5/31/2014

| |

மட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியின் 200 வது ஆண்டு

DSC09651மட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியின் 200 வது ஆண்டு நிறைவையொட்டிய கிழக்கு மாகாணம் தழுவிய வாகன பவணி வியாழக்கிழமை(29.5.2014)காலை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்லூரியின் பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இதையொட்டிய வைபவம் மட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியின் வளாகத்தில் நடை பெற்று பின்னர் ஊர்வலமாக அதிதிகள் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள மட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியின் ஸ்த்தாபகர் அருட்தந்தை வில்லியம் ஓள்ட் அவர்களின் உருவச்சிலைக்கு பாடசாலையின் தற்போதைய அதபர் மற்றும் முன்னாள் அதிபர்கள் மலர் மாலை அணிவித்தனர்.
கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், மற்றும் மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், அருட் தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருன் தம்பிமுத்து உட்பட சமய பிரமுகர்கள் முக்கியஸ்த்தர்கள் கல்வியலாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த வாகன பவணி இன்று திருகோணமலை மாவட்டத்திற்கு சென்று பின்னர் 31ம் திகதி ஜுன் மாதம் 2ம் திகதி வரைக்கும் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் வரைக்கும் செல்லவுள்ளது.
»»  (மேலும்)

| |

கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் இராஜினாமா- இனியபாரதி நியமனம்?

கிழக்கு மாகாண சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி உறுப்பினரான துரையப்பா நவரத்தினராஜா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இவரது ராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள பேரவை செயலாளர், இராஜினாமாவுக்கான காரணங்கள் எதனையும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என தெரிவித்தார்.
முன்னாள் முதலரமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தானின் அமைச்சர்கள் வாரியத்தில் கால்நடை அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சராக பதவி வகித்த இவர், 2012ம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் போனஸ் ஆசனம் மூலம் மீண்டும் உறுப்பினரானர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் தலைமைப்பீடத்தின் வேண்டுகோளின் பேரிலே இவர் தனது பதவியை இராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
இவரது இராஜினாமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு, கடந்த மாகாண சபைத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமார் நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
»»  (மேலும்)

| |

சிங்கப்பூரில் தமிழ் இலக்கிய ஆய்வு மாநாடு

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய கழகமும் இணைந்து நடாத்தும் சர்வதேச தமிழ் இலக்கிய ஆய்வு மாநாடு இன்று தொடக்கம் 3 தினங்களுக்கு (31.05.2014 -02.06.2014
சிங்கப்பூர் காமன் வெல்த் றைவ் திருவள்ளுவர் மண்டபத்தில் நடைபெற வுள்ளது. இம்மாநாட்டில் கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் செ.யோகராஜா, மொழித்துறைத் தலைவர் ரூபி வலன்ரீனா பிரான்சிஸ், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நதிரா மரிய சந்தனம், கலாநிதி பட்ட ஆய்வாளரும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனை உதவிக் கல்விப் பணிப்பாளருமான தமிழ் எம்.ஐ.எம். ஹனீபா இஸ்மாயில் மற்றும் கலாநிதிப் பட்ட ஆய்வாளர் சந்திராதேவி தயாகாந்தன் ஆகியோர் கிழக்கு மாகாணத்திலிருந்து கலந்து கொள்ளவுள்ளனர்.
 இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம். ஹனீபா இஸ்மாயில் கடந்த வியாழக்கிழமை (29) அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் எம்.ஐ.எம். சஹாப்தீன் மற்றும் கல்லூரி முகாமைத்துவக் குழு சபை உறுப்பினர்களால் பாராட்டி கெளரவிக்கப்பட்டார்கள்.
»»  (மேலும்)

5/30/2014

| |

உதயம் தனது பத்தாவது ஆண்டு விழாவைகொண்டாடுகின்றது

சுமார் பத்து வருடமாக சுவிசிலிருந்து இயங்கி வரும் தன்னார்வ அமைப்பான உதயம் தனது பத்தாவது ஆண்டு விழாவை எதிர் வரும் யூன் மாதம் எட்டாம் திகதி சூரிச் நகரில் நடாத்துகிறது. கிழக்கு மாகாணத்தில் வாழும் உறவுகளுக்கு பலவித உதவிகளை செய்துவரும்  உதயம் நிகழ்வில் ஐரோப்பாவின் பலபகுதிகளிலும் இருந்து கிழக்கு மாகாண உறவுகள் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றார்கள். 

»»  (மேலும்)

5/29/2014

| |

புதுக்குடியிருப்பில் குடைசாய்ந்த லொறி –பயணித்தோர் மயிரிழையில் தப்பினர்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் சீமேந்து ஏற்றிச்சென்ற லொறி குடைசாய்ந்ததில் அதில் பயணம் செய்தோர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.
இன்று புதன்கிழமை காலை திருகோணமலையில் இருந்து சம்மாந்துறைக்கு சீமேந்து ஏற்றிச்சென்ற லொறியே இவ்வாறு குடைசாய்ந்துள்ளது.
இல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியூடாக வந்தபோது புதுக்குடியிருப்பு முன்னைய விசேட அதிரடிப்படை முகாமுக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் பயணம் செய்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் எதுவித காயங்களும் இன்றி மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.
»»  (மேலும்)

| |

உ.பியில் பாலியல் வல்லுறவுக்குப் பின் , இரு தலித் சமூக பெண்கள் கொலை ?

இந்தியாவின் வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் ஒரு கிராமத்தில் மரத்திலிருந்து தொங்கி காணப்பட்ட இரண்டு பெண்கள் பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக, காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண்கள் காணாமல் போனது தொடர்பில் வழக்கு பதிவு செய்ய மறுத்த இரண்டு காவல் துறை அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
படவுன் என்ற மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த பதின்ம வயதுப் பெண்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
புதன்கிழமையன்று காலை படவுன் மாவட்டத்தின் கட்ரா ஷஹாடட்கஞ் என்ற கிராமத்தில் இந்த இரண்டு பெண்கள் ஒரு மரத்திலிருந்து தொங்கி காணப்பட்டதாக காவல் துறை உயர் அதிகாரி அதுல் சக்சேனா பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேரை காவல்துறை அதிகாரிகள் தேடி வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
பிரேதப் பரிசோதனைகள் நேற்று புதன்கிழமை நடந்து முடிந்துள்ளன. பரிசோதனையின் முடிவுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெண்கள் எவ்வாறு காணாமல் போனார்கள் என்பது பற்றியும், எவ்வாறு அந்த மரத்தில் தொங்கப்பட்டார்கள் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல் துறை அதிகாரி அதுல் சக்சேனா தெரிவித்துள்ளார்.
தேசியப் பெண்கள் ஆணையம் இது தொடர்பில் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக அந்த ஆணையத்தின் உறுப்பினர் நிர்மலா சாவந்த் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு முன்னதாக வேறு ஒரு பாலியல் வல்லுறவு சம்பவத்தில் ஒரு கிராமப் பெரியவர்களின் உத்தரவின் பெயரில் ஒரு இளம் பெண்ணை, அந்த கிராமத்தினர் பலர் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர் என்பது குறிப்பிடதக்கது. அந்த பெண் வேறு சமூக ஆணை காதலித்தமைக்காக இந்த தண்டனை வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
»»  (மேலும்)

