மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட களுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு தரமற்றவை என பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேற்படி பாடசாலையில் வழங்கப்படுகின்ற உணவு சரியான சுகாதார முறையில் தயாரிக்கப்படவில்லை எனவும் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகவும் அதனால் உணவினை பல மாணவர்கள் சாப்பிடாமல் விடுவதாகவும் பெற்றோர் விசனம் குறிப்பிடுகின்றனர்.
நேற்றைய தினம் (12.05.2014) வழங்கப்பட்ட நூடில்ஸ் மிக மோசமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக எமக்கு பெற்றோர் அறிவித்தனர். நாம் சென்று பார்வையிட்டபோது நூடில்ஸ் சரியாக அவியாமல் பச்சையாக வழங்கப்பட்டிருந்ததுடன் நூடில்ஸ்க்கு அதிகமாக மஞ்சள் போடப்பட்டிருந்ததையும் நாம் அவதானித்தோம்.
இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் வலயக்கல்வி அதிகாரிக்கு பெற்றோர் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மாணவர்களுக்கு தரமற்ற உணவுகளை வழங்கி பணம் சம்பாதிப்பவர்களுக்கு வலயக்கல்வி அதிகாரி துணைபோகின்றாரா எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.