6/30/2014

| |

'கிளிநொச்சியில் வாழும் மலையக மக்கள் மீது பிரதேசவாதம்'



இலங்கையில் வடக்கு மாகாணத்தில் அரச அலுவலர்கள் பிரதேசவாதத்தால் மலையக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது என்று மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
அரச அலுவலர்கள் பிரதேசவாதத்துடன் நடந்துகொள்வதாக குறை கூறப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தில் மலையக மக்கள் வாழும் கிராமப்பகுதிகளுக்கு ஞாயிறன்று விஜயம் செய்து அவர்களின் வாழ்க்கை நிலைமைகள், குறைநிறைகள் குறித்து வடக்கு மாகாண முதலமைச்சர் கேட்டறிந்துள்ளார்.
வீட்டு வசதிகள், வாழ்வாதாரம், வீதி உட்கட்டமைப்பு வசதிகள், கல்வித் தேவைகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து அந்தப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் முதலமைச்சரிடமும் அவருடன் சென்றிருந்த வடக்கு மாகாணசபை அமைச்சர்களிடமும் எடுத்துக் கூறியுள்ளனர்.
'மலையகத்தில் வன்முறைகளில் பாதிக்கப்பட்டு, இங்குவந்து குடியேறிய மக்கள் இந்தப் பிரதேசத்தை வளமுள்ளதாக ஆக்கியிருக்கின்றீர்கள். இப்போது வடமாகாண சபை செயற்படத் தொடங்கியிருக்கின்றது. அதனை ஆட்டம் காணச் செய்வதற்கான சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அதனால் உங்களுடைய பிரச்சனைகள் நீண்டு சென்று கொண்டிருக்கின்றன' என்று கூறியுள்ளார் விக்னேஸ்வரன்.

'பாகுபாடு காட்டுவது நியாயமில்லை'

'எமது அலுவலர்களில் சிலர் பிரதேச வாதத்தை எழுப்பி, நீங்கள் மலையகத் தமிழர், நாங்கள் உள்ளுர் தமிழர். உங்களுக்கு உரித்துக்கள் தரமாட்டோம் எனக் கூறி பக்கச்சார்பாக நடந்து கொள்வதாக நான் அறிகின்றேன். அந்த அலுவலர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். எனது மலையகத் தமிழர்களை நீங்கள் எவ்வாறு அந்நியர்களாகக் கருதுகின்றீர்களோ, அதேபோல்தான் உங்களை அந்நியர்கள் என்று சிங்கள பிக்குமார்கள் கூட்டம் கூடி கூறுகின்றார்கள்' என்றும் கூறியுள்ளார் முதலமைச்சர்.
'இன்று வடக்கு கிழக்கு மக்கள் பெருமளவில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்கள். ஏஞ்சியிருக்கின்றவர்கள் நாங்கள் எமது உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றோம். எங்களோடு வாழ்ந்து, எமக்குத் தோளோடு தோள்கொடுத்து செயற்பட்டு வருகின்ற மலையக மக்களுக்கு அதிகாரப் பாகுபாடு காட்டுவது என்ன நியாயம்' என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம், கல்வித்துறை அமைச்சர் குருகுலராஜா, விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களும் முதலமைச்சருடன் இந்தப் பயணத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
»»  (மேலும்)

6/27/2014

| |

27ஆனி மாதம், இன்று அல்பிரெட் துரையப்பா அவர்களின் 39வது நினைவு தினம்

duraiyappaதன் இளம் வயதிலேயே தமிழ் மக்களுக்கான சேவைகளை மேற்கொள்வதற்கு ஆரம்பத்தில் யாழ்ப்பாண மாநகர சபையினதும் யாழ்ப்பாணத் தொகுதியினதும் மக்கள் மனம் கவர்ந்த உறுப்பினராகவும் மேயராகவும் விளங்கிய மக்கள் மேயரென்று எல்லோராலும் அழைக்கப்படுகின்ற அல்பிரெட் தங்கராஜா துரையப்பா அவர்களின் 39 வது நினைவை இந்த இணையத்தினூடாகப் பகிர்ந்து கொள்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாண நகரம் இருந்த நிலைமையையும் திரு துரையப்பா அவர்கள் யாழ் மேயராக இருந்த காலத்திற்குப் பின்னர் யாழ் நகரம் அபிவிருத்தி அடைந்த விடயத்தினையுமுங்கள் மனக் கண்முன் நிறுத்த விரும்புகின்றோம்.
சாதாரண பொதுமக்களின் அன்றாட பாவனைக்ககான யாழ் பஸ் நிலையம் பயணிகளினதும் ஏனையவர்களின் கவனத்திற்குரியதாக மாற்றப்பட்டதும் யாழ் பொது நூலகம் 1954 பங்குனி 29 சாம் சபாபதி அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டு அரைகுறை நிலையில் இருந்ததை 1959ல் தனது இளம் வயதில் யாழ் மேயராக வந்ததும் இந்தியாவிலிருந்து சிற்பக் கலைஞர்களை அழைத்து அந்நூல் நிலையத்தை ஆசியாவின் சிறந்த நூல் நிலையமாக மாற்றியமைத்த பெருமை அல்பிரெட் துரையப்பா அவர்களுக்கே உரியது. இந்நூல் நிலையத்தை பொது மக்களின் பாவனைக்கு மேயர் துரையப்பா அவர்கள் 1959 ஐப்பசி 11ல் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார். 1960,1966,1970,1975ம் ஆண்டுவரை மக்கள் மேயர் என்ற நாமத்துடன் துரையப்பா திகழ்ந்து வந்தார். இக்காலங்களில்தான் யாழ்ப்பாண libraryமாநகரசபைக்கான கட்டிடம்,யாழ் திறந்தவெளி அரங்கு,துரையப்பா விளையாட்டரங்கு, (விளையாட்டரங்கின் காணியின் ஒரு பகுதி திரு துரையப்பா குடும்பத்தினருக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது) யாழ்ப்பாண நவீன சந்தை,நல்லூர்க் கல்யாண மண்டபம், யாழ் நகர்த்தில் ஒற்றை வழிப் பாதைகளை இரு வழிப்பாதைகளாக்கியதும்,யாழ் நகரை அழகுபடுத்தியத்குடன்,தமிழ் வளர்த்த பெரியார்களுக்கும் புலவர்களுக்கும் சிலை வைத்து அழகு பார்த்ததையும்,யாழ்ப்பாணத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்று உறுதியாக நின்று அந்தப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமானவர்களில் துரையப்பாவும் ஒருவர்.அத்தோடு 1974ல் பல்கலைக்கழகத் திறப்புவிழாவை சிறப்பாக நிறைவுசெய்து யாழ் முற்றவெளி மைதானத்தில் பகிரங்கக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்து இலங்கையின் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கா உட்பட 22 அமைச்சர்களை அழைத்து பிரமாண்டமான கூட்டத்தை நடாத்தியதுடன் அன்றைய காலகட்டங்களில் அன்றைய அரசுக்கு எதிராக பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட சில தமிழ் இளைஞர்களை தடுத்து வைத்திருப்பதை அவர்களின் எதிர்கால நலனில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கவிடம் மகஜரைக் கையளித்து அவர்களை விடுதலை செய்யும்படி பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டார்.
duraiyappa2துரையப்பா ஏழைகளின் தொண்டன் என்பதையும் அவர் சாதி,மத,மொழி,இனம் என்பதற்கப்பால் மனிதத்தை நேசித்ததையும் அக்கால கட்டங்களைச் சார்ந்தவர்கள் நன்கு அறிவார்கள். யாழ்ப்பாண கர்நாடக சபா தங்கள் ஆண்டுவிழாவில் மேயர் துரையப்பா அவர்களை பிரதம விருந்தினராக  அழைத்திருந்தார்கள். அவ்விழாவில் ஒரு தாழ்த்தப்பட்ட தமிழ்க் கலைஞர் ஒருவரை பங்கு கொள்ள விடாமல் தடுத்ததை அறிந்த அல்பிரெட் துரையப்பா அவ்விழாவில் பங்கு கொள்வதைப் பகிஸ்கரித்தார். இதனால் துரையப்பா அவர்களின் நேசத்திற்குரிய மக்களாக தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றும் இருக்கிறார்கள். தான் தலைமை தாங்கிய மாநகர சபையிலும், யாழ் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலும் தான் சார்ந்த அரசிடமும் வேலை வாய்ப்புகளை தமிழ் இளைஞர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதில் முன் நின்றார். தனது சட்டத் துறையைப் பயன்படுத்தி பணம் எதுவும் அறவிடாமல் இலவசமாக நீதிமன்றங்களில் ஆஜரானார். மக்கள் குறைகளைக் கெட்டறிந்து அவர்களின் இடங்களுக்கே நேரடியாகச் சென்று குறை நிறைகளைப் பார்வையிட்டு மக்களுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்த ஒரு மக்கள் மேயர் துரையப்பா அவர்கள். அவருடைய சேவைகளை எழுதுவதற்கு நிறைய உண்டு. இருந்தபோதிலும் நீட்டிக் கொண்டு போகாமல் அவருடையduraiyappa.tombநினைவு தினமாகிய இன்று அவரை நினைவு கூருகிறோம். அவர் ஒரு கிறீஸ்தவனாக இருந்தபோதிலும் இந்து மதத்திலும் நம்பிக்கை உள்ளவராக இருந்த கார்ணத்தினால் பொன்னாலை வரதராசப் பெருமாள் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். எந்த இளைஞர்களை சிறயிலிருந்து விடுதலை செய்ய வேண்டுமென்று கேட்டிருந்தாரோ அவர்களில் ஒரு சிலரின் துணையுடனே துரையப்பா அவர்கள் அழிக்கப்பட்டார். துரையப்பாவின் காலங்களில் யாழ்ப்பாணம் கண்ட மாற்றங்களின் பின்னர் யாழ்ப்பாணம் எவ்வித அபிவிருத்தியும் அடையவில்லை என்பதை சகலரும் அறிந்து. அல்பிரெட் துரையப்பா அவர்களை நினைவு கூருவது இக்காலத்தில் பொருத்தமானது.
»»  (மேலும்)

| |

37 நவகிரி வித்தியாலய அடிக்கல் நாட்டு விழாவும் கட்டடத் திறப்பு விழாவும் கௌரவிப்பு விழாவும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மண்டூர் 37 நவகிரி வித்தியாலய அடிக்கல் நாட்டு விழாவும் கட்டடத் திறப்பு விழாவும் கௌரவிப்பு விழாவும் அதிபர் க.சாந்தலிங்கம் தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
வித்தியாலய,தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு, புதிதாக அமைக்கப்படவிருந்த புதிய கட்டடத்திற்கான அடிகல் நாட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த புதிய கட்டடத்தினை பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க திறந்து வைத்தார். பின்னர் மங்கல விளகேற்றல் இடம் பெற்று மாணவிகளால் தேவாரம் பாடப்பட்டது.
வரவேற்பு உரையினை பிரதி அதிபர் ச.மணிவாசகன் நிகழ்த்தினார் பின்னர் தலைமை உரையினை அதிபர் க.சாந்தலிங்கம் நிகழ்த்தினார்.
இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க மற்றும் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன், விசேட அதிதியாக பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம், சிறப்பு அதிதிகளாக பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.நித்தியானந்தன், ஆர்.கிருஸ்ணதாசன் (பாடசாலை வேலைகள்-பொறியலாளர்) மற்றும் ப.பாலச்சந்திரன்(கோட்டக் கல்வி பணிப்பாளர்-போரதீவுப்பற்று) மற்றும் பொதுமக்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் இன் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
»»  (மேலும்)

6/26/2014

| |

மண்முனைப் பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடம் சந்தைக் கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு

DSC06298மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடம் மற்றும் சந்தைக் கட்டிடத் தொகுதி என்பன புதன்கிழமை (25.6.2014) கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திர காந்தனினால் திறந்து வைக்கப்பட்டது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புறநெகும திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மண்முனைப் பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடம் மற்றும் மண்முனைப் பற்று பிரதேச சபையின் புதிய சந்தைக் கட்டிடத் தொகுதி என்பன திறந்து வைக்கப்பட்டு அதன் நினைவுப் பலகையும் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மற்றும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், கிழக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் பதில் செயலாளர் ஏ.எம்.ராபி, மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளருமான பி.பிரசாந்தன். மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.வாசுதேவன் மண்முனைப் பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி ஜே.அருள்பிரகாசம், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளார் மண்முனைப் பற்று பிரதேச சபையின் முன்னாள் தலைவர் திருமதி கிறிஸ்டினா சசிகரன் உட்பட அதன் முன்னாள் உறுப்பினர்கள், சபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
மண்முனைப் பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடம் 15 மில்லியன் ரூபா செலவிலும், மற்றும் மண்முனைப் பற்று பிரதேச சபையின் புதிய சந்தைக் கட்டிடத் தொகுதி 13.5 மில்லியன் ரூபா செலவிலும் நிர்மானிக்கப்பட்டுள்ளன.
இந்த சபையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் 15.2.2013 அன்று நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

6/25/2014

| |

பிரபாகரனை காப்பாற்றிய நான் துரோகி! தமிழ் இளைஞர்களை கொன்றவர்கள் தேசியவாதிகள்!- பிரதியமைச்சர் முரளிதரன்