| |

கூட்டமைப்பின் குத்தாட்டம் த.தே.கூவிலிருந்து கௌரிகாந்தன் நீக்கம்

  யாழ்.மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.கௌரிகாந்தினைக் கட்சியிலிருந்து நீக்குவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா கடிதம் அனுப்பியுள்ளார்.

அதனை,வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் நேற்று வியாழக்கிழமை (29) உறுதிப்படுத்தினார்.

கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு எதிராகச் செயற்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டே இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்டம் இரண்டு முறை தோற்கடிப்பதற்கு காரணமாக இருந்தமை, பிரதேச சபைத் தவிசாளர் பதவி விலகக் காரணமாக இருந்தமை மற்றும் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் நடவடிக்கைகளை பிரதேச சபைக்குள் கொண்டு வந்தமை உள்ளிட்ட விடயங்களைக் காரணம் காட்டி இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதுடன், பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவது தொடர்பாக தேர்தல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சிவஞானம் மேலும் தெரிவித்தார்.
 
»»  (மேலும்)

| |

தமிழ்நாட்டுக்கு மேலும் இரண்டு மந்திரி பதவி?

பிரதமர் நரேந்திர மோடி தலை மையில் பதவி ஏற்ற 45 புதிய மந்திரிக ளின் இலாகா விவரம் நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. மிக சிறிய மந்திரிசபை அமைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் சில மந்திரிக ளுக்கு பல் வேறு துறைகள் ஒருங்கிணைத்து கொடுக்கப்பட்டுள்ளன.
மூன்று மூத்த கெபினெட் மந்திரிகளு க்கு தலா 2 பெரிய இலாகாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது அந்த 3 மந்திரிகளுக்கும் கூடுதல் சுமையாக கருதப்படுகிறது. அதாவது நிதி மந்திரி அருண்Nஜட்லியிடம் கூடுதல் சுமையாக இராணுவ துறை உள்ளது. தொலை தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத் திடம் சட்டத்துறை கூடுதலாக உள்ளது. தகவல் - ஒலிபரப்பு மந்திரி பிரகாஷ் ஜவதேகரிடம் சுற்றுச்சு+ழல் கூடுதல் சுமையாக உள்ளது.
பாதுகாப்பு, சட்டம், சுற்றுச்சு+ழல் ஆகிய மூன்று துறைகளும் மிகவும் முக்கியமான துறைகளாகும். எனவே இந்த துறைகளுக்கு யார் யாரை நியமனம் செய்வது என்று பிரதமர் மோடி ஆய்வு செய்து வருகிறார். எனவே விரைவில் மத்திய மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படுவது உறுதியாகி விட்டது.
ஜ_லை முதல் வாரத்தில் பட்nஜட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. அதற்கு முன்பு இந்த 3 முக்கிய இலாகாக்களுக்கும் புதிய மந்திரிகள் நியமனம் செய்யப்பட வேண்டியது அவசியமாகும். இதை கருத்தில் கொண்டு இன்னும் 2 வாரங்களில் மத்திய மந்திரிசபை விரிவாக்கம் செய் யப்படும் என்று தகவல்கள் வெளி யாகி உள்ளன.
மந்திரி சபை விரிவாக்கம் செய்ய ப்படும் போது தமிழ்நாட்டுக்கு மேலும் 2 மந்திரி பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதில் அன்புமணி ஒரு வராக இருப்பார். மற்றொருவர் பா.ஜ.க. வைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பார் என்று தெரிகிறது. தமிழ்நாட்டில் 2016ம் ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. அதை கருத்தில் கொண்டு பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மந்திரி பதவி வாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படலாம் என்று கூறப்படு கிறது.
»»  (மேலும்)

| |

மலேசியாவில் மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர் மரணம்

மட்டக்களப்பு களுதாவளையை பிறப்பிடமாக கொண்ட அருந்ததச்செல்வன் சச்சுதன் என்பவரே வாகன விபத்தில் உயிர் இழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர் . இவர் சுமார் 4 வருட காலமாக மலேசியாவில் தொழில் புரிந்துள்ளார் . இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது வைத்தியசாலையொன்றில் தற்போது வைக்கப்பட்டுள்ள சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
»»  (மேலும்)

