Photo de Maunaguru Sinniah.
Photo de Maunaguru Sinniah.
Photo de Maunaguru Sinniah.
Photo de Maunaguru Sinniah.
பவளக்கொடி வடமோடிக் கூத்து
___________________________________________
மட்டக்களப்பிலுள்ள முனைக்காடு எனும் கிராமத்தில்நேற்று நடைபெற்ற பவளக்கொடி எனும் கூத்துப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்து,
முனைக்காடு எனக்குப் புதிய இடமல்ல
பேராசிரியர் வித்தியானந்தனுடன் 1960 களிலும்
பின் என்ஆய்வுக்காக 1976,-1981 வரையும்
நான்
முனைத்தீவு,
அம்பிலாந்துறை
,கொக்கட்டிச்சோலை,
கடுக்காமுனை,
மகிழடித்தீவு,
ஆகிய இக்இக்கிராமங்களில்அலைந்துள்ளேன்
2014 இல் மீண்டும் அங்கு விஜயம்
வட்டக் களரி,
சூழ்ந்தமர்ந்த கிராமியமக்கள்,
இரவு நேரம்
வெட்டவெளி
அமைதி கிழித்து எழும் மத்தள,சல்லாரி. சதங்‌கைஒலி
, ரம்மியமாக இருந்தது.
மாணவர்களோடு அமர்ந்துஆடங்களையும்
ஆட்ட நுட்பங்களையும் இரசிப்பதுஅருமையானஅனுபவம்
இதேகூத்‌தில் 50 வருடங்களுக்கு முன்னர் அல்லிக்கு ஆடியவர்
என்அருகிலிருந்து தன் பழைய காலத்தை நினைவு கூர்ந்தபடி இருந்தார்
.இப்போதைய விட அப்போது திறம் என்பது அவர் கருத்து
முதியவர்களின்இயல்பும்அதுதான்.
கூத்து சிறப்பாக இருந்தது.
முக்கியமாக புலேந்திரனாக வந்த சிறுவன்,
வீமன்
அருச்சுனன்
ஆகியோரின் ஆடல் அசைவுகள் மனத்தைக் கவர்ந்தன,
ஒரு புது இளம் தலைமுறையைக் கூத்‌தில் காண மகிழ்ச்சியாகஇருந்தது
எனது4ஆவது.வயதில்இருந்து(1947) கிராமங்களில்கூத்துக்கள் பார்த்து வந்துள்ளேன்.எனது சிறுப்பாராயக்காலநினைவுகளை இந்த நிகழ்வுவெகுவாகக்கிளறி விட்டது.
இதனை முன்னின்றுநடத்திய நாகசக்தி கலைமன்றத்‌தினருக்கு
எனதுமனமார்ந்த பாராட்டுக்கள்.
முக்கியமாகஎம்மிடம் பயின்ற மாணவர்களான குகன்,வினோத் ஆகியோருக்கு,
மௌனகுரு
பட விபரங்கள்
1.முனைக்காடு செல்லும் வழி புதிய பாலம் மாலைவேளை
2.கூத்துக்களரி
3.கலரிக்குள் கூத்தர்
4.மக்களோடு மக்களாகக் கூத்தர்
5.கூத்‌துப் பார்வையாளர்
6.கூத்துக் கலரிக்குள் நான் 

நன்றி முகனூல்