தமிழ்-சிங்கள புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு- சந்திவெளி பிரதேசத்தில் விசேட சந்தையை ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
இதன்போது கிரான் பிரதேச செயலாளர் கே தனபாலசுந்தரம் சமுர்த்தி திட்ட மாவட் உதவி ஆணையாளர் பீ. குணரெட்ணம் பிரதேச சபையின் செயலாளர் சிஹாப்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.