இந்திய இராணுவம் முல்லைத்தீவு காட்டுப் பகுதியை சுற்றி வளைத்த போது 40 மட்டக்களப்பு போராளிகளுடன் சென்று முற்றுகையினை உடைத்து விடுதலைப் புலிகளின் தலைவரை காப்பாற்றிய நாங்கள் இன்று துரோகிகள். அன்று இந்திய இராணுவத்துடன் சேர்ந்து எமது இளைஞர்களைக் கொன்றவர்கள் தேசியவாதிகளாக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
பட்டிப்பளை பிரதேச செயலாளா திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,  பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான பொன்.ரவீந்திரன், ருத்திரமலர் ஞானபாஸ்கரன்,  அனர்த்த முகாமைத்து நிலையத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், பிரதியமைச்சரின் பட்டிப்பளை பிரதேச இணைப்பாளர் அலேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடம் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 75 குடும்பங்களுக்கான சுமார் 15ஆயிரம் ரூபா பெறுமதியான தொழில் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நாங்கள் கடந்த 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகம். எமது சமூகத்தினை கட்டியெழுப்ப வேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது. அந்தப் பொறுப்பில் இருந்து நாங்கள் விலகிச் செல்ல முடியாது. சமூகம் பாதிக்கப்படும் நிலையில் இருந்து விடுவிக்க அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க வேண்டியது அனைவரது கடமையுமாகும்.
இன்று முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது அங்கிருந்து எந்த அமைச்சரும் அரசாங்கத்தினை விட்டுச் செல்லவில்லை. அவர்கள் தங்களது இனத்துக்கு ஏற்பட்ட அநீதிகளுக்காக அரசாங்கத்துக்குள் இருந்து கடுமையாக குரல் கொடுத்து  வருகின்றனர்.  அரசாங்கத்துடன் சண்டை செய்கின்றனர்.
நாங்கள் அரசாங்கத்துக்குள் இருக்கும் போது எமக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ளலாம். அதேபோன்று சமூகத்துக்கு பாதகமான விளைவுகள் ஏற்படும் போது அரசாங்கத்துக்குள் இருந்தே குரல் கொடுக்கலாம்.
ஆனால் நாங்கள் எதிர்ப்பு அரசியலை செய்து கொண்டு எவற்றையும் அடைய முடியாது எமது சமூகத்தினை இன்னும் கீழ் நிலைக்கு கொண்டு செல்வதால் நாங்கள் இன்னும் பின்னோக்கியே நகர்த்தப்படுவோம்.
இப்பகுதியில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளேன். காஞ்சிரஞ்குடாவில் இறங்குதுறை அமைத்து அங்கிருந்து இயந்திர படகு சேவையினை மேற்கொள்ளும் வகையில் 50 லட்சம் ரூபா நிதியை பெற்றுக் கொடுத்துள்ளேன்.
இதேபோன்று அரசடித்தீவு, அம்பிளாந்துறை பாடசாலைகளுக்கும் நிதிகளை ஒதுக்கீடு செய்துள்ளேன்.  நான் ஒரு அமைச்சராக இருந்த காரணத்தினாலேயே இவற்றினை செய்ய முடிகின்றது. இவற்றினை எதிர்க்கட்சிகளில் இருந்து கொண்டு செய்ய முடியாது. இதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கடந்த 30 வருட கால எதிர்ப்பு அரசியல் காரணமாக நாங்கள் எதனையும் பெறவில்லை. எமது உரிமைகளை, கல்வி நிலையை நாங்கள் காப்பாற்ற வேண்டும். இந்த விடயத்தில் மட்டக்கள்பு மக்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அதிலும் இந்த விடயங்களில் இந்த படுவான்கரை பிரதேச மக்கள் உறுதியாக இருக்கவேண்டும்.
யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்கள் படுவான்கரை பிரதேச மக்கள். வீட்டுக்கு இரண்டு மூன்று பேரை இழந்துள்ளனர்.அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வேண்டும்.
வறுமையின் முதல் மாவட்டத்தில் இருந்து விடுபட்டு நான்கு மாவட்டங்களை நாங்கள் கடந்துள்ளோம். வாழ்வாதாரம் உயர்ந்து வருகின்றது. இன்று தான் எமது மக்கள் வாழ்கின்றனர். இன்னும் 10வருடங்களில் எமது மக்களின் வாழ்க்கை மட்டம் மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கும்.
மக்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு 40 சிறு குளங்களை புனமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றேன்.
இதேபோன்று வெலிக்கந்தையினையும், படுவான்கரையினையும் இணைக்கும் மிக முக்கிய வீதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன். அவற்றினை விரைவாக முடிக்கவும் அதிகாரிகளுக்கு பணித்துள்ளேன்.
கடந்த ஐந்து வருடத்துக்கு முன்பாக இருந்த படுவான்கரை பிரதேசம் இன்று எவ்வாறு உள்ளது என்பதை எமது மக்கள் ஆராய வேண்டும். அதற்கேற்றாற்போல் எதிர்காலத்தில் திட்டமிட்டு செயற்பட்டு வரவேண்டும்.

»»  (மேலும்)

| |

குருக்கள் மடத்தில் மனித புதைகுழி; அகழ்வுப் பணிகளுக்கு நீதிமன்றம் அனுமதி

குருக்கள் மடத்தில் மனித புதைகுழி; அகழ்வுப் பணிகளுக்கு நீதிமன்றம் அனுமதி

மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் உள்ளதாக கூறப்படும் மனித புதைகுழியை அகழ்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய அடுத்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காத்தான்குடி பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கடத்தி செல்லப்பட்டு விடுதலைபுலிகள் இயக்கத்தினரால் கொலை செய்யப்பட்டு குருக்கள்மடம் பகுதயில் கடற்கரை ஓரமாக புதைக்கப்பட்டிருப்பதாக ஒருவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியதை அடுத்து குறித்த இடத்தை அகழ்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  இதற்கமைய 2014, ஏழாம் மாதம் முதலாம் திகதி குருக்கள் மடம் பகுதியிலுள்ள குறித்த இடத்தின் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படும். இந்த விடயம் தொடர்பில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் இந்தப் பகுதியில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
»»  (மேலும்)

6/23/2014

| |

வட்டரக்க விஜித தேரருக்கு 'பலவந்தமாக சுன்னத்து'

வட்டரக்க விஜித தேரருக்கு 'பலவந்தமாக சுன்னத்து'இலங்கையில் கடந்த வாரம் தாக்கப்பட்ட வட்டரக்க விஜித தேரர், தாக்குதலின் போது தனக்கு சுன்னத்து எனப்படும் விருத்தசேஷனம் செய்யப்பட்டாத கூறினார் என்று அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
மிதவாத பௌத்த அமைப்பு என்று கருதப்படும் ஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளராக வட்டரக்க விஜித தேரர் செயற்படுகிறார்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வட்டரக்க விஜித தேர்ரை சந்தித்து திரும்பிய அவரது சட்டத்தரணியான நாமல் ராஜபக்ஷ அவர்கள் இந்தத் தகவலை பிபிசியிடம் கூறியுள்ளார்.
ஒரு மிதவாத பிக்குவாகப் பொதுவாகப் பார்க்கப்படும் விஜித தேரரை, முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக கடும்போக்கு பௌத்த பிக்குமார் விமர்சித்து வருகின்றார்கள்.
அளுத்கம பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்கு பௌத்த அமைப்பின் ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்ட மறுதினம் வட்டரக்க விஜித தேரரும், தாக்குதலுக்கு உள்ளான நிலையில் தெருவில் கிடக்கக் காணப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், சில பிக்குமாரே தன்னை தாக்கியதாகக் கூறியதாக அவரது சட்டத்தரணி முன்னதாக பிபிசியிடம் கூறியிருந்தார்.
தனது தாக்குதல் தொடர்பில் விஜித தேரர் பொதுபல சேனா அமைப்பையே குற்றஞ்சாட்டுவதாக சட்டத்தரணி கூறியுள்ளார்.
»»  (மேலும்)

6/22/2014

| |

முஸ்லீம் சகோதரர்கள் மீதான வன்முறையைக் கண்டித்து சமவுரிமை இயக்கத்தின் வெற்றிகரமான இலண்டன் - பாரிஸ் போராட்டங்கள்..

