6/14/2014

| |

உத்வேகமாக பதினோராம் ஆண்டில் தடம்பதிக்கும் உதயம்

உத்வேகமாக பதினோராம் ஆண்டில் தடம்பதிக்கும் உதயம்

சுவிஸ் நாட்டிலிருந்து கிழக்குமாகாண உறவுகளின் சங்கமிப்பில் உருவானதே உதயம் அமைப்பாகும்.சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இந்த உதயமானது கிழக்கில் வாழும் ஏழை மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக திகழுகின்றது. கடந்த யுத்த காலங்களில் தமது கல்விவசதியை தொலைத்து நின்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கும்  மாணவர்களுக்கும்  பலவிதமான உதவிகளை செய்துவருவதன் மூலமும் வாழ்வில் நலிவுற்றோர் பலருக்கு பொருளாதார மேம்பாடுகருதி பலவித உதவிகளை அளித்து வருவதன் மூலமும்  கிழக்கில் வாழும் மக்களிடையே உதயம் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளது.ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சைக்கு தோன்றும் மாணவர்களுக்கான சிறப்பு உதவிகள்,பல்கலைகழக மாணவர்களுக்கான மாதாந்த நிதியுதவி திட்டங்கள்,என்று பின்தங்கிய மற்றும் எல்லைகிராமங்களான புனானை நாவிதன்வெளி, பொத்துவில் போன்ற  பலபகுதி வாழ் மாணவர்களின் வாழ்விலும் ஒளியேற்றி தனது சேவையை உதயம்  வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது..ஆனால் தமிழ் தேசிய ஊடகங்கள் என பிதற்றிக்கொள்ளும் செய்தி ஊடகங்கள் உதயத்தின் செயல்பாடுகளை இருட்டடிப்பு செய்வது மட்டுமன்றி உதயத்தின் மீதான சேறடிப்பிலும் ஈடுபட்டி வருகின்றன.உதயம் தொடங்கப்பட்டவுடன் இனி  "உபத்திரவம்தான்" என்று சபித்த ஊடக வன்முறைகளையும் தாண்டி தனது பத்தாவது ஆண்டை அண்மையில் 08/06/2014 அன்று  உதயம் அமைப்பினர் சிறப்பாக கொண்டாடினர்.  சூரிச் நகரில் இடம்பெற்ற இந்த விழாவில் பல கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.இவ்விழாவுக்கு ஐரோப்பாவின் பலபகுதிகளில் இருந்தும் கிழக்கு மாகாண உறவுகள் கலந்து கொண்டமைசிறப்பம்சமாகும்.தமது கடந்தகால பணிகள் பற்றிய சிறப்பு இறுதட்டு வெளியீடும் இவ்விழாவில் இடம்பெற்றது. பத்தாண்டு நிறைவு சிறப்புமலராக உதயநாதம் எனும் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது .