உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய கழகமும் இணைந்து நடாத்தும் சர்வதேச தமிழ் இலக்கிய ஆய்வு மாநாடு இன்று தொடக்கம் 3 தினங்களுக்கு (31.05.2014 -02.06.2014
சிங்கப்பூர் காமன் வெல்த் றைவ் திருவள்ளுவர் மண்டபத்தில் நடைபெற வுள்ளது. இம்மாநாட்டில் கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் செ.யோகராஜா, மொழித்துறைத் தலைவர் ரூபி வலன்ரீனா பிரான்சிஸ், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நதிரா மரிய சந்தனம், கலாநிதி பட்ட ஆய்வாளரும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனை உதவிக் கல்விப் பணிப்பாளருமான தமிழ் எம்.ஐ.எம். ஹனீபா இஸ்மாயில் மற்றும் கலாநிதிப் பட்ட ஆய்வாளர் சந்திராதேவி தயாகாந்தன் ஆகியோர் கிழக்கு மாகாணத்திலிருந்து கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம். ஹனீபா இஸ்மாயில் கடந்த வியாழக்கிழமை (29) அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் எம்.ஐ.எம். சஹாப்தீன் மற்றும் கல்லூரி முகாமைத்துவக் குழு சபை உறுப்பினர்களால் பாராட்டி கெளரவிக்கப்பட்டார்கள்.