5/27/2014

| |

டில்லியில் ஜனாதிபதி மாளிகை விழாக்கோலம்: பிரதமரானார் மோடி

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி நேற்று மாலை சுபவேளையில் பதவியேற்றுக்கொண்டார். சார்க் நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் கலந்துகொண்ட பதவியேற்பு நிகழ்வு இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு நிகழ்வில், 23 அமைச்சரவை அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய மத்திய இணை அமைச்சர்கள் 10 பேரும், மத்திய இணை அமைச்சர்கள் 12 பேரும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாய், மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் உட்பட சார்க் நாடுகளின் தலைவர்கள் மற்றும் இந்தியாவின் அரசியல் பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நேற்றுமாலை சுபவேளையான 6.10 அளவில் நரேந்திர மோடி, இந்தியக் குடியரசுத் தலைவர் முன்னிலையில் பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கைக்குழு நேற்றுக்காலை புதுடில்லி சென்றடைந்தது. ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு எம்.பி சஜின்வாஸ் குணவர்த்தன, யாழ் மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரேணுகா செனவிரட்ன ஆகியோரும் புதுடில்லி சென்றடைந்தனர்.
புதுடில்லி விமான நிலையத்தைச் சென்றடைந்த இலங்கைக் குழுவினரை இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் விமான நிலையத்தில் வரவேற்றிருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்த நிகழ்வில் முன்னாள் குடியரசுத் தலைவர்களான அப்துல் கலாம், பிரதீபா பட்டீல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, உபதலைவர் ராகுல் காந்தி, முன்னாள் அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள் வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட பலதரப்பட்ட பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, சதானந்த கவுடா, உமா பாரதி, நஜ்மா ஹெப்துல்லா, கோபிநாத் முண்டே, ராம்விலாஸ் பாஸ்வான், கல்ராஜ் மிஸ்ரா, மேனகா சஞ்சய் காந்தி, அனந்த் குமார், ரவிசங்கர் பிரசாத், கீதே, கஜபதி ராஜூ, நரேந்திர சிங் தோமர், ஹர்மிஸ்ராத் பாதல் கவுர், ஜூவால் ஓரம், ராதா மோகன் சிங், தாவர் சந்த் கெலோட், ஸ்மிருதி இராணி, ஹர்ஷ்வர்த்தன் உள்ளிட்ட 23 பேர் அமைச்சரவை அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
ராதாகிருஷ்ணனுக்கு இணை அமைச்சு
தமிழகத்திலிருந்து தெரிவான பா.ஜ.க உறுப்பினரும், தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவருமான பொன்.இராதாகிருஷ் ணனுக்கு இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமராகப் பதவியேற்றுக்கொள்ள முன்னர் நேற்றுக்காலை மகாத்மா காந்தியின் நினைவுத்தூபி அமைந்திருக்கும் ராஜ்கோட்டுக்குச் சென்ற நரேந்திர மோடி அங்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். நரேந்திர மோடியின் தாயார் காந்திநகர் வீட்டிலிருந்து தொலைக்காட்சி மூலம் தனது மகனின் பதவிப்பிரமாண நிகழ்வைக் கண்டு களித்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட உலகத் தலைவர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலைவர் மாளிகையில் விசேட இராப்போசன விருந்தளித்து கெளரவித்தார்.
»»  (மேலும்)

| |

சமுர்த்தி வறுமை ஒழிப்பு உணவுப்பொதி முத்திரைகளின் பணப்பெறுமதி அதிகரிக்கப்பட வேண்டும் - சி.சந்திரகாந்தன்.

மட்டக்களப்பு மாவட்டம் இன்று வறுமையில் முதலாவது மாவட்டமாக உள்ளது. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகின்ற போது அதிகளவான வளங்களைக் கொண்டமைந்த இம் மாவட்டம் வறுமையிலே முதலாவதாக இருக்கின்றது என்றால் இங்கே கூடி இருக்கின்ற நாங்கள் அதாவது மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றி சிந்திக்கின்ற நாம் அனைவரும் ஒரு கணம் சிந்திக்க வேண்டும் என ஜனாதிபதியின் ஆலோசகர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று(26.05.2014) கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கருத்துக் கூறும் போது தெரிவித்தார்.
தொடர்ந்து வறுமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், உண்மையில் இது தொடர்பில் சற்று நாம் கவனம் செலுத்த வேண்டும். எமது மாவட்டத்திலே சுமார் 79120 குடும்பங்கள் சமுர்த்தி பயனாளிகளாக இருக்கின்றார்கள். இவர்களுக்காக 45.71 மில்லியன் ரூபாய் மாதாந்தம் செலவிடப்படுகிறது. இவர்களிலே குறிப்பாக 61682 பேருக்கு 750ரூபாய் பெறுமதியான வறுமை ஒழிப்பு சமுர்த்தி முத்திரையில் சமூகப்பாதுகாப்பு நிதி மற்றும் கட்டாய சேமிப்பு நீங்கலாக 595 ரூபாய்க்கு மாத்திரம் உணவுப் பொதி வழங்கப்படுகிறது.
உண்மையில் இந்த உணவுப் பொதிகளின் பெறுமதி போதுமானதாக இல்லை. எனவே வறுமை பற்றி பேசுகின்ற நாம் இவ் உணவுப்பொதிகளின் பணப்பெறுமதியினை 1500 ரூபாயாக உயர்த்த வேண்டும். இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 1500 சமுர்த்தி முத்திரை வெறுமனே 2 குடும்பங்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றன. சமுர்த்தி பயனாளிகளாக இருந்து சமூக பாதுகாப்பு முத்திரை பெறுகின்றவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படாமல் சமுர்த்தி உணவுப் பொதி பெறுகின்றவர்களின் உணவுப் பொதிக்கான பெறுமதி அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. இவ்வாறு நிகழுமாயின் இதனை அதாவது கிராம மட்டத்தில் உண்மையில் பாடசாலைக்கு செல்கின்ற போது போசாக்கின்மையால் மயங்கி விழுகின்ற மற்றும் கல்வியில் ஈடுபாடிருந்தும் வறுமை தடையாக உள்ள மாணவர்களை உள்ளடக்கிய குடும்பங்களுக்கு அது சென்றடையுமாயின் உண்மையில் வறுமையினை ஓரளவேனும் எமது மாவட்டத்திலே குறைக்க முடியும்.
இதற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட செயலகம் அரசாங்க அதிபர் தலைமையில் ஒரு விசேட குழுவை அமைத்து 3 மதகாலத்திற்குள் இதற்கான தீர்வினை தந்தால் உண்மையில் வறுமை குறையும் என்பது கண்கூடு எனவும் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனதுரையிலே குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

5/22/2014

| |

என்னால் சேமிக்க முடியும்




















என்னால் சேமிக்க முடியும், என்கின்ற தொனிப்பொருளில் மாணவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் வகையிலான நிகழ்வொன்று முறக்கட்டான்சேனை இராமகிருஷ்ண மகாவித்தியாலத்தில் மக்கள்வங்கி ஊழியர்களினால் இன்று முன்னெடுக்கப்பட்டது.
 அதாவது செங்கலடி மக்கள்வங்கி கிளையின் சித்தாண்டி பிரதேச
சேவை நிலையத்தின் ஏற்பாடிலேயே மேற்படி நிகழ்வானது நடாத்தப்பட்டது.
பாடசாலை ஓன்றுகூடலின் போது சேமிப்பின் அவசியம் பற்றி மாணவர்கள் மத்தியில் அறிவூட்டுவதாக இந் நிகழ்வு அமைந்திருந்தது.
மக்கள் வங்கியுடன் வாடிக்கையாளர்களாக இணைந்து கொண்டிருக்கும் மாணவர்களது  கல்வி வாழ்க்கை முழுவதும் அவர்களது முன்னேற்றங்களின் பங்காளியாக மக்கள் வங்கி இருப்பதுடன்  கல்வியில் சாதிக்கின்ற ஒவ்வொரு தருணங்களிலும் கெளரவிப்புகளையும் பரிசுகளையும் வழங்கி வருகின்றது.
இவை  பற்றி மாணவர்களிடம் தெளிவுபடுத்தப்பட்டது.
மேற்படி பாடசாலையின்  பெரும்பாலான மாணவர்கள் மக்கள்வங்கி வாடிக்கையாளர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.










