இந்த அதிபர், முஸ்லிம் மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கு எதிரான மனேநிலையில் உள்ளவர் என்றும் தெரிவித்திருக்கிறார்.
வித்தியாலய அதிபரின் இந்த நிலைப்பாடு கல்வி அமைச்சினால் டிசெம்பர் 12ஆம் திகதி அனுப்பப்பட்ட சுற்று நிருபத்துக்கு எதிரானது என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த சுற்று நிருபத்தின்படி எல்லா தேசிய, மாகாண, தனியார் பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள், தங்கள் சமய ஆசாரத்திற்கு அனுசரணையான பாடசாலை உடையை அணிந்து வரலாம் என்று கல்வி அமைச்சில் செயலாளரால் கூறப்பட்டிருக்கிறது என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றுமொரு அடிப்படை உரிமை மீறல் மனு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவிருக்கின்றது.
7/21/2014
| |
முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்
இரணைமடு குடிநீர் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 2300 மில்லியன் அமெரிக்க டொலரில் பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனத்தினால் ஒதுக்கப்பட்ட 48 மில்லியன் அமெரிக்க டொலரினை அந்நிறுவனம் மீளப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்- அந்நிதியினை அந்நிறுவனம் மீளப்பெறாமல் வட மாகாண சபை மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை தடுத்து நிறுத்தக் கோரியும்- குறித்த நிதியினை அந்நிறுவனம் மீளப்பெற்றால் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை பதவி விலகக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50ற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
| |
வரையறுக்கப்பட்ட கருக்கலைப்பை சட்டரீதியாக்க இலங்கை தீர்மானம்
| |
வன்னிவாழ் மலையகமக்கள் மீது அப்பட்டமான யாழ்-மேலாதிக்கம்
| |
வடமாகாண சபை எனது கனவு: டக்ளஸ்
வடமாகாண சபை எனது கனவு: டக்ளஸ்
வடமாகாணசபை என்னுடைய கனவு. அது என்னுடைய கைகளுக்கு கிடைத்திருந்தால் மூன்றிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் செல்வம் கொழிக்கும் மாவட்டங்களாக வடமாகாணத்திலுள்ள மாவட்டங்களை மாற்றியிருப்பேன். ஆனால் துரதிஷ்டவசமாக எனது கைகளுக்கு கிடைக்காமல் போய்விட்டது என்று பாராம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) தெரிவித்தார்.
வாடகை முச்சக்கரவண்டி உரிமையாளருக்கான மரண சகாயநிதி உதவித்திட்டம் அறிமுகப்படுத்தும் விழா இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'எமது மக்களுக்காகத் தான் நான் அரசியலில் அங்கம் வகிக்கின்றேன். அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் தான் நான் மக்களை பாதுகாக்கவோ மக்களுக்கு உதவவோ வழிகாட்டவோ முடிகிறது' என்றார்.
'என்னுடைய தனிப்பட்ட விருப்பங்களுக்காக மக்களை அடகு வைக்க முடியாது. என்றும் மக்களுக்கு உதவ வேண்டுமென்றால் நான் அரசாங்கத்தில் இருக்க வேண்டும். அதிகாரத்தைக் கொண்டுதான் மக்களின் பிரச்சினைகளை, நியாயமான கோரிக்கைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும்' என்று சுட்டிக்காட்டினார்.
'முச்சக்கரவண்டி உரிமையாளருக்கான மரண சகாயநிதியோடு மட்டும் நின்றுவிடாது மேலதிகமான வருவாயை ஈட்டக்கூடிய வகையில் பல திட்டங்களை செயற்படுத்தவுள்ளோம். முச்சக்கரவண்டி சங்கத்தின் கீழ் அனைத்து சாரதிகளும் பதிவை மேற்கொண்டு சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.
என்றும் மக்கள் சரியான நிலைப்பாடு எடுக்கின்ற பட்சத்தில் சாரதிகளுக்குரிய ஓய்வூதியம் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இருக்கின்ற பொலிஸ் மற்றும் தரிப்பிடவசதி பிரச்சினைகளையும் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி என்னால் திட்டங்களைச் செயற்படுத்த முடியும்' என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
7/20/2014
| |
இரணைமடு தண்ணீரை யாழ்ப்பாணம் கொண்டுசெல்ல முடியாது ஆனால் அம்பாறை தண்ணீர் படுவான்கரைக்கு கொண்டுவருகிறோம்
7/19/2014
| |
முன்னாள் முதலமைச்சர் இருந்த காலம் சிறப்பான காலம் என அனைவரும் கூறுகின்றார்கள் -மாகாண கல்வி அமைச்சர்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மகிழூர்முனை சக்தி வித்தியாலயத்தின் இரண்டுமாடிக்கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கிழக்கு மாகாணத்தில் ஒரு மாதத்தில் 30 பாடசாலைகளில் கல் வைக்கப்படுகின்றது.திறப்பு விழா நடாத்தப்படுகின்றது.கட்டிடங்கள் புனரமைக்கப்படுகின்றது.ஆனால் கல்வியில் இதுவரையில் எதுவித புனரமைப்புகளும் ஏற்படவில்லை.