இலங்கையில் முஸ்லீம் சகோதரர்கள் மக்கள் மீது பவுத்த அடிப்படைவாத அமைப்புகளாலும், அரசாலும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனரீதியிலான வன்முறையினை கண்டித்து, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை சமவுரிமை இயக்கத்தின் பிரித்தானிய கிளை இன்று (20.06.2016) நடாத்தியது. குறுகிய அழைப்புக்காலம் எனினும் நூற்றுக்கு மேற்பட்ட அனைத்து இன மக்களும், பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்காக, அவர்களின் உரிமையை வலியுறுத்தி உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டனர். கடந்த நூறு வருடங்களாக கொடிய இனவாதத்திற்க்காக இரத்தம் வடித்தது போதும். எமது எதிர்கால சந்ததியினர் மனிதர்களாக வாழ ஒன்றிணைந்து எதிர்த்து நிற்போம். இனவாத, மதவாத அரக்கர்களை விரட்டி அடிப்போம் என்ற கோசத்துடன், போராட்டத்தில் பங்கெடுத்த சமவுரிமை இயக்கத்தின் தலைமைத் தோழர்களின் உரைகள் அமைந்தது .
இதேவேளை, பிரான்சின் தலைநகர் பாரிஸில் சம உரிமை இயக்கமும், அதன் சகோதர அமைப்புகளும் இன்று இனவாத - மதவாத வன்முறைகளுக்கு எதிரான பிரச்சார முன்னெடுப்பில் ஈடுபட்டனர். துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், இனவாத- மதவாத வன்முறைக்கு எதிராகவும், முஸ்லீம் சகோதரர்களின் உரிமைகளை வலியுறுத்தியும் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். இது பற்றிக் கருத்துத் தெரிவித்த புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமைத் தோழரும், சமவுரிமை இயக்கத்தின் பிரான்ஸ் கிளையின் செயற்பாட்டாளருமான ரஜாகரன் : "எமது தாய் அமைப்பு இலங்கையின் வராலாற்றில் பதியத்தக்க விதமாக பாரிய போராட்டத்தை 18.06.2014 அன்று கொழும்பில் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக இன்று (20.06..2014) லண்டனிலும், பாரிசிலும் வெற்றிகரமான முறையில் போராட்டங்களை நடத்தி முடித்துள்ளோம். இப்போராட்டங்கள் போல வரப்போகும் நாட்களில் இலங்கையிலும் தொடரவுள்ளது. அதேபோல ஐரோப்பிய நாடுகளில், இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இன மக்களின் உரிமையை வலியுறுத்தி - குறிப்பாக முஸ்லீம் சகோதரர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதலைக் கண்டித்து போராட்டங்கள் விதம் விதமான முறையில் நடத்தப்படும்" என்றார்.
»»  (மேலும்)

6/21/2014

| |

கோவிலை கொல்களமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாற்றிய கேவலம் அம்பலம்! -

யாழ். கவணாவத்தையில் உள்ள நரசிங்க வைரவர் ஆலயத்தில் பாரம்பரிய வேள்வி என்கிற பெயரில் நடத்தப்பட்டு வருகின்ற மிருக பலிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கி வருகின்றது.
இக்கொலை நிகழ்வை மிருக பலித் திருவிழா என்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்கள் அழகு தமிழில் அழைக்கின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்கள் நினைத்து இருந்தால் இம்மிருக பலியை இம்முறையேனும் தடுத்து நிறுத்தி இருக்க முடியும். ஏனென்றால் வலிகாமம் வடக்கு பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இப்பிரதேச சபை அனுமதிக்கின்ற பட்சத்தில்தான் கோவிலை தற்காலிகமாக கொல்களமாக பயன்படுத்த முடியும்.
ஆனால் இப்பிரதேச சபையின் தவிசாளர் எஸ். சுகிர்தன் ஆலயத்தை தற்காலிக கொல்களமாக பயன்படுத்த அனுமதி வழங்கினார்.
இவருக்கு இதற்காக விசேட கவனிப்புக்கள் ஆலய நிர்வாகத்தால் செய்து கொடுக்கப்பட்டன.

»»  (மேலும்)

| |

இலங்கை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளை இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி வன்மையாக கண்டிக்கிறது

களுத்துறை மாவட்டத்திலுள்ள பிரதேசங்களில் முஸ்லிம் மதத்திற்கும் முஸ்லிம் இனத்திற்கும் எதிராகமேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட கலவரத்தை முன்னின்று நடத்தியது ஒரு பௌத்த இயக்கம். இந்த இயக்கத்தின் பிதாமகனாக விளங்குபவர் ‘சிங்கள இனத்தை பாதுகாப்பதே’எனும் அடிப்படை சித்தாந்தத்தில் ஊறியிருக்கும் ஹலகொட அத்தே ஞானசாரா எனும் பௌத்த பிக்குவாகும். 2009 ம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பிற்பாடே முஸ்லிம் இனத்திற்கு எதிரான பௌத்த பிக்குவாதம் மேலோங்கத் தொடங்கிவிட்டது.
அதன் தொடர்ச்சியாகவே ஞானசாரா எனும் பௌத்த பிக்குவின் அமைப்பான பொது பல சேனா எனும் பௌத்த பிக்குவாத இயக்கம் 2013 ல் பேருவல பள்ளிவாசலை தாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. முஸ்லிம் சமூகம் பேணுகின்ற உடை, உணவுக் கலாசாரத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே அப்போது இருந்தது. தற்போது (12 யூன் 2014) பௌத்த பிக்குவும் அவரது சாரதியும் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு களுத்துறை பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் மக்களின் கடைகள் வீடுகள் உயிர்கள் உடைமைகள் அனைத்தும் பௌத்த பிக்குவாத இயக்கக் கும்பல்களால் நாசமாக்கப்பட்டுள்ளது. 15 ம் திகதி கலவரத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குவாத இயக்கமானது அழுத்கம எனும் பிரதேசத்தில் ஹலகொட அத்தே ஞானசாரா தலைமையில் மகிழ்ச்சி ஆரவாரத்தில் சென்று கொண்டிருந்தது. ‘ இந்த தேசத்தில பொலிசும் ஆமியும் எப்போதும் எங்களுக்கானதாகவே இருக்கும். இதுக்குப் பிறகு எந்தவொரு மறக்காலயா ஏனும் (முஸ்லிம் இனத்தை இழிவு படுத்தும் சிங்களச் சொல்லாக இருக்கலாம்) அல்லது வேறெந்த பறையர்களாக இருக்கட்டும் ஒரு சிங்களவனையும் தொட ஏலாது. தொட்டால் முடிவு இப்படித்தான் இருக்கும்.” எனும் அச்சுறுத்தும் வார்த்தைகளை பிரயோகித்தவாறு அக்கும்பல் ஹலகொட அத்தே ஞானசாரா தலைமையில் சென்றதாகவும் அறிய முடிகின்றது. முஸ்லிம் இனத்திற்கு எதிராக திட்டமிட்ட இவ்வாறான சம்பவங்கள் இந்தக் கலவரத்துடன் முடிவடைந்து விடும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. பொலிவியா நாட்டில் இருந்து இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த ஜனாதிபதி மீதும் இலங்கைவாழ் சிறுபான்மை இனங்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதற்கு சாத்தியம் இல்லை. கலவரத்தை அடக்குவதற்கான உடனடிக் கணடனங்களுக்கு அப்பால் இப்பிரச்சனையை தீர்ப்பதற்கான மார்க்கம் என்ன. இப்பிரச்சனையை தீர்ப்பதற்கு அரசியல் கட்சிகள் நியாயமாக நடந்து கொள்வார்களா! நடைபெற்றுவரும் முஸ்லிம்கள் மீதான அளுத்கம வன்முறைகள் எமக்கு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கின்றன. திட்டமிட்ட வகையில் சிங்கள மேலாதிக்க சக்திகளான பொதுபலசேன அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாத பிரச்சாரங்களின் விளைவாகவே மேற்படி வன்முறைகள் அரங்கேறியுள்ளன. இந்த வன்முறைகளுக்கு பலியாக நேர்ந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எமது முன்னணி சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். அத்தோடு இந்த வன்முறைகளின் சூத்திரதாரிகள் இனங்காணப்பட்டு சட்டத்தின் முன்னிறுத்தப்பட வேண்டுமென கோருகின்றோம். மேலும் நாட்டில் இனவாதத்தை தூபமிட்டுவரும் பொதுபலசேன போன்ற இனவாத, மதவாதத்தை தூண்டும்  அமைப்புக்களை தடைசெய்யப்பட வேண்டும். அதுவே இலங்கையின் அமைதிக்கும் இன நல்லுறவுக்கும் வழிசமைக்கும்  என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகிறோம். அரச அதிகார நலன்களை பாதுகாக்கும் பொருட்டு மேற்படி சம்பவங்களுக்கு பொறுப்புச்சொல்லும் கடமையில் இருந்து அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம். தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இம்மேலாதிக்க வன்முறைச் சம்பவங்கள் இலங்கையின் சிறுபான்மையினரின் வாழ்வுரிமை குறித்தும் எதிர்கால இருப்புக்குறித்தும் அவநம்பிக்கையை அதிகரிக்கச் செய்கின்றன. சுபிட்சமும் இன ஐக்கியமும் நிறைந்த எதிர்கால இலங்கைக்கு இச்சம்பவங்கள் அச்சுறுத்தலாகவே அமையும் என்பதை அரசாங்கம் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகும். எனவே இதுகுறித்து அரசு தயவு தாட்சண்யமின்றி உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என  தலித் சமூக மேம்பாட்டு முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இலங்கை தலித்சமூக மேம்பாட்டு முன்னணி பிரான்ஸ்
»»  (மேலும்)