»»  (மேலும்)

| |

மோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த பங்கேற்பு

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி கலந்து கொள்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, எதிர்வரும் திங்கட்கிழமை(26.5.14) பிரதமராகப் பொறுப்பேற்கிறார்.
அந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதை ஏற்றுக் கொண்டு பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார் என, புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் பாகிஸ்தான் பிரதமர் அதில் கலந்து கொள்வாரா என்று இதுவரை தகவல்கள் ஏதும் இல்லை.
»»  (மேலும்)

| |

சவால்களை எதிர் கொள்ளக் கூடியவர்களாக இளைஞர்கள் வாழ வேண்டும் - சந்திரகாந்தன்.

தோல்விகளை வெல்லக் கூடியதும் அதனை ஓர் அனுபவமாகவும், சவால்களை எதிர் கொள்ளக் கூடியவர்களாகவும் இன்றைய இளைஞர்கள் திகழ வேண்டும் என முன்னர்ள முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். கைட் நோஸன் கம்பஸ்ஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
கைட் நோஸன் கம்பஸின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எஸ். அமல் மாஸ்டர் தலைமையில் மட்டக்களப்பு தெய்வநாயகம் மண்டபத்தில் இன்று(21.05.2014)இடம் பெற்ற கைட் நோஸன் கம்பஸில் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பாடங்களை கற்று அதனைப் பூர்த்தி செய்த ஒரு தொகுதி மாணவர்களுக்கான சான்றிதழ் விழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றும்போது:
 
இளைஞர்கள் திடீரென உணர்ச்சிவசப்படுபவர்கள். அவர்களது இவ்வாறான செயற்பாடுகள் அவர்களது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும். ஆனால் இன்றை இளைஞர் சமுதாயம் அறிவுப் புரட்சியின் பால்  உந்தப்பட்டவர்கள். அவர்கள் நிச்சயம் தவறான பாதைக்கு செல்ல மாட்டார்கள். ஆனால் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் குறிப்பிடுவது 1976ம் ஆண்டு அதாவது வட்டுக் கோட்டைத் தீர்மானம். இந்த தீர்மானத்தின் போது கிழக்கு மாகாணத்திலிருந்து பெரும்பாலான இளைஞர்கள் இங்கிருந்து மூளை சலவை செய்யப்பட்டு ஒரு சில கபடதாரிகளால் உணர்ச்சிவசப்படுத்தப்பட்டு அங்கே அதாவது வட்டுக் கோட்டைக்கே அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
 
அப்போது அங்கு எடுக்கப்பட்ட தீர்மானமானது வெறுமனே அழிவுக்கான கோசங்களாகவே இருந்ததே தவிர, எந்தவிதமான ஓர் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கும் அது வித்திடவில்லை. இதன்வாயிலாக கோசங்களும் கோசங்களை முன்வைத்த அந்த வட மேலாதிக்கவாதிகளும் வெற்றி பெற்றார்களே தவிர, ஒட்டு மொத்த எமது தமிழ் சமூகம் அழிவுப்பாதைக்கே சென்றது. இந்த உண்மையை எத்தனை பேர் இன்று ஏற்றுக் கொள்வீர்கள். உண்மை ஒருபோதும் மறையாது! ஆனால் சற்று காலம் எடுத்தாவது அது வெளிவந்தே தீரும். அக்காலம்தான் தற்போதைய காலம்.
 
எனவே, அன்பான எமது மாணவச் செல்வங்களே நாம் தற்போது உலகமயமாக்கப்பட்ட போட்டி மிக்க ஓர் அவசர உலகிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அக் காலத்திற்கேற்றால் போல் நாமும் மாறிக் கொண்டே செல்லவேண்டும். இன்று அறிவு சார்ந்த ஓர் சமூகத்துடன் நாம் பிண்ணிப் பிணைந்துள்ளோம். ஆதற்கேற்றால் போல் நாமுத் காலத்தின் தேவையறிந்து கற்று எதிர்காலத்தை வளமானதாக்கி கொள்ள வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு வழி கோலுகின்ற கைட் நோசன் கம்பஸ் போன்ற தனியார் கல்வி நிறுவனங்கள் பெரிதும் பாராட்டுக்குரியவைகள். அதே போன்று தொடர்ந்து எதிர்காலத்தில் இன்னும் பல அதாவது மூன்றாம் நிலை கல்வி அமைச்சுடன் இணைந்து தற்போது நெறிப்படுத்தி வருகின்ற தொழில் வழிகாட்டல் பயிற்சி தொடர்பான பாடநெறிகள் போன்று பல பாட நெறிகளை கற்பிப்பதற்கான சூழலை உருரவாக்க வேண்டும். அவ்வாறான முயற்சிகளுக்கு கிழக்கு மாகாண கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டவன் என்ற அடிப்பபடையில் இதற்கும் முன்னுரிமை வழங்குவேன் என்ற செய்தியையும் கூறி எனது பேச்சை நிறைவு செய்கின்றேன் என அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
 
இந் நிகழ்வில் முன்னாள் மட்டக்களப்பபு மாவட்ட வலயக் கல்வி பணிப்பாளர்; திருமதி சுபாசக்கரவர்த்தி, மட்டு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார், உதவி ஆணையாளர் தனஞ்சயன், தமிழ் மக்கள் விடுதலைப் பலிகள் கட்சயின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன். மற்றும் கைட் நோஸன் கம்பசினுடைய நிருவாகிகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
»»  (மேலும்)

5/21/2014

| |

தாய்லாந்தில் அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் இராணுவ சட்டம் பிரகடனம்