கல்முனையில் யாழப்பாணத்தில் மாணவர்கள் கைகளில் கத்தியெடுத்து தாக்குகின்றனர்.சில சிங்கள பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் இளம் வயதில் மாணவிகள் கர்ப்பம் தரிக்கின்றனர்.பாடசாலை செல்லும் 19 மாணவிகள் இவ்வாறு கர்ப்பம் தரித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அவ்வாறானால் அவர்கள் எவ்வாறான கல்வியை பெறுகின்றனர்.
நாங்கள் பாடசாலைகளை சீரமைக்கின்றோம்.ஆனால் இன்னும் கல்வியை சீரமைக்கவில்லை.
என்னை சந்திக்கும் ஆசிரியர்கள்,அதிபர்கள் கட்டிடம் ,தளபாடங்கள் கேட்டுவருகின்றனரே தவிர எவரும் தங்களது பாடசாலையின் கல்வி தொடர்பில் கதைப்பது இல்லை.நாங்கள் இன்று பின்நோக்கிய நிலையிலேயே சென்றுகொண்டிருக்கின்றோம்.
இங்கு மேடையில் பிரதியமைச்சரும் முன்னாள் முதலமைச்சரும் உள்ளனர். இவர்கள் இங்கு அமர்ந்துள்ளது எம்.ஜி.ஆர்,சிவாஜிகணேசன் உள்ளதுபோல் உள்ளது.ஆனால் இவர்கள் நம்பியார்,எம்.ஜி.ஆர் இருந்தால் எப்போதும் பிரச்சினைகள்தான் ஏற்படும்.
சென்ற மாகாணசபையின் முதலமைச்சர் இருந்தபோது அவர் சிறப்பான முறையில் செயற்பட்டார்.அனைத்து மக்களும் அவர் சிறந்த சேவையாற்றியதாக தெரிவித்தனர்.ஆனால் இன்றைய மாகாணசபையில் அந்த நிலைமை காணமுடியவில்லை.இதற்போதைய முதலமைச்சருக்கு அந்த வரவேற்பு இல்லை.
நீங்கள் இங்கு நான் வந்தபோது பாடசாலை மைதானம் செய்வதற்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தீர்கள் இதற்காக அடுத்த ஆண்டு பத்து இலட்சம் ரூபாவினை ஒதுக்கித்தருகின்றேன்.
இங்கு வீதிகளை,பாடசாலைகளை நிர்மாணிப்பது,புனரமைப்பது என அனைத்து பணியையும் ஆற்றுவது அரசாங்கமாகும்.நாங்கள் அரசாங்கத்துடன் இருக்கும்போதே அவற்றினை பெற்றுக்கொள்ளமுடியும்.
முன்னாள் முதலமைச்சர் இருந்த காலம் சிறப்பான காலம் என அனைவரும் கூறுகின்றார்கள்.இன்று நான்கு முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர்.நான் ஒருவனே சிங்கள அமைச்சராக உள்ளேன்.அதிகளவு தமிழர்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் அமைச்சர்கள் இல்லை.இது தொடர்பில் நீங்கள் சிந்திக்கவேண்டும்.
அதிகளவு தமிழ் மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு உதவவேண்டும்.அதற்காக அரசாங்கத்துக்குள் வந்து தமது பிரதேச மக்களுக்கு உதவவேண்டும்.
இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது.எமது பிள்ளைகளின் கைகளில் பேனாவே இருக்கவேண்டும்.கடந்த காலத்தில் எமது பிள்ளைகள் ஆயுதம் ஏந்தியதினால் எவ்வளவு பிள்ளைகளை நாங்கள் இழந்துள்ளோம் என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும்.இதனால் நாங்கள் அடைந்த நன்மை என்ன.இழப்புகளை சந்தித்த மக்களாகவே உள்ளோம்.