6/20/2014

| |

ஆங்கிலேயர்களினால் வெனிஸ் நகரத்துடன் ஒப்பிட்ட பெருமை மட்டக்களப்பு மாவட்டத்தையே சாரும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தனித்துவமான விடயங்களை பாதுகாத்து அவற்றனை பேணவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா இசை நடனக்கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள சிறுவர் பூங்காவில் நடைபெற்ற உள்ளுராட்சி வார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
புதிய ஆணையாளராக உதயகுமார் அவர்கள் மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக கடமையேற்ற பின்னர் குழுவாக இணைந்து சிறந்தமுறையில் செயற்பட்டுவருவதை காணமுடிகின்றது.பல் முன்னேற்றகரமான செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றார்.இவர் மூலம் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாநகரம் வளம் பெறும் என்பதில் எமக்கு நம்பிக்கையுள்ளது.
மட்டக்களப்பு என்பது தனித்துவமான பிரதேசமாகும்.இலங்கையில் தனித்தீவினை தலை நகரமாக கொண்ட ஒரேயொரு மாவட்டமாகவும் இந்த மட்டக்களப்பு மாவட்டமே உள்ளது.ஆங்கிலேயர்களினால் கூட வெனிஸ் நகரத்துடன் மட்டக்களப்பு மாவட்டம் ஒப்பிடப்பட்ட ஒரு மாவட்டமாகும்.
இந்த மாவட்டத்தில் அழகு பொருந்திய பல வனப்புகள் இருக்கின்றன.அவற்றினை பாதுகாத்து தற்கால மாற்றங்களுக்கு ஏற்ப அவற்றினை பாதுகாக்கவேண்டிய தேவை நம் அனைவருக்கும் உள்ளது.அந்த வகையில் மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கவை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலா சார்ந்த துறை ஊடாக நாங்கள் வருமானமீட்டகூடியதாக மாறவேண்டும்.எமது பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத்துறை மிகவும் முக்கிய இடத்தினை வகிக்கின்றது.அந்த வகையில் நாங்கள் மாவட்டத்தில் உள்ள வனப்புமிக்க பகுதிகளை பாதுகாக்கவேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நான்கு தனித்துவங்கள் உள்ளன.மட்டக்களப்பு வாவியினை சார்ந்த கல்லடிப்பாலம்,தனித்துவமான மட்டக்களப்பு கோட்டை,சீமைப்பனைகள் இந்த பனைகள் போர்த்துக்கீசரால் இங்கு கொண்டுவரப்பட்டது.அடுத்தது பாடுமீன்.இந்த நான்கும் தனித்துவமானது.இவை நான்கும் மட்டக்களப்பு மாநகரசபைக்குள்ளேயே வருகின்றது.எதிர்காலத்தில் இவற்றினை பாதுகாப்பது தொடர்பிலான நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகரசபை மேற்கொள்ளும் என நம்புகின்றேன்.
போர்த்துக்கீசர்,ஒல்லாந்தர்,ஆங்கிலேயர் போன்றவர்களின் ஆட்சிகளுக்கு உட்பட்டு தற்காலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் பல மாற்றங்களை கண்டுவருகின்றது.
எந்த நிறுவனத்திற்கும் குழு வேலைப்பாடு என்பது மிகவும் முக்கியமானது.அந்த வகையில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர்களும் ஊழியர்களும் மேற்கொண்டுவரும் இந்த குழு வேலைப்பாடு பாரிய வெற்றிகளை ஏற்படுத்தும்.
எதிர்காலத்தில் இந்த மாநகரசபைக்கு பல கடமைகள் உண்டு.அந்த பணிகளுக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தினையும் உள்வாங்கி பணிகள் மேற்கொள்ளமுடியுமென்றால் நாங்களும் உதவுவதற்கு தயாராகவிருக்கின்றோம்.
ஏனென்றால் இந்த மாவட்டத்துக்கு போர்த்துக்கீசர் வரும்போது தமது குதிரைகளுக்கு உணவளிப்பதற்காக இந்த சீமைப்பனைகளை கொண்டுவந்தார்கள்.இது தனித்துவமானது.உலகில் எங்கெல்லாம் போர்த்துக்கீசர் ஆட்சி இருந்ததோ அங்கெல்லாம் அவர்களின் அடையாளமாக இந்த சீமைபனைகள் உள்ளன.இதுவொரு வரலாற்று சான்று.அதனைப்பேணிபாதுகாக்க மட்டக்களப்பு மாநகரசபை மேற்கொண்டுள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேரீச்சை மரங்கள் காய்க்கின்றன.தற்போதுதான் இங்கும் பேரீச்சை மரங்கள் வளரும் என அடையாளப்படுத்தப்பட்டு அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

»»  (மேலும்)