தாய்லாந்தில் நீடிக்கும் அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் அந்நாட்டு இராணுவம் நாட்டின் ~~சட்ட ஒழுங்கை" பாதுகாக்கவென கூறி இராணுவ சட்டத்தை பிரகடனம் செய்துள்ளது. எனினும் இந்த எதிர்பாராத நடவடிக்கை இராணுவ சதிப்புரட்சியல்ல என்று இராணுவம் கூறியுள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து, இராணுவம் வன்முறைகள் இன்றி அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று தாய்லாந்து இடைக்காலப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இராணுவ சட்டம் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து படையினர்; தலைநகர் பாங்கொக்கின் வீதிகளை முடக்கியதோடு தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தாய்லாந்தில் பல மாதங்களாக அரசுக்கும் எதிர்த்தரப்புகளுக்கும் இடையில் அரசியல் இழுபறி நீடித்து வந்த நிலையிலேயே அங்கு இராணுவ சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஏற்கனவே பலமுறை நாட்டில் இராணுவ சதிப்புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில் இராணுவத்தின் இந்த முன்னெடுப்பு அரச ஆதரவாளர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1932 ஆம் ஆண்டில் நாட்டில் முழுமையான மன்னராட்சி முடிவுக்கு வந்த பின் அங்கு இதுவரை குறைந்தது 11 சதிப்புரட்சிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து படையினர் நேற்று பாங்கொக்கில் இருக்கும் பிரதான அரச கட்டிடத்திற்குள் ஊடுருவினர். ஏற்கனவே அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இந்த கட்டிடத்தின் செயற்பாடுகள் முடங்கி இருந்தன. நிர்வாகத்தினர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் அரச எதிர்ப்பாளர்கள் அரசை வெளியேற்றவே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து தேசிய பாதுகாப்பிற்காக ஊடக தணிக்கைக்கு இராணுவம் உத்தரவிட்டது. அத்துடன் மோதலை தவிர்க்க அரச ஆதரவு, எதிர்ப்பாளர்கள் எங்கும் பேரணிகளை நடத்த வேண்டாம் என்று உத்தரவிட்டது. இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்த தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "அனைத்து தரப்பினரிடமும் அமைதி, ஒழுங்கை நிலைநாட்டவே இராணுவ சட்டம் அமுலுக்கு வருகிறது. பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை" என்று கூறப்பட்டது.
நெருக்கடியான தருணத்தில் தலையிடும் 1914 சட்டத்தின்படி இராணுவ சட்டம் குறித்த அறிவிப்பில் அந்நாட்டு இராணுவ தளபதி ப்ராயுத் சான் ஒசா கையொப்பம் இட்டார். இராணுவத்தின் அறிவிப்பை அடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை தாய்லாந்து பங்குச்சந்தை மற்றும் பஹ்ட் நாணயம் வீழ்ச்சி கண்டது. தாய்லாந்தின் மிகப்பெரிய முதலீட்டு நாடான ஜப்பான், அங்கு ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலைவரம் குறித்து கடும் கவலையை வெளியிட்டதோடு அனைத்து தரப்பும் வன்முறையை தவிர்த்து பொறுமையை கையாளும்படி கோரியது.
எவ்வாறாயினும் இராணுவத்தின் அறிவிப்பு குறித்து கவனம் செலுத்தப்போவதில்லை என்று குறிப்பிட்டிருக்கும் தாய்லாந்தின் காபந்து அரசு, தொடந்தும் அதிகாரத்தில் இருப்பதாக அறிவித்துள்ளது. "இராணுவம் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் செயற்பட்டிருப்பதை தவிர்த்து ஏனைய அனைத்தும் வழமையாக உள்ளது" என்று பிரதமரின்;; தலைமை பாதுகாப்பு ஆலோசகரான பரடோன் பட்டனடபுட்டின் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று இராணுவ சட்டம் காபந்து அரசின் செயற்பாடுகளில் பாதிப்பை செலுத்தாது என்று இராணுவ பேச்சாளர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
தாய்லாந்து பிரதமராக இருந்த யிங்லுக் கடந்த டிசம்பரில் பாராளுமன்ற கீழவையை கலைத்தது மற்றும் இம்மாத ஆரம்பத்தில் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டில் யிங்லுக்கை பதவி விலக நீதிமன்றம் உத்தரவிட்ட விவகாரங்களை அடுத்து தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார சக்தியாக இருக்கும் தாய்லாந்தின் அரசியல் முட்டுக்கட்டை தீவிரம் அடைந்ததாக அவதானிகள் விபரிக்கின்றனர்.
அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் அழுத்தங்களுக்கு பயந்து தமது அரசு பதவி விலகாது என்று இடைக்கால ஜனாதிபதி நிவட்டம்ரொங் பு+ம்சொங்பைசான் கடந்த திங்கட்கிழமை வலியுறுத்தி இருந்தார்.
தாய்லாந்து முன்னாள் பிரதமராக இருந்த யிங்லுக்கின் சகோதரர் தக்சின் சினவாத்ரா கடந்த 2006 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் அங்கு அதிகாரப்போட்டி நீடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பல சந்தர்ப்பங்களிலும் ஏற்பட்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் உயிர்ப்பலிகளுடன் முடிவடைந்துள்ளன.
தற்போதைய பதற்ற நிலை கடந்த ஆண்டில் தாய்லாந்து தலைநகரில் ஆரம்பமானது. இதன்போது அரச எதிர்ப்பாளர்கள் தலைநகரின் பல பகுதிகளையும் முடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து யிங்லுக் கடந்த பெப்ரவரியில் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். இதில் தலைநகருக்கு வெளியில் யிங்லுக்கிற் அதிக மக்கள் ஆதரவு இருப்பதால் அவரது ஆளும் கட்சியே தேர்தலில் வெற்றி பெறும்; என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் இந்த தேர்தலுக்கு அரசு எதிர்ப்பாளர்கள் இடையு+று செய்ததால் பொதுத் தேர்தல் இரத்துச் செய்யப்பட்டது. இதில் அதிகாரத்தை மக்களால் தேர்வுசெய்யப்படாத தலைவர்களிடம் கையளிக்குமாறே அரச எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். தலைநகரில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தினரே அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி யிங்லுக்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஆனால் எதிர்ப்பாளர்களின் கோரிக்கைக்கு அமைய அதிகாரத்தை மக்களால் தேர்வுசெய்யப்படாதோரிடம் கையளித்தால் நாட்டில் சிவில் யுத்தம் வெடிக்கும் என்று யிங்லுக்கிற்கு ஆதரவான 'சிவப்பு சட்டை' போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.
»»  (மேலும்)

5/16/2014

| |

இந்தியாவின்543 மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்குகிறது

இந்தியாவின் நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் 543 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது. முதல்கட்ட முடிவுகள் காலை 9.30க்குள் வெளியாகும் என்றும், முழு முடிவுகளும் மாலை 4 மணிக்குள் தெரியும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.நாட்டின் 16வது மக்களவைக்கான தேர்தல் 9 கட்டங்களாக நடத்தப்பட்டது. 543 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், நாடு முழுவதும் உள்ள 989 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இதற்கு அரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. காலை 9.30க்குள் முதல் கட்ட முடிவுகள் வெளியாகும். இதில், கட்சிகளின் முன்னணி நிலவரம் தெரிய வரும்.

