6/25/2014

| |

குருக்கள் மடத்தில் மனித புதைகுழி; அகழ்வுப் பணிகளுக்கு நீதிமன்றம் அனுமதி

குருக்கள் மடத்தில் மனித புதைகுழி; அகழ்வுப் பணிகளுக்கு நீதிமன்றம் அனுமதி

மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் உள்ளதாக கூறப்படும் மனித புதைகுழியை அகழ்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய அடுத்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காத்தான்குடி பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கடத்தி செல்லப்பட்டு விடுதலைபுலிகள் இயக்கத்தினரால் கொலை செய்யப்பட்டு குருக்கள்மடம் பகுதயில் கடற்கரை ஓரமாக புதைக்கப்பட்டிருப்பதாக ஒருவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியதை அடுத்து குறித்த இடத்தை அகழ்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  இதற்கமைய 2014, ஏழாம் மாதம் முதலாம் திகதி குருக்கள் மடம் பகுதியிலுள்ள குறித்த இடத்தின் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படும். இந்த விடயம் தொடர்பில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் இந்தப் பகுதியில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.