6/19/2014

| |

லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் பெரும் ஆர்ப்பாட்டம் -

இலங்கையில் அளுத்கம பகுதியில் கடும்போக்கு பௌத்தர்களால் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டதாகக் கூறி, அதனைக் கண்டித்து இன்று லண்டனில் புலம்பெயர் இலங்கை முஸ்லிம்களால் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
ஆண்களும், பெண்களுமாக ஆயிரக்கணக்கான இலங்கை முஸ்லிம்கள் பிரிட்டனின் பல பாகங்களில் இருந்தும் வந்து அதில் கலந்து கொண்டனர்.
பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
»»  (மேலும்)

6/18/2014

| |

ஓர் இனம் இன்னும் ஓர் இனத்தினை அடிமைப்படுத்தி ஆள முற்படுவதனையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

ஓர் இனம் இன்னும் ஓர் இனத்தினை அடிமைப்படுத்தி ஆள  முற்படுவதனையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி-கண்டனம் 

பேருவளை,அளுத்கமவில் பௌத்த துறவிகளுக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இடையே ஆரம்பமான கலவரங்கள்கண்டிக்கத்தக்கன.இந்த வன்முறைகள்   நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பரவாமலும் இது இனக்கலவரமாக மாற்றம் பெறவும் அனுமதிக்கக் கூடாது எனவும் அரச இயந்திரங்களும், பொலிசாரும் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்ப்பட்டுள்ளது.
மூன்று தசாப்தங்களாக புரையோடிப்போன யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு நிலைமையை சீர்படுத்த முனையும் வேளையில் மீண்டும் ஒரு இன முறுகள் ஏற்படுவதனையும் ஓர் இனம் இன்னும் ஓர் இனத்தினை அடிமைப்படுத்தி ஆள  முற்படுவதனையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
இலங்கை பிரஜைகள் எவரும் நாட்டின் அனைத்துவித சுதந்திரத்துடனும், தனித்துவத்துடனும் வாழ்வதற்கு பூரணதகுதி உடையவர்கள். ஒருவரை இன்னும் ஒருவர் ஏளனம் செய்தோ அல்லது ஒருவரை இன்னும் ஒருவர் தாழ்வுக்கண் கொண்டு நோக்குவதோ, அரசியல் அதிகாரத்தின் மூலம் அடக்கி ஆள்வதோ நீண்ட காலம் நோக்கிய அபிவிருத்தி பாதைக்கு அசௌகரியத்தினையே ஏற்படுத்தும் என்பது கடந்தகால வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொண்டபாடமாகும்.
ஓவ்வொரு மதத்தர்மங்களும் மனிதனை மனிதனாக மதிக்கும் உயரிய தத்துவத்தினையே கொண்டுள்ளது. அந்தவகையில் மனித தத்துவத்திற்கு மதிப்பளித்து அனைவரும் தமது தனித்துவத்துடன் கௌரவமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
»»  (மேலும்)

| |

காத்தான்குடியில் பூரண ஹர்த்தால் – மட்டக்களப்பு நகரிலும் ஸ்தம்பித்தது

image.jpgஅளுத்கம மற்றும் தர்கா நகர் சம்பவங்களை கண்டித்தும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரியும் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் (17.6.2014)ஹர்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.
இந்த ஹர்தால் காரணமாக காத்தான்குடியில் வர்த்தக நிலையங்கள் பொதுச் சந்தைகள் மூடப்பட்டுள்ளன.
பாடசாலைகள் மற்றும் அரச தனியார் அலுவலகங்கள் காலையில் திறக்கப்பட்ட போதிலும் சில பாடசாலைகளில் மாணவர்கள் வரவு குறைவாக காணப்பட்டதால் பாடசாலைகளும் மூடப்பட்டன. அதே போன்று அலுவலகங்களும் பின்னர் மூடப்பட்டன.
காத்தான்குடி பிரதான வீதியில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
»»  (மேலும்)

6/17/2014

| |

அளுத்கம வன்முறைகளுக்கு எதிராக நாடுதழுவிய எதிர்ப்பு போராட்டம்


அளுத்கம வன்முறைகளுக்கு எதிராக நாடுதழுவிய எதிர்ப்பு போராட்டம் 





»»  (மேலும்)

| |

அழுத்கம சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

அழுத்கம சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்அழுத்கம சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று  திருகோணமலை நீதிமன்றத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என  ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சட்டதரணிகள் இங்கு வலியுறுத்தினர்
தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்  சட்டத்தரணிகள் ஒன்றினைந்து இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


»»  (மேலும்)

6/14/2014

| |

கிழக்கின் கிராமிய வழிபாட்டுக்கு பிரசித்திபெற்ற கோராவெளி கண்ணகியம்மன் ஆலய திருச்சடங்கு

கிழலக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்கதும் மிகவும் சிறப்பு வாய்ந்ததுமான மட்டக்களப்பு கிரான் கோராவெளி கண்ணகியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இலட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இன்று காலை கதவு திறக்கப்பட்டு ஆலயத்தின் திருச்சடங்கு சிறப்பாக நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமியத் தெய்வ வழிபாட்டிற்கு பிரசித்தி பெற்ற இடமாக கோராவளி அமைந்துள்ளது.
மருதமும் , குறிஞ்சியும் ஒருங்கே அமையப் பெற்ற இக்கிராமத்தில் கோயில் கொண்டுள்ள கோராவளி கண்ணகி அம்மனுக்கு நேற்று புதன்கிழமை ஆரம்பமாகி இன்று வியாழக்கிழமை திருக்குளிர்த்தி பாடுதலுடன் நிறைவுபெற்றது.
வருடாந்தம் கோரவெலிக்கு தமது கிராமங்களில் உள்ள அம்மனைக்கொண்டுசென்று பந்தல் அமைத்து கோராவெளி கண்ணகியம்மனுடன் ஏழு கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த திருச்சடங்கினை சிறப்பாக நடாத்துகின்றனர்.
கிரான்,கோரகல்லிமடு,சந்திவெளி,சித்தாண்டி,முறக்கொட்டாஞ்சேனை,கிண்ணையடி,மீராவோட ஆகிய பிரதேசத்தினை சேர்ந்த மக்களும் கோராவெளி அம்மன் ஆலயத்தில் பந்தல் அமைத்து தமது கிராமங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட கண்ணகியம்மனை வைத்து இந்த திருச்சடங்கினை நடத்தினர்.
வாழைச்சேனை பிரதேச செயலகத்துடன் பிரதேச பண்ணையாளர் சங்கமும் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன் வாழைச்சேனை பிரதேச சபை மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் வாழைச்சேனை பொலிஸாரும் இராணுவத்தினரும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்த உற்சவத்தில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டு வழிபாடுகளை மேற்கொண்டதுடன் திருச்சடங்குகள் தடையின்றி நடைபெறுவதற்கான ஏற்பாட்டு ஒழுங்குகள் தொடர்பிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