பகல் 12 மணிக்குள் நாட்டை அடுத்து ஆளப் போகும் கட்சி எது என்பது தெளிவாகி விடும். மாலை 4 மணிக்குள் முழு தேர்தல் முடிவும் தெரிந்து விடும் என்று டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் தலைமை தேர்தல் ஆணை யர் சம்பத் தெரிவித்தார்.இந்த தேர்தல் முடிவுகளை நாடு முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர். முடிவுகளை மக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு தேசிய அளவில் தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும், பல்வேறு தொலைக்காட்சி சேனல்களும் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன. வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்களை தேர்தல் ஆணை யம் நியமித்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு வெளியிடப்பட்ட கருத்து கணிப் பில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங் களை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளதால், வெற்றியை கொண்டாடுவதற்கான மற்றும் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளில் அக்கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த தேர்தலில் களம் கண்டுள்ள பாஜ.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, முலாயம் சிங் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட மொத்தம் 8,251 வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி இன்று தெரிந்து விடும். காங்கிரஸ், பாஜ, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் போன்ற தேசிய கட்சிகளின் சார்பில் 1,591 வேட்பாளர்களும், 47 மாநில கட்சிகளின் சார்பில் 529 வேட்பாளர்களும், அங்கீகரிக்கப்படாத 1,600 கட்சிகளின் சார்பில் 2,897 வேட்பாளர்களும், 3,234 சுயேச்சைகளும் தேர்தலில் போட்டியிட்டு உள்ளனர்.தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 24ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. பாதுகாப்புக்காக தமிழகம் முழுவதும் 1,16,000 போலீசார், 27,000 சீருடை அணிந்த காவல் துறை அல்லாத போலீசார் என மொத்தம் 1 லட்சத்து 43,000 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைவரும் வாக்கு சாவடிகள் மற்றும் அதன் வெளிப்புறங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பதட்டமான வாக்குச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் போடப்பட்டிருந்தது. வாக்கு சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

சென்னையை பொருத்தவரை 22 ஆயிரம் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நாளை காலை வாக்கு எண்ணிக்கை பணி தொடங்க இருக்கிறது. தற்போது, லயோலா கல்லூரியில் மத்திய சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் பதிவான வாக்குகள் கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்திலும், வட சென்னையில் பதிவான வாக்கு எந்திரங்கள் ராணி மேரி கல்லூரியிலும் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல மாநிலம் முழுவதம் 42 இடங்களில் 39 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதோடு ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு மிஷின்கள், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பள்ளியில் எண்ணப்படுகின்றன.வாக்கு எண்ணும் மையங்களில், மத்திய போலீஸ் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. மேலும் மையங்களுக்கு வெளியேயும் ஏராளமான தொண்டர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் செல்போன், கேமரா, தீ பெட்டி, பட்டாசுகள், வெடி பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் என எதையுமே கொண்டு செல் லக் கூடாது என்று போலீ சார் எச்சரித்துள்ளனர். அதையும் மீறி யாராவது கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

தெரிவித்துள்ளார்.
New Delhi : Lok Sabha elections in 543 constituencies across the country in the counting of votes begins at 8 am today . Preliminary results released by 9:30 am and 4 pm manikl would never know the full results of the election commission said . Nation 's 16th Lok Sabha elections held on 9 stages . Electronic voting machines , comprising 543 seats vote , in 989 centers across the country have been tight security .
»»  (மேலும்)

| |

வீடு வீடாக திட்டத்தின் கீழான நடமாடும் சேவைகள்

திவிநெகும வாழ்வின் எழுச்சி திட்டம் திணைக்களமாக மாற்றப்பட்டதனை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கிராமம் கிராமமாக வீடு வீடாக திட்டத்தின் கீழான நடமாடும் சேவைகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுவருகின்றன.



இதன் கீழ் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் ஐந்தாவது நடமாடும் சேவை  களுதாவளை மத்திய மகா வித்தியாலயத்தில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்னம் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது 15க்கும் மேற்பட்ட திணைக்களங்கள் தமது திணைக்களங்களின் சேவைகளை மக்களின் காலடிக்கு கொண்டுவந்தனர். வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் 18  பத்து இலட்சம் ரூபா இலகு கடன்களும் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன் 35 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டதுடன் 25பேருக்கு காணிச்சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன. 

 1000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அவற்றில் 600க்கும் மேற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டதுடன் ஏனைய பிரச்சினைகளை உரிய அமைச்சுகளுக்கு கொண்டுசென்று தீர்வினைப்பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதேச செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்னம் தெரிவித்தார்.

இதன்போது விசேடமாக இதுவரையில் சட்ட ரீதியற்ற முறையில் வாழ்ந்த 13 சோடிகளுக்கு திருமணம் செய்யப்பட்டு அவர்களுக்கு திருமண சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இதன்போது 100க்கும் மேற்பட்டோர் பிறப்புச்சான்றிதல்களுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் 27பேர் மின்சார இணைப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் பிரதேச செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்னம் தெரிவித்தார்.

இந்த நடமாடும் சேவை மூலம் கிராம மட்டத்தில் உள்ளோர் பிரதேச செயலகங்களுக்கு சென்று தமது காலத்தினையும் நேரத்தினையும் வீணடிக்காத வகையில் அவர்களின் காலடிக்கு சென்று சேவைகள் வழங்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் திருமண பதிவுகளை செய்யும்போது வெளியில்செய்வதற்கு அதிகளவான பணம் செலவிடப்படுகின்றது.ஆனால் இங்கு மிகவும் குறைந்தளவிலான பணமே அறவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐந்தாவது தடவையாகவும் இந்த வாழ்வின் எழுச்சி நடமாடும்சேவை நடத்தப்படுவதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

»»  (மேலும்)

| |

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டுகாலம் தடை

இந்தியாவில் முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டுகாலம் தடை நீடித்து உள்துறை அமைச்சகம் நேற்று புதன்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தடை நீடிக்கப்படுவது வழக்கம். இதற்கான அறிவிப்பு மே மாதம் அல்லது ஜூன் மாதம் வெளியிடப்பட்டு வந்தன. 
2009ஆம் ஆண்டுக்கு இலங்கை இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகாலமாக இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்படவும் இல்லை. 

