தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மாபெரும் மேதினக்கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை மகிழடித் தீவு சந்தியில் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் இடம் பெற்றது. பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள் . வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலத்திலிருந்து ஆரம்பமான வாகன பவனி மட்டக்களப்பு காத்தான்குடி ஊடாக ஆரையம்பதி ,புதிய மண்முனைப் பாலம் வழியே மகிழடித் தீவு சந்தியை வந்தடைந்தது.