»»  (மேலும்)

| |

உத்வேகமாக பதினோராம் ஆண்டில் தடம்பதிக்கும் உதயம்

உத்வேகமாக பதினோராம் ஆண்டில் தடம்பதிக்கும் உதயம்

சுவிஸ் நாட்டிலிருந்து கிழக்குமாகாண உறவுகளின் சங்கமிப்பில் உருவானதே உதயம் அமைப்பாகும்.சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இந்த உதயமானது கிழக்கில் வாழும் ஏழை மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக திகழுகின்றது. கடந்த யுத்த காலங்களில் தமது கல்விவசதியை தொலைத்து நின்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கும்  மாணவர்களுக்கும்  பலவிதமான உதவிகளை செய்துவருவதன் மூலமும் வாழ்வில் நலிவுற்றோர் பலருக்கு பொருளாதார மேம்பாடுகருதி பலவித உதவிகளை அளித்து வருவதன் மூலமும்  கிழக்கில் வாழும் மக்களிடையே உதயம் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளது.ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சைக்கு தோன்றும் மாணவர்களுக்கான சிறப்பு உதவிகள்,பல்கலைகழக மாணவர்களுக்கான மாதாந்த நிதியுதவி திட்டங்கள்,என்று பின்தங்கிய மற்றும் எல்லைகிராமங்களான புனானை நாவிதன்வெளி, பொத்துவில் போன்ற  பலபகுதி வாழ் மாணவர்களின் வாழ்விலும் ஒளியேற்றி தனது சேவையை உதயம்  வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது..ஆனால் தமிழ் தேசிய ஊடகங்கள் என பிதற்றிக்கொள்ளும் செய்தி ஊடகங்கள் உதயத்தின் செயல்பாடுகளை இருட்டடிப்பு செய்வது மட்டுமன்றி உதயத்தின் மீதான சேறடிப்பிலும் ஈடுபட்டி வருகின்றன.உதயம் தொடங்கப்பட்டவுடன் இனி  "உபத்திரவம்தான்" என்று சபித்த ஊடக வன்முறைகளையும் தாண்டி தனது பத்தாவது ஆண்டை அண்மையில் 08/06/2014 அன்று  உதயம் அமைப்பினர் சிறப்பாக கொண்டாடினர்.  சூரிச் நகரில் இடம்பெற்ற இந்த விழாவில் பல கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.இவ்விழாவுக்கு ஐரோப்பாவின் பலபகுதிகளில் இருந்தும் கிழக்கு மாகாண உறவுகள் கலந்து கொண்டமைசிறப்பம்சமாகும்.தமது கடந்தகால பணிகள் பற்றிய சிறப்பு இறுதட்டு வெளியீடும் இவ்விழாவில் இடம்பெற்றது. பத்தாண்டு நிறைவு சிறப்புமலராக உதயநாதம் எனும் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது .
»»  (மேலும்)

6/12/2014

| |

மட்/முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் அடிக்கல் நாட்டு விழா

மட்/முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 11.06.2014 இடம் பெற்றது.
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய ஜனாதிபதியின ஆலோசகரும்; மாகாணசபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 5 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள 100*25 சதுர பரப்பளவைக் கொண்ட கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் பாடசாலை அதிபர் கிருபைராஜா தலைமையில் 11.06.2014 அன்று இடம் பெற்றது.
இந் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய ஜனாதிபதியின் ஆலோசகரும்; மாகாணசபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தனின் பிரதிநிதியாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன் கலந்த கொண்டாதுடன் மட்டக்களப்பு மேற்கு வலய வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.சத்தியநாதன், பட்டிப்பளை
கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு..தயாசீலன் மற்றும் பிரதேச பொறியியலாளர் திரு.கிருஸ்ணாந்தராஜா உள்ளீட்டோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
»»  (மேலும்)

6/11/2014

| |

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கூட்டமைப்பே?

aaaaa

**கூட்டமைப்பு கிழக்கு மாகாண தமிழர்களின் வாக்குகளை பிரித்து வீணாக எதிர்கட்சியில் அமர்ந்துகொண்டு பிள்ளையானை பழிவாங்கியது.இந்த  திட்டமிட்ட சதியே ஒருதமிழாரேனும்  இல்லாத அமைச்சரவையை கிழக்கில் உருவாக்கியது.இப்போது தங்கள் திட்டமிட்டபடியே தமிழ் மக்கள் அரசியல் அனாதைகளாக்கபட்டிருக்கிறார்கள்**


கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாகப் புறக்கணித்து இனவாதஆட்சி நடாத்திவரும் கிழக்கு முதலமைச்சரின் பச்சைதுவேசத்தனத்திற்கு முடிவுகட்டவிருக்கிறோம். இதற்கு அனைவரும் ஒன்றுபடவேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் சூளுரைத்தார்.
சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று ஞாயிறன்று நடைபெற்ற அறநெறி மாணவர்களுக்கு கற்றல்உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு சீற்றத்துடன் சூளுரைத்தார்.
கோரக்கர் ஆலய பிரதிநிதி கே.சசி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர் கே.ஜெயசிறில் பாடசாலை அதிபர் எம்.விஜயகுமாரன் ஆலய தலைவர் சின்னவன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் மேலும் உரையாற்றுகையில்:
தமிழ்மக்கள் அஹிம்வைசழியிலும் ஆயுத வழியிலும் போராடி இனறு இராஜதந்திரப்போரை நடாத்திவ    ருகிறார்கள். இப்போருக்கு எமது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு புதுவடிவம்கொடுத்துள்ளது.
இவ் இராஜதந்திரப்போரால் இன்று மாகாணசபைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலாவது பொலிஸ் அதிகாரம் வழங்க அரசு முன்வந்திருக்கிறது.இதற்கு அடிப்படைக்காரணம் த.தே.கூட்டமைப்பின் இராஜதந்திர காய்நகர்த்தலே.
தமிழ்மக்களின் காணி உள்ளிட்ட உரிமைப்பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து பெறக்கூடிய ஒரே தகுதி எமது கட்சிக்கே உண்டு. அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழ்க்குழுக்ளாலோ ஒட்டுண்ணிகளாலோ இது முடியாது.
கிழக்கு மாகாணசபை தமிழ்மக்களையும் தமிழர் பிரதேசங்களையும் திட்டமிட்டு புறக்கணித்து இனரீதியாகச் செயற்படுகிறது. இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள 10 கிராமிய அபிவிருத்தித்திட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழ்க்கிராமம் கூட தெரிவுசெய்யப்படவில்லை. மட்டு.மாவட்டத்தில் இனவிகிதாசாரம் பேணப்படவில்லை. கடந்தாண்டும் இதே நிலை.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
கிழக்கு மாகாணசபை இவ்வாண்டு தெரிவுசெய்யப்பட்ட 10 கிராமங்களை 50  மில்லியன் ருபா செலவில் அபிவிருத்திசெய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் எ மஜீத் தெரிவித்திருந்தார். கிராமிய அபிவிருத்தித்திட்டத்தின்கீழ் 76மில்லியன் ருபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்தாண்டு 20மில்லியன் ருபாவும் இவ்வாண்டு 50 மில்லியன் ருபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவுசெய்யப்பட்ட 10கிராமங்களும் தலா 50 லட்சருபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவிருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
இதில் அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை றகுமானியா பாத் சம்மாந்துறைமஜீட்புரம் மற்றும் நாகேஸ்பவ எனும் 04 கிராமங்கள் தெரிவுசெய்யப்பட்;டுள்ளன.03 முஸ்லிம் கிராமங்களும் ஒரு சிங்கள கிராமமு; தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இத்ததெரிவில் அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழ்க்கிராமம் கூட தெரிவுசெய்யப்படவில்லை. கடந்தாண்டும் இத்திட்டத்தின்கீழ் அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழ்க்கிராமம் கூட தெரிவுசெய்யபடவில்லை.
அம்பாறையில் தமிழர்கள் இல்லையா? ஏனிந்த அநீதி? பாராபட்சம்? மஹிந்த அரசுகூட கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின்கீழ் இனமதபேதம் பாராட்டாமல் 10லட்சருபா ஒதுக்கீடுசெய்துள்ளது.
கடந்தாண்டு இப்பாரபட்சம் இடம்பெற்றபோது நான் மட்டக்களப்பு மாநகரமண்டபத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண அபிவிருத்திசபைக் கூட்டத்த்pலும் கிழக்கு மாகாணசபை அமர்விலும் எனது கடும் ஆட்சேபனையை எதிர்ப்பை பகிரங்கமாகவே எழுத்துமூலம் தெரியப்படுத்தினேன். ஆனால் பலன் ஏதும் கிட்டவில்லை. ஆனால் இவ்வாண்டும் அதே பச்சைப் பாரபட்சம் அநீதி அரங்கேறியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் சதாம்ஹூசைன் மாதிரிக்கிராமம் வாழைச்சேனை காவத்தைமுனை முனைக்காடு மற்றும் கருங்காலிச்சோலை ஆகிய கிராமங்கள் அபிவிருத்திக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் 2தமிழ்க்கிராமங்களும் 2 முஸ்லிம் கிராமங்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
அதாவது இங்கு தெரிவில் இனவிகிதாசாரம் பேணப்படவில்லை. இனவிகிதாசாரப்படிபார்த்தால் 3தமிழ்க்கிராமங்கள் தெரிவுசெய்யப்பட்டிருக்கவேண்டும்.
ஆனால் கிழக்கு மாகாணசபை பச்சையாகவே பாராபட்சத்தை இனவாதத்தை கக்கிவருகிறது. மேடையில் மட்டும் இன ஜக்கியத்தை பேசுவாhர்கள். செயற்பாடுகளிலும் நிதிஒதுக்கீடுகளிலும் முஸ்லிம்களை மையமாகவைத்தே இனரீதியாக செயற்பட்டுவருகிறார்கள்.
உண்மையில் யுத்தத்தாலும் சுனாமியாலும் கிழக்கு மாகாணத்தில் அதிகூடுதலாகப் பாதிக்கப்பட்டவை தமிழர் பிரதேசங்களாகும். எனவே அவர்களுக்கே கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கவேண்டும். கிழக்கு மாகாணசபை என்பது மூவினங்களுக்கும் சொந்தமானது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இரண்டையும் உள்ளடக்கியதே.இதனை முதலமைச்சரும ஏனையோரும் புரிந்துகொள்ளவேண்டும்.
இவ்வாறே எதிர்வரும் சமச்சீரானபிராந்திய அபிவிருத்தித்திட்டத்தின் நிதியொதுக்கீடும் குறித்தவொரு இனத்திற்கு மாத்திரமே ஒதுக்கப்பட்டுவிடுமோ என்ற நியாயமான அச்சமும் எழுந்துள்ளது. இனியும் இதனை அனுமதிக்கமுடியாது. சர்வாதிகார ஆட்சிசெய்வதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். என்றார்.    















