தோல்விகளை வெல்லக் கூடியதும் அதனை ஓர் அனுபவமாகவும், சவால்களை எதிர் கொள்ளக் கூடியவர்களாகவும் இன்றைய இளைஞர்கள் திகழ வேண்டும் என முன்னர்ள முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். கைட் நோஸன் கம்பஸ்ஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கைட் நோஸன் கம்பஸின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எஸ். அமல் மாஸ்டர் தலைமையில் மட்டக்களப்பு தெய்வநாயகம் மண்டபத்தில் இன்று(21.05.2014)இடம் பெற்ற கைட் நோஸன் கம்பஸில் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பாடங்களை கற்று அதனைப் பூர்த்தி செய்த ஒரு தொகுதி மாணவர்களுக்கான சான்றிதழ் விழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றும்போது:
இளைஞர்கள் திடீரென உணர்ச்சிவசப்படுபவர்கள். அவர்களது இவ்வாறான செயற்பாடுகள் அவர்களது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும். ஆனால் இன்றை இளைஞர் சமுதாயம் அறிவுப் புரட்சியின் பால் உந்தப்பட்டவர்கள். அவர்கள் நிச்சயம் தவறான பாதைக்கு செல்ல மாட்டார்கள். ஆனால் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் குறிப்பிடுவது 1976ம் ஆண்டு அதாவது வட்டுக் கோட்டைத் தீர்மானம். இந்த தீர்மானத்தின் போது கிழக்கு மாகாணத்திலிருந்து பெரும்பாலான இளைஞர்கள் இங்கிருந்து மூளை சலவை செய்யப்பட்டு ஒரு சில கபடதாரிகளால் உணர்ச்சிவசப்படுத்தப்பட்டு அங்கே அதாவது வட்டுக் கோட்டைக்கே அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
அப்போது அங்கு எடுக்கப்பட்ட தீர்மானமானது வெறுமனே அழிவுக்கான கோசங்களாகவே இருந்ததே தவிர, எந்தவிதமான ஓர் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கும் அது வித்திடவில்லை. இதன்வாயிலாக கோசங்களும் கோசங்களை முன்வைத்த அந்த வட மேலாதிக்கவாதிகளும் வெற்றி பெற்றார்களே தவிர, ஒட்டு மொத்த எமது தமிழ் சமூகம் அழிவுப்பாதைக்கே சென்றது. இந்த உண்மையை எத்தனை பேர் இன்று ஏற்றுக் கொள்வீர்கள். உண்மை ஒருபோதும் மறையாது! ஆனால் சற்று காலம் எடுத்தாவது அது வெளிவந்தே தீரும். அக்காலம்தான் தற்போதைய காலம்.
எனவே, அன்பான எமது மாணவச் செல்வங்களே நாம் தற்போது உலகமயமாக்கப்பட்ட போட்டி மிக்க ஓர் அவசர உலகிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அக் காலத்திற்கேற்றால் போல் நாமும் மாறிக் கொண்டே செல்லவேண்டும். இன்று அறிவு சார்ந்த ஓர் சமூகத்துடன் நாம் பிண்ணிப் பிணைந்துள்ளோம். ஆதற்கேற்றால் போல் நாமுத் காலத்தின் தேவையறிந்து கற்று எதிர்காலத்தை வளமானதாக்கி கொள்ள வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு வழி கோலுகின்ற கைட் நோசன் கம்பஸ் போன்ற தனியார் கல்வி நிறுவனங்கள் பெரிதும் பாராட்டுக்குரியவைகள். அதே போன்று தொடர்ந்து எதிர்காலத்தில் இன்னும் பல அதாவது மூன்றாம் நிலை கல்வி அமைச்சுடன் இணைந்து தற்போது நெறிப்படுத்தி வருகின்ற தொழில் வழிகாட்டல் பயிற்சி தொடர்பான பாடநெறிகள் போன்று பல பாட நெறிகளை கற்பிப்பதற்கான சூழலை உருரவாக்க வேண்டும். அவ்வாறான முயற்சிகளுக்கு கிழக்கு மாகாண கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டவன் என்ற அடிப்பபடையில் இதற்கும் முன்னுரிமை வழங்குவேன் என்ற செய்தியையும் கூறி எனது பேச்சை நிறைவு செய்கின்றேன் என அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் முன்னாள் மட்டக்களப்பபு மாவட்ட வலயக் கல்வி பணிப்பாளர்; திருமதி சுபாசக்கரவர்த்தி, மட்டு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார், உதவி ஆணையாளர் தனஞ்சயன், தமிழ் மக்கள் விடுதலைப் பலிகள் கட்சயின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன். மற்றும் கைட் நோஸன் கம்பசினுடைய நிருவாகிகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.