ஆனால் இலங்கை அரசு அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இயங்குவதாக கூறி அதன் ஆதரவு அமைப்புகளையும் தடை விதித்தது. இப்படியான தடையை நீக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தும் வருகின்றன. 

தற்போது இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருமா? வராதா என்ற நிலையில் அதுவும் நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் ஒரேயடியாக 5 ஆண்டுகாலத்துக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தடையை நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

5/15/2014

| |

கூடங்குளம் அணு உலையில் விபத்து: 6 பேர் காயம்

 தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 6 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.கூடங்குளம் அணு உலையில் விபத்து: 6 பேர் காயம்
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுஉலை 1ல் இருக்கும் டர்பைன் கட்டிடத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, அங்கிருந்த வால்வில் ஏற்பட்ட கசிவால், சுடு நீர் 6 பணியாளர்கள் மீது பட்டது. இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது.இந்த ஆறு பேரில் ராஜன், பவுல் ராஜ், செந்தில்குமார் ஆகியோர் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனின் ஊழியர்கள். ராஜேஷ், வினு, மகேஷ் ஆகிய மூன்று பேர் ஒப்பந்த ஊழியர்கள்.
இவர்கள் அனைவரும் முதலில் கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு உலை மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உதயகுமார் குற்றச்சாட்டு
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அணு உலைக்கான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சுப. உதயகுமார், "துவக்கத்திலிருந்தே இந்த அணு உலையில் தரமற்ற உதிரிபாகங்கள் பயன்படுத்தப்படுவது குறித்து எச்சரித்து வந்திருக்கிறோம். இப்போது இந்த விபத்து நடந்திருக்கிறது. இது குறித்து சார்பற்ற அறிவியல் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கோரிக்கைவிடுத்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளிவரவிருக்கும் நிலையில், இயங்காமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் அணு மின் நிலையத்தை மூடுவதற்காக இப்படி ஒரு விபத்தைப் பற்றி வெளிப்படையாகச் சொல்லப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக கூடங்குளம் அணுமின் நிலையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மே 12ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் பராமரிப்பிற்காக அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாகவும் 15ஆம் தேதி முதல் மின் உற்பத்தி துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

| |

42 வது இலக்கியச்சந்திப்பு பேர்ளின்

42 வது இலக்கியச்சந்திப்பு பேர்ளின்


            
    நிகழ்ச்சி நிரல் 
                    மே மாதம் 17 திகதி   2014  சனிக்கிழமை 
    இடம் : Werkstatt der Kulturen Wissmannstr  32 
                              12049   BERLIN
     
9:00 சுயஅறிமுகம்

9:30 என் கே ரகுநாதனின் “பனஞ்சோலைக்கிராமத்தின் எழுச்சி“ அறிமுகமும் விமர்சனமும்.  :-ஷோபாசக்தி

10:30 தெணியானின் "இன்னும்சொல்லாதவை " வாழ்பனுவங்கள் : சந்துஸ்

11:00 சாதியமும் சுயவிசாரணையும் : -  ஜீவமுரளி

11:30 "தலித்விடுதலையில் சாதியச்சாடல்கள்" அருந்ததியார் சமூகத்தை முன்வைத்து  :-என் சரவணன்
        நெறிப்படுத்தல் :- ராகவன்

13:00 மத்தியானச்சாப்பாடு

14:00 இடைநிலை”    :-  விஜயசாந்தன்
    திட்டமிடப்படாத உடலியல் செயற்பாட்டு அரங்க அளிக்கை

15:00  பாலியல் அரசியல்  :-  லிவிங் ஸ்மைல் வித்யா
      நெறிப்படுத்தல் :- ஹரி  ராஜலட்சுமி 

16:00 மலையகம் : “இருள்வெளிப்பயணம்!  :- மு. நித்தியானந்தன்
      ;.
17:00 2009 பின் இலங்கையில் சிறுபான்மையினர் : ரவுஃப் முகமட் காசிம்  Rauf Mohamed Cassim  
நெறிப்படுத்தல்: என் சரவணன்

18:00 சுமதியின் “இங்கிருந்து”  திரையிடலும் விமர்சனமும் 


                        மே 18 ம் திகிதி 2014 ஞாயிறு 

10:00  போரின் பின் பெண்கள் முகம் கொடுக்கும் சவால்கள் ( ஆய்வு அறிக்கையும் முன்மொழிவுகளும் : நளினி ரத்னராஜா - பால் நிலை சமத்துவ செயற்பாட்டாளர்

 நெறிப்படுத்தல்:- உமா

13:00 மத்தியானச்சாப்பாடு

14:00   நவதாரளவாதமும் புனரமைப்பும் மீளிணக்கமும் :- நிர்மலா ராஜசிங்கம்

15.00
மாகாணசபைகளும் சிறுபான்மை இனங்களின் எதிர்காலமும் :-  எம் ஆர் ஸ்ராலின்
             நெறிப்படுத்தல் :-தேவதாஸ் 

16:00 லீனா மணிமேகலையின் ” வெள்ளைவான் கதைகள்”
     திரையிடலும் விமர்சனமும்


வாசுகனின்  “அடையாளம்”  ஓவியக்கண்காட்சியும்                                                               தமயந்தியின் புகைப்படக்கண்காட்சியும்இடம்பெறும்

தொடர்புகளுக்கு
 42nd
தொலைபேசி

0049 15212861262
00493061627808

»»  (மேலும்)

5/14/2014

| |

களுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றவை என பெற்றோர் விசனம்

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட களுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு தரமற்றவை என பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேற்படி பாடசாலையில் வழங்கப்படுகின்ற உணவு சரியான சுகாதார முறையில் தயாரிக்கப்படவில்லை எனவும் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகவும் அதனால் உணவினை பல மாணவர்கள் சாப்பிடாமல் விடுவதாகவும் பெற்றோர் விசனம் குறிப்பிடுகின்றனர்.


நேற்றைய தினம்  (12.05.2014) வழங்கப்பட்ட நூடில்ஸ் மிக மோசமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக எமக்கு பெற்றோர் அறிவித்தனர். நாம் சென்று பார்வையிட்டபோது நூடில்ஸ் சரியாக அவியாமல் பச்சையாக வழங்கப்பட்டிருந்ததுடன் நூடில்ஸ்க்கு அதிகமாக மஞ்சள் போடப்பட்டிருந்ததையும் நாம் அவதானித்தோம்.

இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் வலயக்கல்வி அதிகாரிக்கு பெற்றோர் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மாணவர்களுக்கு தரமற்ற உணவுகளை வழங்கி பணம் சம்பாதிப்பவர்களுக்கு வலயக்கல்வி அதிகாரி துணைபோகின்றாரா எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
»»  (மேலும்)

5/08/2014

| |

தென் ஆபிரிக்காவில் தேர்தல்

தென் ஆபிரிக்காவில் இன்று புதன்கிழமை பொதுத் தேர்தல்  நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில்,  சுமார் 25 மில்லியன் மக்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

பாடசாலைகள்,  மதஸ்தலங்கள், பழங்குடிப் பகுதிகள், வைத்தியசாலைகள் ஆகியவற்றில் சுமார் 22,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, பின்தங்கிய பகுதிகளில் நடமாடும் வாக்குச் சாவடிகளாக வாகனங்கள் இயங்கும் எனவும் அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.  

தென் ஆபிரிக்காவில் 20 வருடங்களுக்கு முன்னர் நிறவெறி முடிக்கு கொண்டுவரப்பட்ட பின்னர்  நடைபெறும் 05ஆவது பொதுத் தேர்தல் இதுவாகும். 

இந்தத் தேர்தலில் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி ஜகோப் ஷுமா பதவிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

எவ்வாறாயினும், அங்கு நிலவும் அதிகளவிலான வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழல் ஆகியவற்றால் செல்வாக்கு குறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.  

மேற்படி தேர்தல் முடிவுகள் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
»»  (மேலும்)

| |

களுதாவளை கலாசார விளையாட்டு விழா 2014

களுதாவளை கலாசார விளையாட்டு விழா 2014
இன்று களுதாவளை பிரதோசத்தில் கலாசார விளையாட்டு விழா நிகழ்வுகள் இடம் பெற்றன . இங்கு எமது பாரம் பரிய விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றது. இன் நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின்  தலைவரும் கிழக்கு மாகாண  முன்னாள் முதல்வரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் மற்றம் கட்சியின் உறுப்பினர்களும் ,பொதுமக்களும்  கலந்து கொண்டனர்.

»»  (மேலும்)

5/05/2014

| |

சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 122ஆவது பிறந்த தின நிகழ்வு

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 122ஆவது பிறந்த தின நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றன.
மட்டக்களப்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுகள் மாநகர ஆணையாளர் மா. உதயகுமார் தலைமையில் நீதிமன்றத்திற்கு முன்பாக அமைந்துள்ள நீருற்றுப் பூங்கா  வளாகத்தில் நடைபெற்றன.
மாநகர ஆணையாளர், சுவாமி விபுலானந்தர் நாற்றாண்டு விழா சபைத் தலைவர் பேராசிரியர் மா. செல்வராசா, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே. தவராஜா, மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், சிவில் சமுகத் தலைவர் எஸ். மாமாங்கராஜா அகியோர் நீருற்றுப் பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர்.
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவிகளால் 'ஈசன் உவர்க்கும் மலர்கள்' எனும் அடியில் தொடரும் பாட்டு பாடப்பட்டது.
சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி கே. பிரேம்குமார், மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி அதிபர் சி.எஸ்.மாசிலாமணி, வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை அதிபர் கே.கனகசிங்கம், சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபைச் செயலாளர் எஸ். ஜெயராஜா, காசுபதி நடராஜா உடபட பலர் கலந்து கொண்டனர்.
»»  (மேலும்)

5/02/2014

| |

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சாவகச்சேரியில் நடைபெற்ற மேதினக்கூட்டத்தில் குழப்பம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்** சுயநல நாடகங்கள் அரங்கேறுகின்றன: விக்னேஸ்வரன்

 

இலங்கையின் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் மேதின கூட்டத்தில் ஆற்றிய உரையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் இருக்கும் கட்சிகள் சுயநலத்துடன் செயற்படுவதாகவும், அதனால், தமிழர்களின் பொது நன்மைகள் பின்னுக்குத்தள்ளப்படுவதாகவும் கவலை வெளியிட்டிருக்கிறார்.

தமிழர்களுக்கு இடையிலான ஒற்றுமையின்மையே அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்த அவர், உலகு தழுவிய அளவில் தொழிலாளர்களின் இன்றைய உரிமைகளை சாத்தியமாக்கியது தொழிலாளர்களுக்கு இடையிலான ஒற்றுமையே என்றும், அத்தகைய ஒற்றுமையையே தற்போது தமிழர்களும் தமது அரசியல் செயற்பாடுகளில் கடைபிடிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

சாவகச்சேரி மேதின நிகழ்வில்வடமாகாண முதலமைச்சர்  சி.வி.விக்கினேஸ்வரனை  கூட்டமைப்பு ஆதரவாளர்கள் சுற்றி வளைத்த நிலையில் அவர் அவசர அவசரமாக பொலிஸாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளார். 

சாவகச்சேரியில் நடைபெற்ற மேதினக்கூட்டத்தில் பங்கெடுத்து உரையாற்றிய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தன்னிட்சையாக செயற்பட்டார் என்று பொருள்பட பேசியதாக விளங்கிக் கொண்ட இளைஞர்கள் சிலர் தேர்தல் காலத்தில் பிரபாகரன் மாவீரன் இப்போது சர்வாதிகாரியா என கேள்வி எழுப்பினர்.அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் குத்துவெட்டுகளை அம்பலபடுத்தி பேசினார்.சாவகச்சேரியில் மேதின ஏற்பாட்டை செய்திருந்த மாகாணசபை உறுப்பினர் மற்றும் சிவாஜிலிங்கம் போன்றவர்களை சுற்றிவளைத்து பலரும் கேள்விகளை எழுப்பியதுடன் விமர்சனங்களையும் முன்வைத்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


 தனது உரையினை முடித்துக்கொண்டு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வெளியேற முற்படுகையில் மண்டபத்திற்கு வெளியே அவரை இளைஞர்கள் சிலர் சுற்றி வளைக்க முற்பட்டனர். யதார்த்தத்தினை புரிந்து கொண்ட அவரது பாதுகாப்பு பிரிவு பொலிஸார் அவசர அவசரமாக காரில் ஏற்றி அவரை வெளியேற்றினர்.
»»  (மேலும்)