»»  (மேலும்)

6/04/2014

| |

சிறிலங்காவில் வேறு எந்தவொரு முதலமைச்சரின் அலுவலகத்துக்கும் 3 லட்சம் ரூபா வாடகை வழங்கப்படுவதில்லை



வடக்கில் தமிழ் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி இருக்கின்ற நிலையிலும் வன்னியில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களிலுள்ள குழந்தைகள் புட்டிப்பாலுக்கு அழுகின்ற நிலையிலும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தியோபூர்வ இல்லத்திற்கும் அலுவலகத்திற்கும் மாதாந்தம் மூன்றரை இலட்சம் ரூபா வாடகை செலுத்தப்படுகின்றமை தொடர்பாக வடமாகாணத்திலுள்ள பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்களுக்கான அரசு என்றிருக்கின் வடக்கு மாகாண சபையின் முதல்வர் இப்படி பெருந்தொகைப் பணத்தை வாடகையாகச் செலுத்துவதன் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பெரும் துரோகம் இழைக்கின்றது என்றும் வடக்கிலுள்ள புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து வடக்கு தனியே பிரிக்கப்பட்ட பின்னர் அதற்கான தனியான கட்டமைப்பு வசதிகள் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்படவில்லை. மாங்குளத்தில் அது அமைவதே பொருத்தம் என்ற எண்ணக்கரு திட்ட அளவில் இருக்க தற்காலிகமாக சபையின் அனைத்து அலுவலகங்களும் யாழ்ப்பாணத்தில் இயங்குகின்றன. அவற்றில் அதிகமானவை வாடகை வீடுகள் மற்றும் கட்டங்களிலேயே இயங்குகின்றன.
வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகம் அவரது உத்தியோகபூர்வ இல்லம் என்பனவும் இதுவரை நிரந்தரமாக அமைக்கப்பெறவில்லை. முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவரது விருப்பத்துக்கேற்பவே அலுவலகத்துக்கான கட்டடமும் உத்தியோகபூர்வ இல்லத்துக்கான வீடும் வாடகைக்கு அமர்த்தப்பட்டன என்று சபை நிர்வாகிகள் கூறுகின்றன.
இதனடிப்படையில் முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு மாதாந்தம் 50 ஆயிரம் ரூபா வாடகையும் அலுவலகத்துக்கு மாதாந்தம் 3 லட்சம் ரூபாய் வாடகையும் வடக்கு மாகாண சபையினால் வழங்கப்படுகின்றன. சிறிலங்காவில் வேறு எந்தவொரு முதலமைச்சரின் அலுவலகத்துக்கும் 3 லட்சம் ரூபா வாடகை வழங்கப்படுவதில்லை என்று மாகாண சபைகள் அமைச்சு கூறுகின்றது. வடக்கு மாகாண ஆளுநரும் போர்க்குற்றவாளியுமான சந்திரசிறி ஊடாக ஜனாதிபதிக்கு விசேட கோரிக்கை விடுக்கப்பட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ச அனுமதித்ததன் அடிப்படையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அலுவலகம் 3 லட்சம் ரூபா வாடகைக்கு அமர்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்வளவு பெரும் தொகை வாடகை கொடுக்கப்படுகின்ற போதும் முதலமைச்சரின் உத்தியோகபூர்வ சந்திப்புக்கள் தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் செல்லும் செய்தியாளர்களை அலுவலகத்தின் உள்ளே அழைத்து இருத்திப் பேசுவதற்குப் போதிய இடவசதி இல்லை அங்கில்லை என்று சில நாள்களுக்கு முன்னர் பத்திரிகை ஆசிரியர்களுக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் முதலமைச்சர் கவலை தெரிவித்திருந்தார்.
சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் மேற்கொண்ட கடும் யுத்தம் காரணமாக இந்த மாகாணம் பெரும் அழிவைச் சந்தித்துள்ளது. இங்குள்ள மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். வன்னியில் உள்ள மக்கள் அன்றாடம் ஜீவனோபாயத்திற்கே அல்லாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் வடக்கு முதல்வர் வாடகைப் பணமாக மூன்றரை இலட்சம் ரூபாவைச் செலுத்துவது மக்களை ஏமாளிகளாக்கும் செயல் என்றும் மேற்படி புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.
»»  (மேலும்)